பார்மாக்சு செயல்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பார்மாக்சு செயல்முறை (Formox process) என்பது தொழில் முறையில் பார்மால்டிகைடு தயாரிக்க உதவும் ஒரு முறையாகும். மேலும் பார்மாக்சு என்பது பதிவு செய்யப்பட்ட ஒரு வணிகக் குறியீடு ஆகும். இக்குறியீடு சுவீடனைச்[1] சேர்ந்த பார்மாக்சு ஏபி நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.

தொழில் முறையில் மெத்தனாலில் இருந்து பார்மால்டிகைடு தயாரிக்கப்படுகிறது. இது ஒரு ஐதரசன் நீக்கல் வினை என்றும் வினையூக்கியின் உதவியால் ஆக்சிசனேற்றம் செய்யும் முறை என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக வெள்ளி உலோகம் அல்லது இரும்பு மற்றும் மாலிப்டினக் கலவை அல்லது வனேடியம் ஆக்சைடுகள் இவ்வினையில் வினையூக்கிகளாகப் பயன்படுத்தப்படும். சமீபமாக பார்மாக்சு செயல்முறையில் இரும்பு ஆக்சைடு மற்றும் மாலிப்டினம் அல்லது வனேடியம், மெத்தனால் மற்றும் ஆக்சிசன் ஆகியவை 300 – 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து பார்மால்டிகைடை கொடுக்கிறது.

CH3OH + ½ O2 → H2CO + H2O.

உயர்வான வெப்பநிலையில் ( 650 பாகை செல்சியசு ) வெள்ளி அடிப்படை வினையூக்கிகள் பயன்படுத்தப்படும். இவ்வினையில் ஒரே நேரத்தில் நடைபெறும் இரண்டு வேதிவினைகளில் பார்மால்டிகைடு உண்டாகிறது. முதலாவது மேலே கூறப்பட்டது இரண்டாவது வினை ஐதரசன் நீக்கல்வினை ஆகும்

CH3OH → H2CO + H2

தொடர்ந்து செயல்முறையில் பார்மால்டிகைடை ஆக்சிசனேற்றம் செய்யும்போது பார்மால்டிகைடு கரைசல் தோன்றி அதில் சிறிதளவு பார்மிக் அமிலம் உண்டாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்மாக்சு_செயல்முறை&oldid=1838399" இருந்து மீள்விக்கப்பட்டது