பாலச்சந்திரன் பிரபாகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலச்சந்திரன் பிரபாகரன்
பிறப்புஅக்டோபர் 1, 1996(1996-10-01)
இறப்புமே 18, 2009(2009-05-18) (அகவை 12)
நந்திக்கடல், முல்லைத்தீவு, இலங்கை
பணிமாணவன்
பெற்றோர்வேலுப்பிள்ளை பிரபாகரன்
மதிவதனி
உறவினர்கள்சார்ல்சு அந்தனி (தமையன்)
துவாரகா (தமக்கை)

பாலச்சந்திரன் பிரபாகரன் (அக்டோபர் 1, 1996[1] - மே 18, 2009) இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூன்றாவது மகனாவார்.

இவர் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில் 2009 மே 18 அன்று கொல்லப்பட்டார். இலங்கை ராணுவம் இவர் போரின் போது குண்டடிபட்டு இறந்ததாக அறிவித்தது. 2013ஆம் ஆண்டில், இவர் இலங்கை ராணுவத்தின் பிணைக்கைதியாய் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இவர் மார்பில் நெருக்கத்தில் வைத்து ஐந்து முறை சுடப்பட்ட புகைப்படம் பின்னர் வெளியானது.[2][3]

”நோ பயர் சோன்” என்ற ஆவணப்படத்தின் இயக்குநர் கல்லும் மக்ரே, "வெளியான புகைப்படங்கள், இவர் போரின் போது கொல்லப்பட்டார் என்பதைத் தெளிவாக நிராகரிக்கிறது. எவ்வாறெனில் அவர் கையில் உள்ள சிற்றுண்டிப் பொட்டலமும் இயல்பான சூழலும் பிணைக்கைதியாய்க் கொல்லப்பட்டார் என்பதை உணர்த்துகிறது" என்கிறார்.[2]. இலங்கை சனநாயக பத்திரிக்கையாளர் குழுவும், இந்தப் புகைப்படங்கள் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதை நிரூபிக்கிறது எனக் கூறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]