பாலசுப்பிரமணியம்
Balasubramaniam பாலசுப்ரமணியம் బాలసుబ్రహ్మణ్యం ಬಾಲಸುಬ್ರಹ್ಮಣ್ಯಂ ബാലസുബ്രഹ്മണ്യം | |
---|---|
பாலினம் | ஆண் |
மொழி(கள்) | தமிழ் தெலுங்கு கன்னடா மலையாளம் |
பூர்வீகம் | |
பொருள் | இளமை சுப்ரமணியம் |
பயன்படுத்தும் இடம் | தென்னிந்தியா தென் இலங்கை |
வேறு பெயர்கள் | |
வேறு எழுத்துக்கோர்வை | பாலசுப்ரமணியன் பாலசுப்ரமணியெம் பாலசுப்ரமணியம் பாலசுப்பிரமணியம் |
Derived | முருகன் |
பாலசுப்பிரமணியம் அல்லது பாலசுப்பிரமணியன் (Balasubramaniam or Balasubramanian)(தமிழ்: பாலசுப்ரமணியம்; தெலுங்கு: బాల సుబ్రహ్మణ్యం; கன்னடம்: ಬಾಲಸುಬ್ರಹ್ಮಣ್ಯಂ; மலையாளம்: ബാലസുബ്രഹ്മണ്യം) என்பது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் ஆண்களின் பெயராகும். தென்னிந்தியாவில் பாரம்பரியமாக ஆண்களும் பெண்களும் பாலசுப்பிரமணியன் என்பதை குடும்பப் பெயராகப் பயன்படுத்துகின்றனர். பாலசுப்ரமணியம் என்னும் சொல்லானது சமசுகிருத வார்த்தையாகும். பால என்பது "இளம்" என்றும் மற்றும் சுப்ரமணியம் (சு சமஸ்கிருத சொல்லான "புனிதமான" மற்றும் ப்ரமணியம் என்பது "உச்ச ஆவியின் மங்களகரமான சுடரொளியில் மிகச்சிறந்து" எனப் பொருள் படும்படி மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. இது இந்து கடவுளான முருகனின் குழந்தை அல்லது இளமைப் பருவத்தினைக் குறிப்பிடுகிறது. இதுபோல பாலகிருஷ்ணா என்ற சொல் இளம் வயது கிருட்டிணனைக் குறிக்கிறது.
தெலுங்கில், சமஸ்கிருத மூல வார்த்தையுடன் நெருக்கமாக உள்ள இந்த பெயர் பாலசுப்பிரமண்யம் அல்லது பாலசுப்பிரமணியம் என்று எழுதப்பட்டுகிறது. கன்னடத்தில், இந்தப்பெயரானது பாலசுப்பிரமண்யா அல்லது பாலசுப்பிரமண்யா என்று குறிப்பிடப்படுகிறது.
குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]
- பாலசுப்பிரமணியன், இந்திய அரசியல்வாதி
- பாலசுப்பிரமணியம் (பிறப்பு 1966), இந்திய ஒளிப்பதிவாளர்
- ஏ.பாலசுப்பிரமணியம் (பிறப்பு 1971), இந்திய கலைஞர்
- டி.பாலசுப்பிரமணியம், இந்திய நடிகர்
- ஜி.என்.பாலசுப்பிரமணியம் (1910-1965), இந்திய இசைக்கலைஞர்
- கே.பாலசுப்பிரமணியன், இந்திய அரசியல்வாதி
- கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன், இந்திய நடிகர்
- குடவயில் பாலசுப்பிரமணியன், இந்திய தொல்பொருள் ஆய்வாளர்
- பி.பாலசுப்பிரமணியம் (1960–2013), மலேசிய காவல்துறை அதிகாரி
- பி.பாலசுப்பிரமணியன், இந்திய அரசியல்வாதி
- ஆர்.பாலசுப்பிரமணியம், இந்திய நடிகர்
- ராமச்சந்திரன் பாலசுப்பிரமணியன் (பிறப்பு 1951), இந்திய கணிதவியலாளர்
- எஸ்.பாலசுப்பிரமணியன் (பிறப்பு 1936), இந்திய பத்திரிகையாளர்
- எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (1946-2020), இந்திய இசைக்கலைஞர்
- எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி
- சங்கர் பாலசுப்பிரமணியன் (பிறப்பு 1966), பிரிட்டிஷ் வேதியியலாளர்
- சிற்பி பாலசுப்பிரமணியம் (பிறப்பு 1936), இந்திய கவிஞர் மற்றும் கல்வியாளர்
- வி.பி.பாலசுப்பிரமணியன், இந்திய அரசியல்வாதி
குடும்ப பெயர்[தொகு]
- இலங்கையின் வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன்
- பாலசுப்பிரமணியன் முத்துராமன், இந்திய தொழிலதிபர்
- பாலசுப்பிரமணியம் நெமினாதன் (பிறப்பு 1922), இலங்கை அரசியல்வாதி
- பாலசுப்பிரமணியம் ராமமூர்த்தி (1922-2003), இந்திய மருத்துவர்
- பாலசுப்பிரமணியன் சுந்தரம், இந்திய வேதியியலாளர்
- மலர் பாலசுப்பிரமணியன் (பிறப்பு 1976), அமெரிக்க மருத்துவர்
- ராஜீவ் பாலசுப்பிரமணியம் (பிறப்பு 1974), பிரிட்டிஷ் எழுத்தாளர்
மேலும் காண்க[தொகு]
- All pages with titles containing Balasubramaniam
- All pages with titles containing Balasubramanian
- All pages with titles containing Balasubramaniem
- All pages with titles containing Balasubramanyam
- All pages with titles containing Balasubrahmanyam