பாலமேடு ஜல்லிக்கட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலமேடு ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு என்னும் ஊரில் ஆண்டுதோறும் பொங்கல் நிகழ்ச்சியைக் கொண்டாடும் பொருட்டு நடத்தப்படும் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று ஆகும். இவ்வூரில் நடக்கும் இவ் விளையாட்டைக் காண பல ஊர்களிலிருந்து ஏராளமான பொதுமக்களும், வெளி நாட்டு பயணிகளும் வந்து கூடுவது ஆண்டுதோறும் வழக்கம். இதனை ஏறுதழுவல் என்றும் அழைப்பர். 500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வீர விளையாட்டு இருந்தற்கான சான்றுகள் கிடைத்துள்ளன[1].

வீரர்கள்[தொகு]

மாடுபிடிக்கும் வீரர்களுக்குச் சமீபகாலமாக சீருடைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு இங்கு நடந்த ஜல்லிக்கட்டில் மஞ்சள் நிறத்தில் மேலாடையும், நீல நிறத்தில் கால் சட்டையும் சீருடையாக இருந்தது. சீருடை அணிந்து வீரர்கள் மக்களின் ஆரவாரத்திற்கிடையே தடுப்பினுள் தயாராக இருப்பார்கள். "வாடிவாசல்" என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து காளைகள் விரட்டிவிடப்படும். அதன் கொம்புகள் நேர்த்தியாக சீவப்பட்டு அதன் மேல் நாணயங்கள் கட்டப்பட்ட பொதி ஒன்றையும் கொம்பில் சுமந்து ஆக்ரோசமாக விரைந்து வரும். அக்காளைகளின் திமிலை வீரர்கள் லாவகமாக பிடித்து அடக்குவார்கள்.

பரிசுப் பொருட்கள்[தொகு]

மாட்டை அடக்கும் வீரர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைத்ததாக வரலாறு கூறினாலும், தற்போது தங்க நாணயங்களோடு மிதிவண்டிகள், மிக்சிகள், கைபேசிகள், பாத்திரங்கள், வயர் பின்னப்பட்ட கட்டில்கள், அலமாரிகள் போன்றவையும் பரிசாக கொடுக்கப்படுகிறது.[2]

காளைகள்[தொகு]

இங்கு வரும் காளைகள் இந்த ஊரிலிருந்து மட்டுமின்றி மதுரை மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், தேனி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் போன்ற மாவட்டங்களில் உள்ள ஊர்களிலிருந்தும் வந்து போட்டியில் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]