வலது கண்ணில் கடுமையான பார்வைத் தட்டு வீக்கம்இடது கண்ணில் பார்வைத் தட்டு வீக்கம்
பார்வைத் தட்டு வீக்கம் (Papilledema or papilloedema), நாம் பார்க்கும் பொருளின் பிம்பம் எது என்பதை நமக்கு உணர்த்துவது கண்ணிலிருந்து மூளைக்குச் செல்லும் பார்வை நரம்பாகும். இந்தப் பார்வை நரம்பில் ஏற்படும் வீக்கம், நமது மூளையில் ஏற்படும் கட்டிகள் அல்லது பிரச்சனைகளால் ஏற்படுகிறது. மூளைத் தண்டு வட நீர் அழுத்தம் அதிகரிப்பதால் பார்வை நரம்பும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் வீக்கம் அடைந்து நமக்கு தலைவலி, வாந்தி, பக்கப்பார்வை குறைபாடு, இறுதியில் முழுப்பார்வைத் திறன் இழத்தல் போன்ற பாதிப்புகளை உண்டாக்குகிறது.[2]