பாலிகுளோரோ பீனாக்சி பீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரைகுளோசான்

பாலிகுளோரோ பீனாக்சி பீனால்கள் (Polychloro phenoxy phenols) என்பவை கரிம பல்லாலசனேற்ற சேர்மங்களின் குழுவைச் சேர்ந்த சேர்மங்களாகும். பாலிகுளோரினேற்ற பீனாக்சி பீனால்கள் அல்லது பல்குளோரினேற்ற பீனாக்சி பீனால்கள் என்ற பெயர்களாலும் இதை அழைப்பார்கள். இவற்றுள் டிரைகுளோசான் மற்றும் பிரிடையாக்சின் உள்ளிட்ட சில சேர்மங்கள் சிலவகை டையாக்சின்கள் மற்றும் பியூரான்களாக கீழிறக்கம் அடைகின்றன [1]. குறிப்பாக, டிரைகுளோசான் கீழிறக்கத்தால் உருவாகும் 2,8 டைகுளோரோ டைபென்சோ டையாக்சின்[2] மீன் கருமுட்டைகளில் நச்சுத்தன்மை இல்லாமல் காணப்படுகின்றன[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Formation of chloroform and chlorinated organics by free-chlorine-mediated oxidation of triclosan". Environ. Sci. Technol. 39 (9): 3176–85. 2005. doi:10.1021/es048943. பப்மெட்:15926568. 
  2. Latch, Douglas E.; Packer, Jennifer L.; Arnold, William A.; McNeill, Kristopher (2003). "Photochemical conversion of triclosan to 2,8-dichlorodibenzo-p-dioxin in aqueous solution". Journal of Photochemistry and Photobiology A: Chemistry 158: 63. doi:10.1016/S1010-6030(03)00103-5. 
  3. Wisk, Joseph D.; Cooper, Keith R. (1990). "Comparison of the toxicity of several polychlorinated dibenzo-p-dioxins and 2,3,7,8-tetrachlorodibenzofuran in embryos of the Japanese medaka (Oryzias latipes)". Chemosphere 20 (3–4): 361. doi:10.1016/0045-6535(90)90067-4. Bibcode: 1990Chmsp..20..361W.