உள்ளடக்கத்துக்குச் செல்

பார்வதி டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்வதி
பிறப்புதிருவனந்தபுரம், கேரளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது வரை
பெற்றோர்(கள்)வழக்கறிஞர் சி. வி. திரிவிக்ரமன், (தந்தை) மருத்துவர் கே. இலலிதா (தாயார்)
வாழ்க்கைத்
துணை
பி. சதீசன்
பிள்ளைகள்1

பார்வதி டி. அல்லது மாலா பார்வதி என்று தொழில் ரீதியாக அழைக்கப்படும் பார்வதி சதீசன், முதன்மையாக மலையாளத் திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

பார்வதி திருவனந்தபுரத்தில் ஒரு ஈழவர் குடும்பத்தில், வழக்கறிஞர் சி. வி. திரிவிக்ரமன் மற்றும் மகளிர் நலவியல் மருத்துவர் கே. லலிதா ஆகியோருக்கு பிறந்தார்.[1] திருவனந்தபுரத்தில் உள்ள ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் அரசு மகளிர் கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். முதல் ஆண்டில் கல்லூரி ஒன்றியத்தின் துணைத் தலைவராக இருந்த இவர், தனது இரண்டாம் ஆண்டில் தனது கல்லூரியில் தொழிற்சங்கத் தலைவராகவும், இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். பார்வதி திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தின் காரியவட்டம் வளாகத்தில் உளவியலில் முதுகலைப் பட்டமும் மற்றும் முதுதத்துவமாணியையும் முடித்துள்ளார். பின்னர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்ட அகாதமி சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்றார்.

பார்வதி கேரள அரசின் இமேஜிங் தொழில்நுட்ப மேம்பாட்டு (சி-டிஐடி) நிறுவனத்தில் பணிபுரியும் பி. சதீசன் என்பவரை மணந்தார். இவர்களுக்கு அனந்தகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார்.[2]

தொழில் வாழ்க்கை

[தொகு]

திரைப்படத்தைத் தவிர, பார்வதி 2006 முதல் எம். எஸ். எல். குழுமத்தின் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார் (இவரது வாடிக்கையாளர்களில் ஹே ஃபெஸ்டிவல், எமிரேட்ஸ் எயர்லைன் போன்றவை அடங்கும். இவர் 2016 முதல் டென் டிகிரி நார்த் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்காகவும் பணியாற்றி வருகிறார்.[3]

சர்ச்சைகள்

[தொகு]

2020 ஆம் ஆண்டில், மாற்றுப் பாலினத்தவரான சீமா வினீத் என்பவர் பார்வதியின் மகன் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். 2024 ஆம் ஆண்டில், ஹேமா குழு முன்பு தனது விசாரணையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "അമ്മൂമ്മ കുമാരനാശാന്റെ ഭാര്യയായിരുന്നു, ഞാൻ ആശാന്റെ കൊച്ചുമോളല്ല-മാലാ പാർവതി". Grihalakshmi (in ஆங்கிலம்). 2025-03-17. Retrieved 2025-03-25.
  2. S, Harikumar J. (2020-06-11). "Kerala band Thekkan Chronicles’ ‘Onnayidum Lokam’ celebrates the spirit of togetherness despite the pandemic" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/music/kerala-band-thekkan-chronicles-onnayidum-lokam-celebrates-the-spirit-of-togetherness-despite-the-pandemic/article31801168.ece. 
  3. ""This city should turn out as the safest one for women": Parvathi T". entecity.com. Archived from the original on 7 April 2020. Retrieved 12 June 2018.
  4. "Won't allow blackmailing, will proceed legally: Maala Parvathi on son accused of sexual harassment". Won't allow blackmailing, will proceed legally: Maala Parvathi on son accused of sexual harassment (in ஆங்கிலம்). Retrieved 2025-03-25.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி_டி&oldid=4261617" இலிருந்து மீள்விக்கப்பட்டது