மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாலமுரளிகிருஷ்ணா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எம். பாலமுரளிகிருஷ்ணா
M. Balamuralikrishna
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா
பிறப்பு(1930-07-06)6 சூலை 1930
சங்கரகுப்தம், கிழக்கு கோதாவரி மாவட்டம்,
சென்னை மாகாணம் (இன்றைய ஆந்திரப் பிரதேசம்)
இறப்பு22 நவம்பர் 2016(2016-11-22) (அகவை 86)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)வியோலம்
மிருதங்கம்
கஞ்சிரா
இசைத்துறையில்1938–2016

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (Mangalampalli Balamuralikrishna, தெலுங்கு: మంగళంపల్లి బాలమురళీకృష్ణ, சூலை 6, 1930 - நவம்பர் 22, 2016) ஒரு இந்திய கருநாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர், குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார்.[1]

தென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமையுடன் விளங்கியவர்.

இளமைப் பருவம்[தொகு]

முரளிகிருஷ்ணா கிழக்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள சங்கர குப்தம் எனும் ஊரில் பிறந்தார். இசைக் கலைஞர்களான பட்டாபிராமையா - சூர்யகாந்தம்மா ஆகியோர் இவரது பெற்றோராவர். இவரது தந்தை பட்டாபிராமையா ஒரு புல்லாங்குழல் வித்வான். தாயார் வீணை வாசிப்பார். இவரது தாத்தா கூட ஒரு இசைக்கலைஞர்தான்.

தியாகராஜரின் மாணவர் பரம்பரையில் 4ஆவதாக வந்தவர் எனும் பெருமை பாலமுரளிகிருஷ்ணாவுக்கு உண்டு. தியாகராஜரின் நேரடி மாணவர், மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர். அவரிடமிருந்து தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலு என பரம்பரை தொடர்ந்தது. பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலுவிடம் பாலமுரளிகிருஷ்ணா முறையாக கருநாடக இசை கற்றார்.[2]

முரளிகிருஷ்ணா முதன்முதலாகத் தனது ஒன்பதாவது வயதில் இசைக்கச்சேரி செய்தார். தனது சிறு வயதிலேயே இசை மேதை எனப் பெயர் பெற்றார். ஹரிகதை மேதை முசூநுரி சூர்யநாராயண மூர்த்தி இவருக்கு பால என்ற பெயரை சேர்த்து அழைத்ததன் பின்னர் பாலமுரளிகிருஷ்ணா என அழைக்கப்பட்டார். சென்னை அனைத்திந்திய வானொலி, இவர் ஒரு குழந்தைக் கலைஞராக இருந்தபோதே தனது முதல்தர இசைக் கலைஞர் பட்டியலில் (A Grade) இவரையும் சேர்த்தது.[3]

திருவையாறு தியாகராஜ சுவாமி உற்சவத்தில் தனது பதினோராவது வயதிலேயே ஒன்றரை மணி நேரம் பாடியிருக்கிறார். இவருக்காக பெரிய இசை வித்வான்களாகிய பெங்களூர் நாகரத்தினம்மாள், அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோர் தங்கள் நேரத்தை விட்டுக் கொடுத்தார்கள்.[4]

கருநாடக இசைக்கான பங்களிப்புகள்[தொகு]

பாடகராக[தொகு]

2006ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று குவைத்தில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய கச்சேரி. அப்போது அவருக்கு வயது 76.

தனது வாழ்நாளில் ஏறத்தாழ 25,000 கச்சேரிகளை உலகம் முழுவதும் நிகழ்த்தினார்.[5]

தூர்தர்சன் தொலைக்காட்சியின் புகழ்மிக்க காணொளிப் பாடலான மிலே சுர் மேரா தும்ஹாரா எனும் பாடலில் பாலமுரளிகிருஷ்ணா பங்களித்தார். இந்த தேசபக்திப் பாடலில், தமிழ்ப் பாடல் வரிகளை இவர் பாடினார்.

