பாலபூமி
Appearance
மேலாள தொகுப்பாசிரியர் | பி. வி. சந்திரன் |
---|---|
வகை | நகைச்சுவை இதழ் |
இடைவெளி | வார இதழ் |
வெளியீட்டாளர் | பி. வி. நிதிசு |
தொடங்கப்பட்ட ஆண்டு | 1996 |
நிறுவனம் | மாத்ருபூமி |
நாடு | இந்தியா |
அமைவிடம் | கோழிக்கோடு, கேரளம் |
மொழி | மலையாளம் |
வலைத்தளம் | http://www.mathrubhumi.com/kids/ |
பாலபூமி (Balabhumi; மலையாளம் : ബാലഭൂമി) என்பது மாத்ருபூமி பப்ளிகேஷன்சு மூலம் வெளியிடப்பட்ட ஒரு மலையாள நகைச்சுவை இதழ் ஆகும்.[1] இது கோழிக்கோடு சார்ந்த மலையாளச் செய்தித்தாள் நிறுவனமான மாத்ருபூமியால் ஏப்ரல் 1996இல் தொடங்கப்பட்டது.[2] இந்தப் பத்திரிகை மே 1996இல் வார இதழாக மாறியது.[3]
நகைச்சுவை கதைகளுடன் உள்ளடக்கத்தில் கட்டுக்கதைகள் மற்றும் விசித்திரக் கதைகள், பாடல்கள்,(மொழிபெயர்க்கப்பட்ட) இலக்கியப் புராணக் கதைகள், பல்வேறு புதிர்கள் எனப் பல வகையான பகுதிகளை இந்த இதழ் வெளியிடுகிறது. டிஸ்னி காமிக்சை ஒருங்கிணைக்கும் முதல் மலையாளக் குழந்தைகளுக்கான நகைச்சுவைப் பத்திரிகை இதுவாகும்.
கதைகளும் கட்டுரைகளும்
[தொகு]- மேஜிக் மாலு:[3] (கலைஞர்: எம். மோகன்தாசு) எந்தவொரு பிரச்சினையிலிருந்தும் அனைவருக்கும் உதவும் ஒரு மந்திரவாதி முயலின் கதை.
- இ-மேன்:[3] (உன்னிகிருஷ்ணன் கிடங்கூர், ஜிங்கிள் பெல் படைப்புகள்): பாலபூமியின் ஒரே கதாநாயகன்
- மீசாமர்ஜரன்[3] (வல்லிக்கோடு சந்தோசு, தேவபிரகாசு): இரண்டு சிறந்த நண்பர்களின் கதை ஆனால் இறுதியில் ஒரு சிக்கலில் விழுதல்.
- குஞ்சூசு:(உன்னிகிருஷ்ணன் கிடங்கூர், ஜிங்கிள் பெல் படைப்புகள்) பாலபூமியின் குறும்புக்கார பையன்களில் ஒருவன்.
- மல்லனுன்னியும் வில்லனுன்னியும்:[3] (உன்னிகிருஷ்ணன் கிடங்கூர், ஜிங்கிள் பெல் படைப்புகள்) இரண்டு சகோதரர்களின் கதை ஒருவர் (வில்லுன்னி) புத்திசாலி ஆனால் வலிமையானவர் அல்ல, மற்றொருவர் (மல்லனுன்னி) வலிமையானவர் ஆனால் புத்திசாலி அல்ல.
- மாஸ்டர் டின்டு:[3] பிரமாத துணுக்கள் சொல்லும் ஒரு குறும்புக்கார பையனின் கதை.
- போலி: குறும்புக்காரப் பெண்ணின் கதை.
- விக்ரு & துர்பாலன்:[3] (உன்னிகிருஷ்ணன் கிடங்கூர், ஜிங்கிள் பெல் படைப்புகள்) துர்பாலன் என்ற சிங்கத்துடன் நட்பு கொண்ட ஒரு குட்டி கரடியின் கதை.
- கிரா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gopalakrishnan, R. (2021). "When Our Hearts Leapt Up". Kerala Calling (Information & Public Relations Department, Government of Kerala) 42: 40. https://prd.kerala.gov.in/sites/default/files/inline-files/Kerala%20Calling%20NOV%20LR.pdf.
- ↑ "Mathrubhumi". Exchange4Media. Archived from the original on 4 March 2016. Retrieved 25 May 2013.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "Balabhumi Enters 25th Year with More Innovative Content". Mathrubhumi Daily. 25 April 2020.