பாலா, கேரளம்
பாலா | |
|---|---|
நகராட்சி[1] | |
பாலா நகரம் | |
| ஆள்கூறுகள்: 9°42′47″N 76°41′00″E / 9.71306°N 76.68333°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | கோட்டயம் |
| அரசு | |
| • வகை | நகராட்சி |
| • நிர்வாகம் | பாலா நகராட்சி |
| • நகரமன்றத் தலைவர் | காலி |
| • சட்டமன்ற உறுப்பினர் | மணி சி. கப்பன் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 16.06 km2 (6.20 sq mi) |
| ஏற்றம் | 31 m (102 ft) |
| மக்கள்தொகை (2011)[2] | |
| • மொத்தம் | 22,056 |
| • அடர்த்தி | 1,400/km2 (3,600/sq mi) |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 686573, 686574, 686575 |
| தொலைபேசி குறியீடு | +9148 22 |
| வாகனப் பதிவு | KL 35, KL 67 |
| அருகில் உள்ள நகரம் | கோட்டயம் |
| சட்டப் பேரவைத் தொகுதி | பாலா |
| மக்களவைத் தொகுதி | கோட்டயம் |
பாலா (Pala, IPA: [paːlaː] ) என்பது கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும்.[3][4][5] இது மாவட்டத் தலைமையகமான கோட்டயத்திற்கு வடக்கே சுமார் 28 கி.மீ (17.4 மைல்) தொலைவிலும், மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு வடக்கே சுமார் 167 கி.மீ (103.8 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. பாலா மீனச்சில் வட்டத்தின் தலைமையகமாகவும் செயல்படுகிறது. [6] 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, பாலாவின் மக்கள் தொகை 22,056 ஆகவும், மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1,373 நபர்களாகவும் (சதுர மைலுக்கு 3,560 நபர்கள்) உள்ளது. .
பாலா மீனச்சில் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மேலும் இது கேரளத்தில் சிரியன் கிறிஸ்தவ பண்பாட்டின் முக்கிய மையமாக உள்ளது. [7]
மக்கள்வகைப்பாடு
[தொகு]2001[update] ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, [8] பாலாவின் மக்கள்தொகை 22,640 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 49% ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 51% என்ற விகிதத்தில் உள்ளது. பாலாவின் சராசரி எழுத்தறிவு விகிதம் 98% ஆகும். இது தேசிய சராசரியான 73% ஐ விட அதிகம். ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 98.5% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 97.8% என்றும் உள்ளது. இது மாநில சராசரியை விட கூடுதலாகும். மக்கள்தொகையில் 10% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள். மக்கள்தொகையில் கிறிஸ்தவர்கள் 65.09% ஆகவும், இந்துக்கள் 34.19% ஆகவும், முசுலிம்கள் 0.1% ஆகவும், பிற சமயத்தின் 0.05% ஆகவும், தங்கள் சமயத்தைக் குறிப்பிடாதவர்கள் 0.15% என்றும் உள்ளனர்.
அரசியல்
[தொகு]1949 திசம்பர் முதல் நாளன்று பாலா நகராட்சியாக முறையாக தரம் உயர்த்தப்பட்டது. [9] இடதுசாரி சனநாயக முன்னணி ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் 17 கவுன்சிலர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய சனநாயக முன்னணி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் தியா பினு புலிக்ககண்டம் பதவி நீக்கம் செய்யப்பட்டதால், பாலா நகராட்சியின் தற்போதைய தலைவர் பதவி காலியாக உள்ளது. [10] நகராட்சியின் துணைத் தலைவர் மாயா ராகுல், மற்றொரு இடதுசாரி சனநாயக முன்னணியின் ஆதரவு பெற்ற சுயேச்சை ஆவார். [11] [12]
பாலா கோட்டயம் மக்களவைத் தொகுதிக்கும், பாலை சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. இதன் சட்டமன்ற உறுப்பினராக மணி சி கப்பனும், மக்களவை உறுப்பினராக கே. பிரான்சிஸ் ஜார்ஜும் உள்ளனர்.
விளையாட்டு
[தொகு]பாலாவில் உள்ள நகராட்சி விளையாட்டு அரங்கம் விளையாட்டு நடவடிக்கைகளின் மையமாகத் திகழ்கிறது. [13]
2017-ஆம் ஆண்டில், 61-வது கேரள மாநிலப் பள்ளி அளவிலான தடகளப் போட்டிகள் இவ்விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. [14] இப்போட்டியில் 100 பள்ளிகளைச் சேர்ந்த குறைந்தது 2,500 மாணவர்கள் கலந்துகொண்டனர். [15] 63-வது கேரள மாநிலத் தடகளப் போட்டியும் அக்டோபர் 2019-இல் இதே அரங்கில் நடைபெற்றது. [16]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Grama Panchayaths" (PDF). Archived from the original (PDF) on 2018-04-17.
- ↑ "Kerala (India): Districts, Cities and Towns - Population Statistics, Charts and Map".
- ↑ "Grama Panchayaths" (PDF). Archived from the original (PDF) on 2018-04-17.
- ↑ "Pala PS | Kottayam District, Government of Kerala | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-08-09.
- ↑ "Pala". maps.apple.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-08-09.
- ↑ "Revenue Portal". landrevenue.kerala.gov.in. Retrieved 2026-04-19.
- ↑ "Pala- A Rurban Town in Kerala | CEPT - Portfolio". Archived from the original on 2024-05-20. Retrieved 2025-03-18.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
- ↑ "പാലാ നഗരസഭയ്ക്ക് 76 വയസ്; മട്ടന്നൂർ പോലെ പാലായിലും വേറിട്ട തിരഞ്ഞെടുപ്പ്". പാലാ നഗരസഭയ്ക്ക് 76 വയസ്; മട്ടന്നൂർ പോലെ പാലായിലും വേറിട്ട തിരഞ്ഞെടുപ്പ് (in மலையாளம்). Retrieved 2026-04-19.
- ↑ "Six months of UDF rule in Kerala’s Pala municipality ends with ouster of chairperson Diya Binu". https://www.thehindu.com/news/national/kerala/six-month-udf-rule-in-keralas-pala-municipality-ends-with-ouster-of-chairperson-diya-binu/article71248506.ece.
- ↑ "UDF secures power in all six municipalities in Kottayam". https://www.thehindu.com/news/national/kerala/udf-secures-power-in-all-six-municipalities-in-kottayam/article70440414.ece.
- ↑ Daily, Keralakaumudi. "Late twist in Pala: Maya Rahul demands chairperson post, Pulikkakandam family not yielding either". Keralakaumudi Daily (in ஆங்கிலம்). Retrieved 2026-04-19.
- ↑ "Municipal Stadium". Pala Municipality.
- ↑ "State School sports meet to begin tomorrow; Rally carrying torch reaches Pala". https://english.mathrubhumi.com/sports/sports-news/state-school-sports-meet-to-begin-tomorrow-rally-carrying-torch-reaches-pala-athletics-1.2322245.
- ↑ "Stage set for Kerala schools athletics meet but field wide open". https://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/stage-set-for-kerala-schools-athletics-meet-but-field-wide-open/articleshow/61148689.cms.
- ↑ "Kerala state junior athletics: Young stars get chance to make big.". https://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/kerala-state-junior-athletics-young-stars-get-chance-to-make-big/articleshow/71435075.cms.