பாலகும்மி பத்மராஜூ
பாலகும்மி பத்மராஜூ | |
|---|---|
| பிறப்பு | 24 சூன் 1915 திருப்பதிபுரம், மேற்கு கோதாவரி மாவட்டம் |
| இறப்பு | 17 பெப்ரவரி 1983 |
| புனைபெயர் | பி. பத்மராஜூ |
| தொழில் | இலக்கியவாதி |
| குடியுரிமை | இந்தியா |
| வகை | எழுத்தாளர், கவிஞர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கலிவனா |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது |
பாலகும்மி பத்மராஜூ (Palagummi Padmaraju), சுருக்கமாக பி. பத்மராஜூ (24 சூன் 1915 - 17 பிப்ரவரி 1983) என்பவர் ஒரு தெலுங்கு எழுத்தாளர் ஆவார். இவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். பாலகும்மிராஜு தெலுங்கு இலக்கியம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தனது பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார்.
துவக்க கால வாழ்க்கை
[தொகு]இவர் சென்னை மாகாணத்தின் (தற்கால ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில்) உள்ள திருப்பதிபுரத்தில் பிறந்தார்.[சான்று தேவை] இவர் 1939 - 1952 இக்கு இடையில் காக்கிநாடாவில் உள்ள அரசு பி.ஆர். கல்லூரியில் அறிவியல் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.[சான்று தேவை] இவரது தம்பி பாலகும்மி விஸ்வநாதம் ஒரு வீணைக் கலைஞர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஆவார். [1]
இலக்கியப் படைப்புகள்
[தொகு]இவரது முதல் கதை "சுப்பி" என்பதாகும். இவர் சுமார் அறுபது சிறுகதைகளை எழுதியுள்ளார். கலிவனா, பாதவப் பிராயணம், எதிர்ச்சூசின முகுர்த்தம் என மூன்று தொகுதிகளாக அவை வெளிவந்தன . [2]
புதினங்கள்
[தொகு]- படிகின காலேஜ்
- நல்ல ரேகடி
- ராமராஜ்யனிகி ரகதாரி
- ரெண்டோ அசோகுடி முனல்லா பலனா
திரைப்படங்கள்
[தொகு]இவர் சில தெலுங்கு படங்களுக்கு கதை, உரையாடல், பாடல் போன்றவற்றை எழுதியுள்ளார்:
- பங்காரு பாப்பா (1954)
- பாக்ய ரேகா (1957)
- பக்த சபரி (1960);
- சாந்தி நிவாசம் (1960).
- பிகாரி ராமுடு (1961)
- பங்காரு பஞ்சரம் (1965)
- ரங்குலா ரத்னம் (1966)
- மஞ்சி வால்லகி மஞ்சிவாடு (1973)
- ஸ்ரீ ராஜேஸ்வரி விலாஸ் காபி கிளப் (1976)
- சர்தார் பாப்பராயுடு (1980)
- இல்லலே தேவதா (1985)
- ஸ்த்ரி (1995)
விருதுகள்
[தொகு]- சிறந்த கதை ஆசிரியருக்கான நந்தி விருது - ரங்குல ரத்னம் (1966) [3]
- சிறந்த கதை ஆசிரியருக்கான நந்தி விருது - பஹுதூரபு படாசாரி (1983)
- 1985 ஆம் ஆண்டு கலிவனா என்ற நூலுக்காக தெலுங்கு மொழிக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர்.[சான்று தேவை]
- இவரது சிறுகதையான சைக்ளோன் 1952 ஆம் ஆண்டு நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூனால் நடத்தப்பட்ட சர்வதேச பரிசைப் பெற்றது. 23 நாடுகளிலிருந்து வந்த 59 கதைகளில் இருந்து இது தேர்ந்தெடுக்கப்பட்டது.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ . 18 April 2008.
- ↑ Articles : Movie Retrospect : Stri (1995) பரணிடப்பட்டது 2009-04-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. Retrieved 21 August 2020.(in Telugu)