பார்பில் தொடருந்து நிலையம்
பார்பில் | |||||
|---|---|---|---|---|---|
| இந்திய ரயில்வே நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | பார்பில், கெண்டுசார் மாவட்டம், ஒடிசா இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 22°06′18″N 85°22′08″E / 22.105°N 85.369°E | ||||
| ஏற்றம் | 477 m (1,565 அடி) | ||||
| தடங்கள் | ராசுகர்சவான்–பரசாம்டா–பார்பில் கிளை வழித்தடம் | ||||
| நடைமேடை | 3 | ||||
| இருப்புப் பாதைகள் | 5 அடி 6 அங்குலம் அகலப் பாதை | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | தரநிலை (தரை நிலையத்தில்) | ||||
| தரிப்பிடம் | இருக்கிறது | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | இயங்குகிறது | ||||
| நிலையக் குறியீடு | BBN | ||||
| மண்டலம்(கள்) | தென் கிழக்கு இரயில்வே மண்டலம் | ||||
| கோட்டம்(கள்) | சக்ரதர்பூர் | ||||
| வரலாறு | |||||
| திறக்கப்பட்டது | 1925 | ||||
| மின்சாரமயம் | 1966–67 | ||||
| முந்தைய பெயர்கள் | வங்காள நாக்பூர் ரயில்வே | ||||
| |||||
பார்பில் தொடருந்து நிலையம் (Barbil railway station) என்பது இந்திய மாநிலமான ஒடிசாவில் அமைந்துள்ள , கெந்துசார் மாவட்டத்தில் உள்ள பார்பில் பகுதிக்குச் சேவை வழங்குகிறது.
வரலாறு
[தொகு]ராசுகர்சவான்–டோங்கோபோசி வழித்தடம் 1924இல் திறக்கப்பட்டு 1925இல் குவா வரை நீட்டிக்கப்பட்டது.[1]
ராகர்சாவன்–டாங்கோபோசி வழித்தடம் 1960–61இல் மின்மயமாக்கப்பட்டது. இது 1965–66 இல் நோவாமுண்டி வரை நீட்டிக்கப்பட்டது. படபகார்–தியோசார் ற்றும் நோவாமுண்டி–பராசம்டா பிரிவுகள் 1966–67இல் மின்மயமாக்கப்பட்டன. இதே ஆண்டில் மின்மயமாக்கல் குவா மற்றும் போலனிகடன் வரை நீட்டிக்கப்பட்டது.[2] ராசகர்சாவன் மற்றும் டோங்கோபோசி இடையேயான கிளை வழித்தடம், இந்திய இரயில்வேயில் 25 KV-AC இழுவையுடன் மின்மயமாக்கப்பட்ட முதல் வழித்தடங்களில் ஒன்றாகும்.[3]
இரும்புத் தாது
[தொகு]பாரபில் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல தனியார் இரும்புத் தாதுச் சுரங்கங்கள் உள்ளன. பார்பில்-ஜோடா பகுதி, நாட்டிலேயே அதிக இரும்புத் தாது உற்பத்தி செய்யும் பகுதியாகும். இதன் ஆண்டு உற்பத்தி, கட்டிகள் மற்றும் நுண்ணிய துகள்களாக சுமார் 40 இருமடி ஆயிரம் டன்கள் ஆகும். மாநில அளவில், ஒடிசா நாட்டிலேயே மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளராக உள்ளது. இது சுபாஞ்ச் இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியாளர்களுக்கு அடிப்படை மூலப்பொருளாகும. இவர்களில் பலருக்கு சொந்தச் சுரங்கங்கள் கிடைப்பதில்லை. மேலும், இந்தியா தனது இரும்புத் தாது உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை ஏற்றுமதி செய்கிறது. இப்பகுதியில் இரும்புத் தாதுப் போக்குவரத்து என்பது ரயில்வே வலையமைப்பின் ஒரு முக்கியப் பணியாகும்.[4]
தொடருந்துகள்
[தொகு]பார்பிலில் இருந்து ஹவுராவிற்கு ஜன் சதாப்தி,[5] பூரிக்கு ஒரு விரைவுத் தொடருந்து,[6] டாடாநகருக்கு ஒரு பயணிகள் தொடருந்து[7] மற்றும் ரூர்கேலாவிற்கு நகரங்களுக்கு இடையேயான விரைவுத் தொடருந்து உள்ளது.[8]
ஓடும் தொடருகளின் பட்டியல்:
18416/18415 பூரி-பார்பில்-பூரி இன்டர்சிட்டி[9] 12022/12021 பார்பில்-ஹவுரா ஜன் சதாப்தி விரைவுத் தாெடருந்து[10] 58109/58110 டாடா-குவா பயணிகள் தாெடருந்து[11] 18403/18404 பார்பில்-ரூர்கேலா இன்டர்சிட்டி விரைவுத் தாெடருந்து
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Major Events in the Formation of S.E. Railway". South Eastern Railway. Archived from the original on 1 April 2013. Retrieved 2012-11-10.
- ↑ "History of Electrification". IRFCA. Retrieved 2012-11-10.
- ↑ "Chakradharpur Division". South Eastern Railway. Archived from the original on 16 October 2012. Retrieved 2012-11-10.
- ↑ Mohapatra, Sadananda (5 July 2012). "Poor demand, higher scrap import hit iron ore lump prices". Business Standard. http://business-standard.com/india/news/poor-demand-higher-scrap-import-hit-iron-ore-lump-rates/479428/.
- ↑ "Barbil–Howrah Janshatabdi". India Rail Info. Retrieved 2012-12-10.
- ↑ "Puri–Barbil Express". India Rail Info. Retrieved 2012-12-10.
- ↑ "Barbil–Tatanagar". India Rail Info. Retrieved 2012-12-10.
- ↑ "Barbil–Chakradharpur". India Rail Info. Retrieved 2012-12-10.
- ↑ "18416/Puri - Barbil Express - Puri to Barbil ECoR/East Coast Zone - Railway Enquiry".
- ↑ "Barbil–Howrah Janshatabdi". India Rail Info. Retrieved 2012-12-10.
- ↑ "Barbil–Tatanagar". India Rail Info. Retrieved 2012-12-10.