கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலிகார்பனேட்டு (Polycarbonate) என்பது கார்பனேட்டு அலகுகளின் சங்கிலியைக் கொண்ட ஓர் ஆக்சோகார்பன் ஈரெதிர்மின் அயனியாகும். இங்கு அடுத்தடுத்த கார்பனைல் குழுக்கள் பகிரப்பட்ட கூடுதல் ஆக்சிசன் அணுக்களால் நேரடியாக ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. அதாவது, அவை பாலிகார்பானிக்கு அமிலங்களின் இணை காரங்கள் ஆகும். கார்பானிக்கு அமிலத்தின் கருத்தியல் நீரிலிகள் அல்லது கார்பன் டை ஆக்சைடின் பலபடிகளாகக் கருதப்படுகின்றன. இவை –O[(C=O)–O]n– என்ற கட்டமைப்பையும் [CnO2n+1]2– என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டையும் கொண்டுள்ளன.
கார்பனேட்டு ஈரெதிர்மின் அயனிகள் நன்கு அறியப்பட்டவையாக இருந்தாலும், பல உப்புகளில் காணப்படுவது போல, இதன் எசுத்தர்களைக் கொண்ட பல கரிம சேர்மங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தாய் கார்பானிக்கு அமிலமும் நன்கு அறியப்பட்டதாக இருந்தாலும், உயர் ஒப்புமைகள் கணிசமாக குறைந்த நிலைத்தன்மை கொண்டவையாகும். சகப்பிணைப்பு இருகார்பனேட்டு, முக்கார்பனேட்டு கட்டமைப்புகளும் அயனி இருகார்பனேட்டு உப்புகளின் சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. மேலும் இவற்றின் இணை அமிலங்கள் கோட்பாட்டளவில் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளன. n=6 வரையிலான பாலிகார்பனேட்டுகள் கோட்பாட்டளவில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஈரெதிர்மின் அயனிகள் சிற்றுறுதி கொண்டவை மட்டுமே, ஆனால் உலோக எதிர் அயனிகளுடன் அல்லது அவற்றின் இணை அமிலங்களாக இணைக்கப்படும்போது நிலைப்படுத்தப்படுகின்றன.[1]
டை-டெர்ட்டு-பியூட்டைல் டிரைகார்பனேட்டு பல்வேறு வினையூக்கிகளின் முன்னிலையில் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி டை-டெர்ட்-பியூட்டைல் டைகார்பனேட்டை உருவாக்குகிறது.[2] நீண்ட சங்கிலி கார்பன் டை ஆக்சைடு சில்படிமங்களும் இதேபோல் வெளிப்புற வெப்ப உமிழ்வுடன் சிதைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[3]
↑Lewars, Errol (1996). "Polymers and oligomers of carbon dioxide: ab initio and semiempirical calculations". Journal of Molecular Structure: THEOCHEM363 (1): 1–5. doi:10.1016/0166-1280(95)04420-5.