பாலக் முச்சால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலக் முச்சால்
Palak Muchhal filmfare.jpg
2016, 61வது பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் பாலக்
பிறப்பு30 மார்ச்சு 1992 (1992-03-30) (அகவை 28)
இந்தோர், மத்தியப் பிரதேசம், இந்தியா
கல்விஇளங்கலை வணிகவியல்
பணிபாடகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1997 முதல் தற்போது வரை
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு

பாலக் முச்சால் (Palak Muchhal) 1992 மார்ச் 30 அன்று பிறந்த இவர் ஒரு இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். இதயக் கோளாறினால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் பொருட்டு அவர் மற்றும் அவரது இளைய சகோதரர் பாலாஷ் முச்சால் ஆகிய இருவரும் இணைந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். 16 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வரை, அவர் தொண்டு நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டினார், இது 1333 இதய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்ற உதவியது. சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக கின்னஸ் உலக சாதனைகள் மற்றும் லிம்கா சாதனைகள் புத்தகம் ஆகியவற்றில் முச்சால் இடம் பெற்றார். அவரது பணியானது, இந்திய அரசு மற்றும் பிற பொது நிறுவனங்கள் பல்வேறு விருதுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது . இந்தி திரைப் படங்களுக்கு பின்னணி பாடகராக முச்சால் இருக்கிறார். "ஏக் தா டைகர்" (2012), "ஆஷிக் 2" (2013)," கிக் (2014), "ஆக்சன் ஜாக்சன்" (2014) "மெய்மறந்தேன் பாராயோ" (2015) "எம். எஸ். தோனி" (2016) மற்றும் காபில் (2017) போன்ற படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

பின்னணி[தொகு]

2013இல் ரக்சா பந்தன் கொண்டாட்டத்தில் முச்சால் தனது ச்கோதரன் பாலாஷ் உடன்

பாலக் முச்சால் இந்தூரிலுள்ள ஒரு மார்வாரி குடும்பத்தில் 1992 மார்ச் 30 அன்று பிறந்தார். இவர் தூய சைவம். அவரது தாயார், அமிதா முச்சால், ஒரு இல்லத்தரசி, மற்றும் அவரது தந்தை, ராஜ்குமார் முச்சால், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவருக்கு பாலாஷ் முச்சால் என்ற ஒரு இளைய சகோதரர் இருக்கிறார்.[1] அவர் இந்தூர், சினே நகர் ஸ்ரீ ஆக்ரேசன் வித்யாலயா பள்ளியில் படித்தார். மே மாதம் 2013 ஆம் ஆண்டில், முச்சால் தனது இறுதி வருடத்தில், இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார்.[2] ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் சோட்டாசத்ரி நகரில் முச்சாலின் தாத்தாவின் வீடு உள்ளது. அவர் நான்கு வயதிலேயே பாடுவதற்குத் தொடங்கினார். அவர் இந்திய பாரம்பரிய இசை இல் பயிற்சி பெற்றார். இந்தி, சமசுகிருதம், குஜராத்தி, ஒரியா, அசாமி, இராச்சசுத்தானி, பெங்காலி, போச்புரி, பஞ்சாபி, மராத்தி, கன்னடா, தெலுகு, தமிழ், சிந்தி மற்றும் மலையாளம் போன்ற 17 வெவ்வேறு மொழிகளில் முச்சால் பாடுகிறார்.

2011–present[தொகு]

ஜூலை 2013இல் ஒரு நிகழ்ச்சியில் பாலக் முச்சால்

2011 ஆம் ஆண்டில், முச்சால் தொழில்முறை பின்னணி பாடகியாக பாலிவுட்டில் நுழைந்தார், ஆனால் குழந்தை இதய நோயாளிகளுக்கு உதவ அவரது முயற்சிகள் தொடர்ந்தது. ஆகஸ்ட் 2015 வரை, அவரால் எழுப்பப்பட்ட நிதி 800 குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற உதவியது.[3]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலக்_முச்சால்&oldid=2691855" இருந்து மீள்விக்கப்பட்டது