உள்ளடக்கத்துக்குச் செல்

பார்பல் வோக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதக்க சாதனைகள்
பார்பல் வோக்கல்
பார்பல் வோக்கல்
மகளிருக்கான தடகள விளையாட்டுகள்
நாடு  கிழக்கு ஜேர்மனி
ஒலிம்பிக்கு விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1976 மொண்ட்ரியால் 200 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 1976 மொண்ட்ரியால் 4 × 100 மீ தொடரோட்டம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1980 மாஸ்கோ 200 மீ]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 1980 மாஸ்கோ 4 × 100 மீ தொடரோட்டம்

பார்பெல் வோக்கல் (Bärbel Wöckel, பிறப்பு: 21 மார்ச் 1955) இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசைச் சேர்ந்த ஓர் முன்னாள் விரைவோட்ட வீரர் ஆவார். தனிப்பட்ட பிரிவுகளில் இவர் ஒருபோதும் உலக சாதனையை நிகழ்த்தவில்லை. இருப்பினும், டோரிஸ் மாலெட்ஸ்கி, ரெனேட் ஸ்டெச்சர் மற்றும் கிறிஸ்டினா ஹெய்னிச் ஆகியோருடன் செப்டம்பர் 8, 1974 அன்று உரோமில் நடந்த தடகளப் போட்டியில் 4 x 100 மீட்டர் தொடரோட்ட அணிகளின் ஒரு பகுதியாக இவர் உலக சாதனையை நிகழ்த்தினார். ஜி. டி. ஆர் தடகளப் போட்டிகளில் 1974,1977,1978,1981 முதல் 1984 வரை 4 x 100 மீட்டர் தொடரோட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்தார். 1976 ஆம் ஆண்டில் இவர் இடம்பெற்ற அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள், அந்த நேரத்தில் வோக்கல், தனது கிழக்கு ஜெர்மன் சகாக்கள் பலரைப் போலவே, அரசு ஒழுங்கமைக்கப்பட்ட ஊக்கமருந்து திட்டத்தில் பங்கேற்றதைக் காட்டியது. இருந்தபோதிலும், இவரது சாதனைகள் மற்றும் பதக்கங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இளமை வரலாறு

[தொகு]

1976 மற்றும் 1980 ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் பந்தயம் மற்றும் 4 × 100 மீட்டர் தொடரோட்டம் ஆகியவற்றில் தலா இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வோக்கல் வென்றார். அந்த ஆண்டுகளில் ஒவ்வொன்றிலும், வோக்கல் 200 மீ மற்றும் 4 × 100 மீட்டர் தொடரோட்டப் பந்தயங்களில் முதலிடம் பிடித்தார்.[1]

1974 ஐரோப்பிய தடகள வாகையாளர் போட்டியில் 4 × 100 மீ தொடரோட்டத்தின் நங்கூரமாக தங்கப் பதக்கம் வென்றார். அணி 42.50 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்தது. இவர் 200 மீட்டரில் தங்கத்தையும், 4 × 100 மீட்டர் தொடரோட்ட அணியின் ஒரு பகுதியாகவும், 1982 ஐரோப்பிய தடகள வாகையாளர் போட்டியில் 100 மீட்டரில் வெள்ளியையும் வென்றார்.

பார்பெல் வோக்கல் தனது சுறுசுறுப்பான வாழ்க்கையில் எஸ்சி மோட்டார் ஜெனா அணிக்காக விளையாடினார். 4 முறை தேசிய தடகள போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்திலும், 1984 இல் ஒரு உள்ளரங்கு பட்டத்தையும் வென்றார். இவர் 1981,200,4x100,4x400 மீட்டர்களில் ஓடி 3 ஐரோப்பிய கோப்பைப் பட்டங்களை வென்றார். 1981 ஆம் ஆண்டு சர்வதேச தடகள கூட்டமைப்புகள் சங்கம் நடத்திய உலகக் கோப்பையில் 4x100 மற்றும் 4x400 தொடரோட்டத்தில் 2 தங்கப் பதக்கங்களை வென்றார். 200-மீட்டரில் 3-வது இடத்தையும் பிடித்தார்.

சர்ச்சை

[தொகு]

இவரது போட்டியாளரான மரிட்டா கோச், ஜெனாஃபார்ம் நிறுவனத்தில் தனது உறவினர்கள் பணியில் இருந்ததால், பார்பெல் அதிக அளவு ஊக்க மருந்துகளைப் பெற்றதாக ஒரு கடிதத்தில் புகார் அளித்திருந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bärbel Wöckel fühlt sich noch fit". leichtathletik.de. dpa/pr. 21 March 2015. Retrieved 9 December 2020.
  2. Turnbull, Simon (5 September 2010). "After a quarter of a century, Koch remains untouchable". The Independent. https://www.independent.co.uk/sport/general/athletics/after-a-quarter-of-a-century-koch-remains-untouchable-2070743.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பல்_வோக்கல்&oldid=4216793" இலிருந்து மீள்விக்கப்பட்டது