வயலின் இசைக் கலைஞராக[தொகு]

அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் சந்தானம், ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகிய முன்னணிக் கலைஞர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருந்தார்.[6]

பாலமுரளிகிருஷ்ணா தனது தந்தை வயலின் வாசிப்பதை கவனித்து வந்து வயலின் வாசிப்பினை கற்றுக் கொண்டவர். தனது இளம்பிராய வயதில், குரல் மாறி பாடுவதற்கு கடினமாக இருந்த காலத்தில் அதிகளவு வயலின் வாசித்து நன்கு கற்றுக் கொண்டார்.

வயோலா, புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் எனும் வாத்தியங்களை இசைக்கும் திறன் கொண்டவராகவும் இருந்தார்.

வாக்கேயக்காரராக[தொகு]

இவர் 72 மேளகர்த்தா உருப்படிகள் உருவாக்கம் செய்திருக்கிறார். மற்றவர்கள் இதுவரை உருவாக்கி எடுத்தாளாத இராகங்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.

சுமூகம் (நான்கு சுவரங்கள் கொண்ட ராகங்கள்), மகதி (நான்கு சுவரங்கள்), சர்வஸ்ரீ (மூன்று ), ஓம்காரி (மூன்று சுவரங்கள்), பிரதிமத்தியமாவதி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே போன்ற ராகங்களை உருவாக்கினார்.

இயற்றிய கீர்த்தனங்கள்[தொகு]

