பாலிகலக்டோயுறேனசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலிகலக்டோயுறேனசு

பாலிகலக்டோயுறேனசு என்கிற நொதி தக்காளி கனியில் (பழத்தில்) மட்டும் வெளிப்படும். இவைகளில் மரபணு பகுதி மற்ற பாகங்களில் இருந்தாலும், இவைகளின் வெளிபாடு கனியில் மட்டும் செயல்படுபவையாக உள்ளன. உச்ச வெளிப்பாட்டுக்கு முழு அளவிலான தொடரி (Promoter) வரிசையும், நிறைரி வரிசையும் தேவைபடுகின்றன. தொடரி 4 kb யும் நிறைரி 1.8 kb யும் வரிசைகளை கொண்டுள்ளது. இந் நொதியின் செயல்பாட்டால் தான் தக்காளி காய், கனியாக மாற்றப்படுகிறது. இக்கண்டுபிடிப்பால் பல நன்மைகள் நமக்கு உள்ளன.

தக்காளியெய் கனிய வைப்பதற்கு பாலிகலக்டோயுறேனசு (Polygalactouronase) என்கிற நொதி மிக முக்கியம். இவைகளின் மரபு வரிசைகள் பயிரின் பல பாகங்களில் இருந்தாலும், பழத்தில் மட்டும் வெளிப்படுவது இதனின் தனி சிறப்பு.

பயன்கள்:[தொகு]

இவ் மரபணு தக்காளி பழத்தில் மட்டும் வெளிப்படும் என்பதால், பல நன்மைகளை மாந்தருக்கு தருகிறது. தக்காளி பழம் வெகு விரைவில் கனிந்து அழுகி விடுகின்றன. இதனால் வேளாண்மை புரிபவர்களுக்கு பலத்த இழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு மாற்றும் (போக்குவரத்து) போது ஏற்படும் சேதங்களினால் பெருத்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதனை தவிர்ப்பதற்கு, மரபு தொழில் நுட்பவியல் மூலம் பாலிகலக்டோயுறேனசு வெளிபடுதலை கட்டுக்குள் கொண்டுவரலாம். செயற்கை முறையில் நாம் பாலிகலக்டோயுறேனசு எதிராக சிறு ஆர். என். ஏ (siRNA) வெளிப்படுத்த கூடிய அமைப்புகள் (constructs) மூலம் மரபணு வெளிப்படுதல் கட்டுக்குள் கொண்டு வரப்படும். இதனால் காயில் இருந்து கனிவதை கால நீட்சியாக்கலாம். பின் ஏற்றுமதி செய்யப்பட்டு, செயற்கை முறையில் தெளிக்கப்படும் எத்திலீன் என்னும் சுரப்பியால் (Hormone) கனிய வைக்கப்படும்.

பொதுவாக கனியில் மட்டும் வெளிப்படும் மரபணுவால் மற்றொரு பெரிய நன்மை உள்ளது. பல தீ நுண்மங்களின் நோயெய் அழிக்க நமது ஊரில் கொடுக்கப்படும் சொட்டு மருந்துகள் (vaccination for small pox and polio) நினைவில் கொள்ளுங்கள். சொட்டு மருந்தாக கொடுக்கப்படும் நீரில் செயலற்ற முழு நுண்மங்களோ (inactivated virus particles) அல்லது நுண்மத்தின் ஒரு புரதமாக அமைக்கப்பட்டு இருக்கும் . மேலும் இவைகள் நமது உடலில் நோய் எதிப்பு தன்மை கொடுக்கும் மனனம் உயிரணுக்களை தூண்டுபவையாக இருக்கும் ( it should induce humoral and cellular mediated immunity response as well as memory cells). நோய் எதிர்ப்பு மற்றும் மனனம் செல்களை தூண்டும் புரதத்தின் மரபணு பகுதியெய் கனியில் அல்லது உண்ணக்கூடிய பயிரின் பாகங்களில் வெளிப்படுத்த, கனியில் மட்டும் வெளிப்படும் அல்லது மற்ற உண்ணும் பாகங்களில் மட்டும் வெளிப்படும் மரபணுவின் தொடரியெய் (fruit specific promoter or tissue specific promoter) கொண்டு வெளிப்படுத்தலாம். பின் இவைகளை நாம் உண்ணும் போது, நமது உடலில் ஒரு குறிபிட்ட நோய்க்கு, நோய் எதிர்ப்பு தன்மையெய் நாம் பெறலாம். இவைகளை மருந்து உணவு (edible vaccine) என அழைக்கப்படும். மதுரை காமராசர் பலகலைகழகத்தில் பணிபுரியும் பேரா. உசா அவர்கள், டைபாய்ட் (typhoid) என்னும் காய்ச்சல் அல்லது வெப்பு நோய்க்கு தக்காளி மருந்து உணவு உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

மேற்கோள்கள்:[தொகு]

C. J. S. Smith, C. F. Watson, J. Ray, C. R. Bird, P. C. Morris, W. Schuch & D. Grierson (1988). Antisense RNA inhibition of polygalacturonase gene expression in transgenic tomatoes. Nature 334, 724 - 726

கலைச்சொற்கள்:[தொகு]

நிறைரி வரிசை- terminator sequence

மருந்து உணவு- edible vaccine

தொடரி- Promoter

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிகலக்டோயுறேனசு&oldid=2742764" இருந்து மீள்விக்கப்பட்டது