பாலாசாகேப் சிவராம் பார்தே
பாலாசாகேப் பார்தே | |
|---|---|
| பிறப்பு | 1912 ஷேவ்கான், அகமதுநகர் மாவட்டம், மகாராஷ்டிரம், இந்தியா |
| இறப்பு | 22 நவம்பர் 2006 புனே, மகாராஷ்டிரம், இந்தியா |
| பணி | இந்திய சமூக சேவகர் அரசியல்வாதி சுயேச்சைச் செயல்பாட்டாளர் |
| அறியப்படுவது | கூட்டுறவு இயக்கம் சமூக சேவை |
| பிள்ளைகள் | ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகள் |
| விருதுகள் | பத்ம பூஷண் (2001) |
பாலாசாகேப் சிவராம் பார்தே (Balasaheb Bharde) (1912–2006) - இவர் 'திரிம்பக்'[1] என்றும் அழைக்கப்பட்டார் - இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சேவகர், கல்வியாளர், மகாராஷ்டிர[2][3] சட்டமன்றத்தின் சபாநாயகர் இவர். மகாராஷ்டிராவில் கூட்டுறவுத் துறை அமைச்சராக (1957–1962)[4][5] பணியாற்றியதன் மூலம், அம்மாநிலத்தின் கூட்டுறவு இயக்கத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவர் அறியப்பட்டார். காதி கிராமோத்யோக், ஹரிஜன் சேவக் சங், மகாராஷ்டிர காந்தி ஸ்மாரக் நிதி போன்ற பல்வேறு சமூக, அரசு அமைப்புகளுடன் வர் தொடர்புடையவராக இருந்தார்; காதி கிராமோத்யோக் அமைப்பின் தலைவராகவும், MGSN-இன் இரண்டாவது தலைவராகவும்[6] இவர் பணியாற்றினார். மேலும், மகாராஷ்டிர மாநில காதி வாரியத்தின் தலைவராகவும் இவர் செயல்பட்டார்.[7]
மகாராஷ்டிர மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷேவ்கான் என்ற சிறிய கிராமத்தில் 1912-இல் பிறந்த இவர், 1952[8] முதல் இரண்டு தசாப்த காலத்திற்கு மாநில சட்டமன்றத்தில் தனது சொந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்[7]. சமூகத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, 2001-ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய குடிமக்கள் விருதான 'பத்ம பூஷண்'[9] விருதை வழங்கி கௌரவித்தது. இவர் 2006-ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று புனேவில் தனது 94-வது வயதில் காலமானார். இவருக்கு மனைவியும், ஐந்து மகன்களும், ஓர் மகளும் இருந்தனர்[10][11]. ஷேவ்கானில் உள்ள பல கல்வி நிறுவனங்களுக்கும், ஓர் பொது நூலகத்திற்கும் பார்தேவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[12]
மேலும் பார்க்கவும்
[தொகு]- மகாராஷ்டிர சட்டமன்றம்
- இந்தியா இணையதளம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CM condoles demise of Balasaheb Bharde". One India. 22 November 2006. Retrieved 29 May 2016.
- ↑ "CM condoles demise of Balasaheb Bharde". One India. 22 November 2006. Retrieved 29 May 2016.

- 1 2 "CM condoles demise of Balasaheb Bharde". One India. 22 November 2006. Retrieved 29 May 2016.