கீர்த்தனை ராகம் வகை குறிப்புகள்
ஓங்கார ப்ரணவ சண்முகப்பிரியா பத வர்ணம்
அம்மா அனந்த தாயினி கம்பீரநாட்டை பத வர்ணம்
ஏ நாதமு நாட்டை வர்ணம்
சலமு சேசின ராமப்பிரியா வர்ணம்
ஆ பால கோபாலமு அமிர்தவர்ஷினி வர்ணம்
நினு நேர நம்மதி கரஹரப்பிரியா வர்ணம்
ஸ்ரீ சகல கணாதிப பாலயமாம் ஆரபி கிருதி கணபதி, மாருதி, கிருஷ்ணா மீது மூன்று பல்லவிகள்
மகாதேவசுதம் ஆரபி கிருதி கணபதி மீது
கங் கங் கணபதீம் கணபதி கிருதி கணபதி மீது - ச, க, ப என்ற மூன்று ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்
கணாதிபாம் நாட்டை கிருதி கணபதி மீது
பிறை அணியும் பெருமான் ஹம்சத்வனி கிருதி கணபதி மீது
உமா சுதம் நமாமி சர்வஸ்ரீ கிருதி கணபதி மீது - ச, ம, ப என்ற மூன்று ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்
மஹநீய நமசுலிவே சுமுகம் கிருதி கணபதி மீது - ச, ரி, ம, நி ஆகிய ஸ்வரங்களைக் கொண்ட ராகம்
ஓங்கார காரிணி லவங்கி கிருதி ச, ரி, ம, த என்ற நான்கு ஸ்வரங்களைக் கொண்ட ராகம்
சித்தி நாயகனே அமிர்தவர்ஷினி கிருதி கணபதி மீது
சித்திம் தேஹி மே சித்தி கிருதி கணபதி மீது - ச, ரி, த என்ற மூன்று ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்
ஹீர கணபதிக்கி சுருட்டி கிருதி கணபதி மீது
மஹநீய மதுர மூர்த்தே மஹதி கிருதி குரு வந்தனம் - ச, க, ப, நி என்ற நான்கு ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்
குருநி ஸ்மரிம்புமோ ஹம்சவிநோதினி கிருதி குரு வந்தனம்
வருக வருக பந்துவராளி கிருதி முருகன் மீது
துணை நீயே சாருகேசி கிருதி முருகன் மீது
நீ தய ராதா பூர்விகல்யாணி கிருதி அம்பிகை மீது
கதி நீவே கல்யாணி கிருதி அம்பிகை மீது
சிவ கங்கா நாகஸ்வராளி கிருதி அம்பிகை மீது
மா மாநினி ஹனுமதோடி கிருதி அம்பிகை மீது ஸ்வர சாகித்யம்
அம்ம நின்னுகோரி கமாஸ் கிருதி அம்பிகை மீது
கான மாலிஞ்சி கல்யாண வசந்தம் கிருதி அம்பிகை மீது
சதா தவ பாத சண்முகப்ரியா கிருதி சிவன் மீது
ப்ருஹதீஸ்வர கானடா கிருதி தஞ்சாவூர் பிருகதீஸ்வரர் மீது
திரிபுர தர்ப்பா சிவன் மீது மங்களம்
கமல தலாயதா பஹுதாரி கிருதி நேத்ர சௌந்தர்யா மீது
தில்லானா பிருந்தாவனி தில்லானா
தில்லானா சக்கரவாகம் தில்லானா
தில்லானா த்வஜாவந்தி தில்லானா தமிழ் சரணம்
தில்லானா குந்தவராளி தில்லானா தமிழ், தெலுங்கு சரணம்
தில்லானா கதனகுதூகலம் தில்லானா
தில்லானா கருடத்வனி தில்லானா பாணிணி சூத்ர மேற்கோள்
தில்லானா பெஹாக் தில்லானா ஸ்ரீ தியாகராஜர் மீது
தில்லானா ராகமாலிகை தில்லானா அமிர்தவர்ஷினி, மோகனம், கானடா, ஹிந்தோளம்
தில்லானா ராகமாலிகை தில்லானா தயா ராகமாலிகை, ஸ்ருதி பேதத்தை அடிப்படையாகக் கொண்டது
தில்லானா ராகமாலிகை தில்லானா பஞ்ச ப்ரியா ராகங்கள், கதி பேதத்துடன்
மாமவ கான லோலா ரோஹினி கிருதி இரண்டு மத்யமத்தைக் கொண்ட ராகம்
கான லோல ராகமாலிகை கிருதி திருப்பதி வேங்கடேசர் மீது
சங்கீதமே கல்யாணி கிருதி இசையைப் பற்றியது
நீ சாதி நீவே சந்திரிகா கிருதி ரங்கநாதர் மீது
சங்கராபரண சயனுதா தீரசங்கராபரணம் கிருதி ரங்கநாதர் மீது
வேகமே ஆபோகி கிருதி ரங்கநாதர் மீது
ஹனுமா சரசாங்கி கிருதி அனுமான் மீது
வந்தே மாதரம் ரஞ்சனி கிருதி பாரத மாதா மீது
கான சுதா ரச நாட்டை கிருதி ஸ்ரீ தியாகராஜர் மீது
சாம கண அமிர்தவர்ஷினி கிருதி ஸ்ரீ தியாகராஜர் மீது
மரகத சிம்ஹாசன சிம்மேந்திர மத்திமம் கிருதி யதகிரி நரசிம்மர் மீது
சிம்ஹ ரூப தேவா காம்போதி கிருதி நரசிம்மர் மீது
ராஜ ராஜ தீர சங்கராபரணம் கிருதி ஸ்ரீ ராகவேந்திரர் மீது
சிந்தயாமி சட்டதம் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதம் சுசரித்ர கிருதி முத்துசுவாமி தீட்சிதர் மீது
அம்பமாமவ ராகமாலிகை கிருதி ரஞ்சனி - நிரஞ்சனி - ஜனரஞ்சனி (ராகங்கள்)
பங்காரு முரளி ஸ்ரிங்கார ராவளி நீலாம்பரி கிருதி
பாவ மே மகா பாக்யமுரா காபி கிருதி ஸ்ரீ தியாகராஜரிலிருந்து பாலமுரளி கிருஷ்ணா வரை குரு பரம்பரை
பாஹி சமீர குமாரா மந்தாரி கிருதி பஞ்சமுக அனுமான் பற்றிய வர்ணனை
வசம தர்மாவதி கிருதி லலிதா தேவி மீது துதி

திரைப்படத்துறைக்கான பங்களிப்புகள்[தொகு]

பாலமுரளிகிருஷ்ணா தென்னிந்திய திரைப்படங்களுக்கு குறைவான பங்களிப்பினைத் தந்திருந்தாலும், அவை குறிப்பிடத்தக்கவையாக அமைந்திருந்தன.[7]

ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரின் வேண்டுகோளுக்கிணங்க, பக்த பிரகலாதா எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் தமிழ், இந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் வந்த வாய்ப்புகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.[4] பிற்காலத்தில் சந்தினே செந்தின சிந்தூரம் எனும் மலையாளத் திரைப்படத்தில் பாடகர் வேடத்தில் நடித்தார்.

