பாலமாவு புலி காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலமாவு புலி காப்பகம் (Palamu Tiger Reserve) இந்தியாவில் அமைந்துள்ள ஒன்பது புலி காப்பகங்களில் ஒன்றாகும்.[1] இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரே புலி காப்பகம் ஆகும். இந்த புலி காப்பகம் பெட்லா தேசிய பூங்கா மற்றும் பாலமாவு வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாகும்.

உருவாக்கம்[தொகு]

ஜார்கண்ட் மாநிலத்தில் லதேஹர் மாவட்டத்தில் உள்ள பகுதி 1974 ஆம் ஆண்டில் இந்திய வனச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஒதுக்கப்பட்டது. காப்பகம் உருவாவதற்கு முன்பு இந்த பகுதி கால்நடை மேய்ச்சலுக்கும், முகாமிடுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. மேலும் இப்பகுதி காட்டுத் தீக்கு உள்ளாகின்றது.[1] 1973 ஆம் ஆண்டில் இப்பகுதியில் பாலமாவு புலி காப்பகம் அமைக்கப்பட்டது.

இருப்பிடம்[தொகு]

புலி காப்பகம் மொத்தம் 1,129.93 சதுர கிலோமீற்றர் (436 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. இதன் முக்கிய பரப்பளவு 414.93 கிலோமீற்றரும், இடையக பகுதி 650 கிலோ மீற்றரும் ஆகும்.[2][3]

ராமண்டக், லாட்டூ மற்றும் குஜூரம் வன கிராமங்கள் மையப் பகுதியில் அமைந்துள்ளன. பெரும்பாலான கிராமங்கள் சிறியவை. மெரல் என்ற சிறிய கிராமம் 1993 ஆம் ஆண்டில் 99 ஏக்கர் (400,000 மீ 2 ) நிலப் பரப்பை கொண்டிருந்தது. மேலும் இங்கு ஒன்பது குடும்பங்களில் 78 வசித்து வந்தனர்.[1] 1993 ஆம் ஆண்டில் இடையக பகுதியில் 45 கிராமங்களும், மேலும் 60 இடங்களும் சுற்றுவட்டாரத்தில் அமைந்திருந்தன.

2012 நிலவரப்படி அந்த எண்ணிக்கை 136 கிராமங்களாக அதிகரித்துள்ளது. அவை பாலமாவு புலி காப்பகத்தின் " இடையக பகுதி" விதிமுறைகளின் கீழ் வருகின்றன. 1923 ஆம் ஆண்டில் ஏழு கிராமங்கள் மட்டுமே இருந்தன. காப்பகத்திற்கான இடையகப் பகுதி உருவாக்கப்பட்ட 1973 ஆம் ஆண்டிற்குப் பிறகு குடியேறிய கிராமவாசிகளின் நிலங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை.[2]

வனவிலங்குகள்[தொகு]

1990 ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ள நக்சலைட் நடவடிக்கைகள் காரணமாக புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. மேலும் அவற்றை எண்ணுவது மிகவும் கடினமாகிவிட்டது.[4][5]

1973 ஆம் ஆண்டில் புலி காப்பகம் நிறுவப்பட்ட போது புலிகளின் எண்ணிக்கை ஐம்பதாக காணப்பட்டது. 2005 ஆம் ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 38 ஆகக் குறைந்தது. 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 17 புலிகள் மட்டுமே காணப்பட்டன. மரபணு பகுப்பாய்வின் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டின் புலிகளின் கணக்கெடுப்பில் ஆறு புலிகள் மட்டுமே இருப்பதாக கருதப்பட்டது. கடினமான நிலப்பரப்பு மற்றும் நக்சலைட் இருப்பதால் மையப் பகுதி கிட்டத்தட்ட அணுக முடியாததால், கணக்கெடுப்பில் அனைத்து புலிகளும் உட்படவில்லை என்று வனத்துறை கூறியது. முதல் ஆண்டுகளில் புதிய புலிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமையும், வேட்டை வாய்ப்புகள் குறைந்து வருவதும் இவை ஆறு மட்டுமே என்று கருதப்பட ஏதுவாகின்றன.[5]

1989 ஆம் ஆண்டு நிலவரப்படி 65 யானைகள் இந்த காப்பக பகுதியில் வசிப்பதாக நம்பப்பட்டது.

புலிகள் மற்றும் யானைகளைத் தவிர , சிறுத்தைகள் , இந்திய காட்டெருமைகள், இந்திய சிறுமான்கள் மற்றும் காட்டு நாய்கள் என்பன இந்த காப்பகத்தில் வாழ்கின்றன.[6] வடக்கு கோயல் நதி காப்பகம் வழியாக சென்றாலும், விலங்குகள் தண்ணீருக்காக மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்நிலைகளைச் சார்ந்துள்ளன.[7]

140 க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் ( மயில் உட்பட) இந்த இருப்பிடத்தில் காணப்படுகின்றன.

2013 ஆம் ஆண்டில் செயின்பூரில் உள்ள பாலமாவு புலி காப்பகத்தில் இரண்டு வெள்ளை கழுகுகள் காணப்பட்டன.[8] அவை வடக்கு கோயல் ஆற்றின் மணல் படுக்கையில் காணப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பாலமாவில் கழுகு காணப்படுவது 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

சிக்கல்கள்[தொகு]

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்ட மனித நடவடிக்கைகளின் அதிகரித்த அழுத்தம், புலிகளின் எண்ணிக்கையையும், புலிகளை ஆதரிக்கும் இருப்பு திறனையும் குறைத்துள்ளது.[2][9]

நிதியுதவி தொடர்ச்சியான பிரச்சினையாக உள்ளது.  இருப்புக்கு போதுமான மேலாண்மை திட்டம் இல்லாததால் நிதியுதவி பிரச்சினை தொடர்கின்றது.[2][5]

பணியாளர்கள் பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த காப்பகத்திற்கான அனைத்து பிராந்தியங்களினதும் கண்காணிப்பு, பாதுகாப்பு பணிக்கான பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Prasad, R. R. & Jahagirdar, M. P. (1993). Tribal Situation in Forest Villages: Changing subsistence strategies and adaptation. New Delhi, India: Discovery Publishing House. p. 47. ISBN 978-81-7141-234-1.
  2. 2.0 2.1 2.2 2.3 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. "Just six tigers left in Palamu Tiger Reserve". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  5. 5.0 5.1 5.2 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  6. "Palamau Tiger Reserve". web.archive.org. 2009-02-02. Archived from the original on 2009-02-02. பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  7. Bhatt, Shankarlal C. & Bhargava, Gopal K. (2006). Land and people of Indian states and union territories in 36 volumes, volume 12 Jharkhand. Delhi, India: Gyan Publishing House (Kalpaz Publications). p. 216. ISBN 978-81-7835-368-5.
  8. Bansal, Sunita Pant (2005). Encyclopaedia of India. New Delhi, India: Smriti Books. p. 122. ISBN 978-81-87967-71-2.
  9. "Times of India". Archived from the original on 2012-09-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலமாவு_புலி_காப்பகம்&oldid=3562969" இலிருந்து மீள்விக்கப்பட்டது