உள்ளடக்கத்துக்குச் செல்

பார்மேர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 25°46′N 71°24′E / 25.76°N 71.40°E / 25.76; 71.40
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்மேர்
RJ-17
மக்களவைத் தொகுதி
Map
பார்மேர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்22,06,237[2]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
உமேதா ராம் பெனிவால் [1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பார்மேர் மக்களவைத் தொகுதி (Barmer Lok Sabha constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது 71,601 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய இரண்டாவது பெரிய நாடாளுமன்றத் தொகுதியாகும். இது பெல்ஜியத்தின் இரு மடங்கு பரப்பளவைக் கொண்டுள்ளது.[3] இந்தியாவின் மூன்றாவது மற்றும் ஐந்தாவது பெரிய மாவட்டங்களான ஜெய்சால்மர் மற்றும் பார்மேர் ஆகிய இரண்டும் இந்த மக்களவைத் தொகுதியின் கீழ் வருகின்றன.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் 2014ஆம் ஆண்டில் பாஜகவின் கிளர்ச்சி வேட்பாளராக இந்தத் தொகுதியில் போட்டியிட்டார். இவரது மகன் மன்வேந்திர சிங் இங்குச் சில முறை போட்டியிட்டுள்ளார்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, பார்மேர் மக்களவைத் தொகுதியில் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[4]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி 2024 இல் முன்னிலை
132 ஜெய்சால்மர் ஜெய்சால்மர் சோட்டு சிங் பாட்டி பாஜக இந்தியா
134 சியோ பார்மேர் ரவீந்திர சிங் பாட்டி இந்தியா இந்தியா
135 பார்மேர் பிரியங்கா சவுத்ரி இந்தியா ஐஎன்சி
136 பேட்டு ஹரிஷ் சவுத்ரி ஐஎன்சி ஐஎன்சி
137 பச்பத்ரா அருண் சவுத்ரி பாஜக இந்தியா
138 சிவனா ஹமீர் சிங் பயல் பாஜக இந்தியா
139 குதா மலானி கே. கே. பிஷ்னோய் பாஜக ஐஎன்சி
140 சோஹ்தன் (ப.இ.) ஆதுராம் மேக்வால் பாஜக ஐஎன்சி

மக்களவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 பவானி சிங் சுயேச்சை
1957 ரகுநாத் சிங் பகதூர்
1962 டான் சிங் அகில பாரதிய இமார ராஜ்ய பரிசத்
1967 அம்ரித் நஹதா இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 டான் சிங் ஜனதா கட்சி
1980 விர்தி சந்த் ஜெயின் இந்திய தேசிய காங்கிரசு (ஐ.)
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 கல்யாண் சிங் கல்வி ஜனதா தளம்
1991 ராம் நிவாஸ் மிர்தா இந்திய தேசிய காங்கிரசு
1996 சோனா ராம்
1998
1999
2004 மன்வேந்திர சிங் ஜஸோல் பாரதிய ஜனதா கட்சி
2009 ஹரிஷ் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசு
2014 சோனா ராம் பாரதிய ஜனதா கட்சி
2019 கைலாஷ் சௌத்ரி
2024 உமேதா ராம் பெனிவால் இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 பொதுத் தேர்தல்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பார்மேர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு உமேதா ராம் பெனிவால் 7,04,676 41.74 +4.99
சுயேச்சை இரவீந்திர சிங் பாதி 5,86,500 34.74 N/A
பா.ஜ.க கைலாஷ் சௌத்ரி 2,86,733 16.99 -42.52
நோட்டா நோட்டா (இந்தியா) 17,903 1.06
வாக்கு வித்தியாசம் 1,28,731 7.00
பதிவான வாக்குகள் 16,88,051 75.93 +2.63
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Barmer LS Election Results Live: बाड़मेर में कांग्रेस जीती, भाटी दूसरे और केंद्रीय मंत्री चौधरी तीसरे नंबर पर". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  2. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  3. "Smallest constituency is just 10 sq km". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-19.
  4. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 11 August 2009.
  5. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2017.htm