பின்னணிப் பாடகராக[தொகு]

ஒரு பின்னணிப் பாடகராக தென்னிந்தியத் திரைப்படங்களில் பங்களித்தார். சதி சாவித்திரி எனும் தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலாக பாடினார். பின்னணிப் பாடகி பி. லீலா இவருடன் இணைந்து பல பாடல்களை பாடியிருக்கிறார்.

சுவாதித் திருநாள் எனும் மலையாளத் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல்களுக்காக, கேரள அரசின் விருது இவருக்குக் கிடைத்தது.

ஆண்டு திரைப்படம் மொழி பாடல் இசையமைப்பாளர் குறிப்புகள்
1964 கலைக்கோவில் தமிழ் தங்க ரதம் வந்தது வீதியிலே... விஸ்வநாதன்-ராமமூர்த்தி பி. சுசீலாவுடன்
1965 திருவிளையாடல் தமிழ் ஒரு நாள் போதுமா... கே. வி. மகாதேவன் மந்த இராகத்தில் தொடங்கும் இப்பாடல், பின்னர் தோடி, தர்பார், மோகனம், கனடா எனும் இராகங்களை உள்ளடக்கித் தொடரும் ஒரு இராகமாலிகை ஆகும்.
1966 சாது மிரண்டால் தமிழ் அருள்வாயே நீ அருள்வாயே... டி. கே. ராமமூர்த்தி
1970 கண்மலர் தமிழ் ஓதுவார் உன் பெயர் கே. வி. மகாதேவன் குழுவினருடன்
அம்பலத்து நடராஜா எஸ். ஜானகியுடன்
1977 கவிக்குயில் தமிழ் சின்னக் கண்ணன் அழைக்கிறான் இளையராஜா
உயர்ந்தவர்கள் தமிழ் ராமனும் நீயே சீதையும் சங்கர் கணேஷ்
நவரத்தினம் தமிழ் குருவிக்கார மச்சானே குன்னக்குடி வைத்தியநாதன் வாணி ஜெயராமுடன்; பாடலாசிரியர்: வாலி
தெலுங்கு பலுகு கண்ட வாணி ஜெயராமுடன்; பாடலாசிரியர்: நெல்லை அருள்மணி
1979 நூல் வேலி தமிழ் மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே... எம். எஸ். விஸ்வநாதன்
1983 மிருதங்க சக்கரவர்த்தி தமிழ் இது கேட்கத் திகட்டாத கானம் எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் வாலி
1991 சிகரம் தமிழ் பாஞ்சாலி கதருகிறாள்...' எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடலாசிரியர் வைரமுத்து
2009 பசங்க தமிழ் அன்பாலே அழகாகும் வீடு... ஜேம்ஸ் வசந்தன் குழந்தை கே. சிவாங்கியுடன்; பாடலாசிரியர் யுகபாரதி
2015 பிரபா தமிழ் பூவே பேசும் பூவே எஸ். ஜே. ஜனனி

இசையமைப்பாளராக[தொகு]

ஆதி சங்கராச்சாரியா (சமசுகிருத மொழியின் முதல் திரைப்படம்), இராமானுஜசார்யா, மத்வச்சாரியா ஆகிய திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தார்.

ஆலோசகராக[தொகு]

திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுக்கு இராகங்கள் குறித்து ஏதேனும் ஐயங்கள் ஏற்படும்போது இவரை நாடினர்.

