பாலாடைக்கட்டி பாயாசம்
| மாற்றுப் பெயர்கள் | சேனா கீரி,சேனா கீர் |
|---|---|
| பரிமாறப்படும் வெப்பநிலை | ஈற்றுணவு |
| தொடங்கிய இடம் | ஒடிசா |
| பகுதி | ஒடிசா, இந்தியா |
| பரிமாறப்படும் வெப்பநிலை | சூடான மற்றும் குளிர்ந்த வெப்பநிலை |
| முக்கிய சேர்பொருட்கள் | தெளிந்த பாலாடைக்கட்டி, நெய், சீனி |

பாலாடைக்கட்டி பாயாசம் (Chhena kheeri) என்பது கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள ஒடிசாவின் கடலோரப் பகுதியிலிருந்து தோன்றிய ஒரு இனிப்புப் பண்டம் ஆகும். இது பாயாசம் போன்றதாகும். சேனா கீரி, சேனாகீர் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.[1]
செய்முறை
[தொகு]சேனா எனப்படும் பாலாடைக்கட்டித் துண்டுகளை எண்ணெயில் பொரித்தெடுப்பதன் மூலம் பாலாடைக்கட்டி பாயாசம் செய்யப்படுகிறது. பொதுவாக இவற்றை பொரிப்பதற்கு நெய் பயன்படுத்தப்பட்டாலும், சமையல் கலைஞர்கள் பெரும்பாலும் அதற்கு மாற்றாகத் தாவர எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். பொரித்தெடுத்த பாலாடைக்கட்டித் துண்டுகளைப் பாலும் சர்க்கரையும் கலந்த கலவையில் சேர்த்து, பாலின் அளவு சற்று வற்றி, அந்தப் பண்டம் 'இரப்டி' போன்ற கெட்டியான பதத்தை அடையும் வரை நன்கு கொதிக்க விடுகின்றனர். பரிமாறுவதற்கு முன், இக்கலவையில் ஏலக்காய்,குங்குமப்பூ மற்றும் உலர்ந்தபருப்பு வகைகள் சேர்க்கப்பட்டுச் சுவையூட்டப்படுகிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chenna Kheeri / Chhena Kheeri – Indian Milk Sweet Recipes". Gayathri's Cook Spot (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-04-23. Retrieved 2021-04-20.