பாலகும்மி சாய்நாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாலகும்மி சாய்நாத்
P. Saynath.jpg
பிறப்பு 1957
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தொழில் இதழியலாளர்
குறிப்பிடத்தக்க மதிப்பு(கள்) இந்திய விவசாயிகளின் தற்கொலை குறித்தக் கட்டுரைகள்
Official website

பாலகும்மி சாய்நாத் (பிறப்பு 1957), கிராமப்புற செய்திகளை வெளிக்கொணரும் ஓர் இந்திய இதழியலாளர். இவர் 2007ஆம் ஆண்டு இதழியல்,இலக்கியம் மற்றும் ஆக்கமுள்ள தொடர்பியல் குறித்த மக்சேசே பரிசு பெற்றவர். இந்தியாவில் உலகமயமாதலால் ஏற்படும் விளைவுகளையும் வறுமை, விவசாயிகளின் தற்கொலைகளின் ஏறுமுகத்தின் பின்னணி மற்றும் கிராமங்களில் நிலவும் சமூகச் சிக்கல்கள் போன்றவை குறித்து ஒளிப்படங்களுடன் எழுதும் கட்டுரைகளுக்காகப் புகழ் பெற்றவர். ஆண்டொன்றில் 270 முதல் 300 நாட்கள் கிராமங்களில் தங்கி கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். த இந்து ஆங்கில நாளிதழின் கிராமப்புறச் செய்தியாசிரியர் மற்றும் இந்தியா டுகெதர் என்ற இதழின் பத்தி எழுத்தாளர்.[1]. இவரது பணி நோபல் பரிசு பெற்ற அமார்த்ய சென் போன்றோரிடமிருந்து "பசி மற்றும் பஞ்சம் குறித்த உலக வல்லுனர்களில் ஒருவர்" என்ற பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.[2]

இளமை வாழ்வு[தொகு]

சாய்நாத் ஆந்திராவின் புகழ்பெற்றக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். முன்னாள் குடியரசுத் தலைவர் வி. வி. கிரியின் பேரன்.[3] சென்னையிலுள்ள லயோலாக் கல்லூரியில் படித்து பின்னர் தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அக்காலத்திலேயே பல்கலைக்கழக மாணவர் செயற்திறனாளர்களுடன் ஒன்றாக இருந்தார். இன்றும் அப்பல்கலைக்கழகத்தின் செயற்குழு உறுப்பினர். வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றபின்பு 1980ஆம் ஆண்டு யுனைடைட் செய்தி நிறுவனத்தில் செய்தியாளராகத் தம் பணிவாழ்வைத் துவங்கினார். அந்நிறுவனத்தில் தமது பணிக்காக உயரிய பரிசுகளை வென்றவர். மும்பையிலிருந்து வெளியான பிளிட்ஸ் வார இதழில் பணியாற்றினார். முதலில் வெளிநாட்டுச் செய்தியாசிரியராகவும் பின்னர் துணை ஆசிரியராகவும் பத்து ஆண்டுகள் பணி புரிந்தார். கடந்த பதினைந்து ஆண்டுகளாக சென்னையிலுள்ள இதழியலிற்கான ஆசியக் கல்லூரி (Asian College of Journalism) மற்றும் சோஃபியா பலதொழில்நுட்பப் பயிலகத்தின் சமூகத் தொடர்பியல் ஊடகக் கல்வித்துறையின் வருகை விரிவுரையாளராக உள்ளார்.

ஆக்கங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகும்மி_சாய்நாத்&oldid=2392387" இருந்து மீள்விக்கப்பட்டது