எம். எஸ். விஸ்வநாதன் பாலமுரளிகிருஷ்ணாவை தனது இசையாசிரியராக கருதினார்; பலமுறை தனது ஐயங்களை தீர்த்துக் கொண்டார். கே. பாலசந்தர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தை இயக்கியபோது, அரிதான இராகத்தில் ஒரு பாடலை உருவாக்கித் தருமாறு கேட்டதும், எம். எஸ். விஸ்வநாதன் பாலமுரளிகிருஷ்ணாவை நாடி அவரின் உதவியினைப் பெற்றார். அதிசய இராகம்... ஆனந்த இராகம்... அழகிய இராகம், அபூர்வ இராகம் எனும் பாடல் மகதி இராகத்தில் உருவானது. க, ப, நி எனும் 3 சுவரங்களை மட்டுமே இப்பாடல் கொண்டிருந்தது.

இவரின் மாணவர்கள்[தொகு]

  1. பி. லீலா
  2. சரத் (மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர்)
  3. இசை ஆராய்ச்சியாளர் பி. எம். சுந்தரம்
  4. நடிகர் கமல்ஹாசன்[4]
  5. ஜெ. ஜெயலலிதா[4]
  6. நடிகை வைஜெயந்தி மாலா
  7. எஸ். பி. சைலஜா

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்[தொகு]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவருக்கு 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள்.

பாலமுரளி கிருஷ்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ராணிமைந்தன் என்பவர் எழுதியிருக்கிறார்.

மறைவு[தொகு]

பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக 2016 நவம்பர் 22 ஆம் நாள் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. பாலமுரளி கிருஷ்ணா
  2. "பழம்பெரும் கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா காலமானார்: கலையுலகினர் இரங்கல்". தி இந்து (தமிழ்). 23 நவம்பர் 2016. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article9374368.ece. பார்த்த நாள்: 23 நவம்பர் 2016. 
  3. பி. கோலப்பன் (22 நவம்பர் 2016). "Balamuralikrishna, maestro of Carnatic music, passes away". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161123110101/http://www.thehindu.com/news/national/Balamuralikrishna-maestro-of-Carnatic-music-passes-away/article16675506.ece. பார்த்த நாள்: 22 நவம்பர் 2016. 
  4. 4.0 4.1 4.2 4.3 "‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’". விகடன். 22-11-2016 இம் மூலத்தில் இருந்து 24-11-2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161124023322/http://www.vikatan.com/news/cinema/73182-memories-of-balamuralikrishna.art. பார்த்த நாள்: 24 நவம்பர் 2016. 
  5. "Veteran Carnatic singer M Balamuralikrishna passes away at 86, Twitter reacts". இந்துத்தான் டைம்சு. 22 நவம்பர் 2016 இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161123023003/http://www.hindustantimes.com/music/veteran-carnatic-singer-m-balamuralikrishna-passes-away-at-86/story-o4ymeRVNjzXf1ybzfi4UhP.html. பார்த்த நாள்: 23 நவம்பர் 2016. 
  6. "கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு". தினமணி. 23 நவம்பர் 2016. http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2016/nov/23/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2603299.html. பார்த்த நாள்: 23 நவம்பர் 2016. 
  7. பி. கோலப்பன் (23 நவம்பர் 2016). "Balamuralikrishna: a traditionalist who made waves in films". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Balamuralikrishna-a-traditionalist-who-made-waves-in-films/article16684396.ece. பார்த்த நாள்: 23 நவம்பர் 2016. 
  8. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018. 
  9. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2012-02-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2018. 
  10. "'Sangeetha Kalasarathy' conferred on Balamuralikrishna". தி இந்து. 17 December 2002 இம் மூலத்தில் இருந்து 25 அக்டோபர் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031025061950/http://www.hinduonnet.com/2002/12/17/stories/2002121704050500.htm. 
  11. "கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்". தி இந்து. 23 நவம்பர் 2016 இம் மூலத்தில் இருந்து 2016-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161207015730/http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article9376616.ece. பார்த்த நாள்: 07 டிசம்பர் 2016. 
  12. "புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு!". oneindia.com. http://tamil.oneindia.com/news/tamilnadu/balamuralikrishna-renowned-carnatic-vocalist-passes-away-chennai-267896.html. பார்த்த நாள்: 22 நவம்பர் 2016. 

வெளியிணைப்புகள்[தொகு]