பார்வாரா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
பார்வாரா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (Bharwara Sewage Treatment Plant) இந்தியாவின் இலக்னோ நகரிலுள்ள கோமதி நகர் பகுதியில் உள்ள பர்வாரா கிராமத்தில் அமைந்துள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு 2011 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று தொடங்கியது. பார்வாரா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்திற்கு ₹360 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.[1][2]
பார்வாரா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத் திட்டம் 2010 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் அதன் திட்டமிடப்பட்ட திறனில் மூன்றில் ஒரு பங்கு செயல்படத் தொடங்கும் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.[3] இந்த சுத்திகரிப்பு நிலையம் ஆசியாவின் மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[4] 2019 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் ஆலை இதன் தேவைகளுக்காக சூரிய சக்தி உற்பத்தியைத் தொடங்கியது. மேலும் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான மின்சாரத்தை உத்தரப் பிரதேச மின் நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.[5][6]
இங்கு சுத்திகரிக்கப்படும் கழிவுநீரில் நுண்ணுயிர் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maya gifts Asia's largest sewage plant to Lucknow". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Lucknow). 16 January 2011. http://timesofindia.indiatimes.com/city/lucknow/maya-gifts-asias-largest-sewage-plant-to-lucknow/articleshow/7294611.cms. பார்த்த நாள்: 10 April 2016.
- ↑ "Cycle of change: New STP to clean waste water in a day". The Times of India. 6 June 2023. https://timesofindia.indiatimes.com/city/lucknow/cycle-of-change-new-stp-to-clean-waste-water-in-a-day/articleshow/100781310.cms.
- ↑ "Bharwara sewage treatment plant to function from July". The Indian Express. 18 June 2010. https://indianexpress.com/article/cities/lucknow/bharwara-sewage-treatment-plant-to-function-from-july/.
- ↑ "Sewage Treatment Plant (STP), Bharwara Co-treatment of Faecal Sludge". Centre for Science and Environment. Retrieved 1 July 2024.
- ↑ "Bharwara STP to be self-sustaining by generation Solar Power". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (Lucknow). 23 January 2019. https://www.pressreader.com/india/hindustan-times-lucknow/20190123/281694025973406.
- ↑ Lokgariwar, Chicu (20 September 2013). "A tale of two STPs". India Water Portal. Retrieved 1 July 2024.
- ↑ Soni, Kuldeep; Kothamasi, David; Chandra, Ram (February 2024). "Municipal wastewater treatment plant showing a potential reservoir for clinically relevant MDR bacterial strains co-occurrence of ESBL genes and integron-integrase genes". Journal of Environmental Management 351. doi:10.1016/j.jenvman.2023.119938. பப்மெட்:38171124. Bibcode: 2024JEnvM.35119938S. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0301479723027263. பார்த்த நாள்: 1 July 2024.