பாலமுனை பாரூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலமுனை பாறூக்
பிறப்புமுகம்மது லெப்பை முகம்மது பாறூக்
பாலமுனை, இலங்கை
தேசியம்இலங்கையர்
குடியுரிமைஇலங்கை
பணிகவிஞர், வங்கி முகாமையாளர்.
பெற்றோர்முகம்மது லெப்பை
அலிமாநாச்சி

பாலமுனை பாறூக் (Palamunai Farook) அல்லது பாலமுனை பாரூக் என்று அறியப்பட்ட இவர் சுமார் நாற்பது வருடங்களாக கவிதை எழுதிவரும் குறிப்பிடத்தக்க கவிஞர். கலாபூசணம், சாமஸ்ரீ சிறாஜுல் புனூஸ், கவிப்புனல், கவித்தாரகை, கவிஞர் திலகம் போன்ற விருதுகளையும் பட்டங்களையும் பெற்றவர் ஆவார்.. 2002ல் இலங்கையில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவில் சிரேஷ்ட கவிஞருக்கான விருது இவருக்கு கிடைத்தது. மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற இலக்கிய மாநாடுகளில் பங்கேற்றவர். காயல்பட்டின மாநாட்டில் கவிதை பாடிப் பேசப்பட்டவர்

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சிறந்த சமூக சேவையாளரான இவர், அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னனியின் அம்பாறை மாவட்டத் தலைவராகவும், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. யின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் ஆகவும், பாலமுனை கிராமோதய சபையின் தலைவராகவும், பாலமுனை ஜும்பா பெரியபள்ளிவாசல் தலைவராகவும் சேவையாற்றியவர். பாலமுனை பூஞ்சோலை எழுத்தாளர் மன்றம், தென் கிழக்கு கலாசார பேரவை என்பவற்றின் செயலாளராகவும் கடமை புரிபவர். இலங்கை இஸ்லாமிய நூல் வெளியீட்டு பணியக பணிப்பாளர் சபை உறுப்பினர். கல்முனை புதிய பறவைகள் கவிதா மன்டலத்தின் ஸ்தாபக உறுப்பினர். மேலும் இவர் அகில இலங்கை சமாதான நீதிபதியாகவும், அட்டாளைச் சேனை மத்தியஸ்த சபை உறுப்பினராகவும் மக்கள் பணிபுரிபவர். இலங்கை வங்கியில் முகாமையாளர் தரத்தில் கடமையாற்றுபவர்.

வெளியீடுகளுக்கான விருதுகள் சில[தொகு]

பதம் (1987), சந்தனப் பொய்கை (2009) கவிதை நூல்களின் மூலம் பிரகாசித்தவர். கொந்தளிப்பு எனும் இவருடைய குறுங்காவியம் 2010ல் வெளிவந்தது. இது 2010ல் வெளிவந்த சிறந்த காவிய நூல் என இலங்கை அரச சாஹித்ய சான்றிதழைப் பெற்றுக் கொண்டது. இவரால் வெளியிடப்பட்ட தோட்டுப்பாய் மூத்தம்மா (2011) குறுங்காவியம், இவ்வாண்டில் மூன்று தேசிய சாஹித்ய விருது, பரிசுகளைப் பெற்றுக் கொண்டது. அவை, இலங்கை அரச சாஹித்ய விருது(2012), கொடகே தேசிய சாஹித்ய விருது 2012ன் “உருத்திரமூர்த்தி மகாகவி விருது”, இலங்கை இலக்கிய பேரவை (யாழ்ப்பாணம்) சிறப்புச்சான்று என்பனவாகும்.

வெளியிட்ட நூல்கள்[தொகு]

நூல் ஆண்டு
பதம் (கவிதை தெகுப்பு) 1987
சந்தனப் பொய்கை (கவிதை தெகுப்பு) 2009
கொந்தளிப்பு (குறுங்காவியம்) 2010
தோட்டுப்பாய் மூத்தம்மா (குறுங்காவியம்) 2011
எஞ்சியிருந்த பிரார்த்தனைகள் (குறுங்காவியம்) 2012
பாலமுனை பாறூக் குறும்பாக்கள் (குறும்பாக்கள் - (LIMERICKS) 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலமுனை_பாரூக்&oldid=2748027" இருந்து மீள்விக்கப்பட்டது