உள்ளடக்கத்துக்குச் செல்

பார்பரா வார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்பரா மேரி வார்டு
பிறப்புஹிவொர்த், யார்க்
இறப்புமே 31, 1981(1981-05-31) (அகவை 67)
லாட்சுவொர்த், சசக்சு
கல்விசொர்பொன், பாரிஸ்
சொமெர்வில் கல்லூரி (Somerville College), ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
பணிபொருளாதார நிபுணர், எழுத்தாளர்
அறியப்படுவதுநிலையான மேம்பாட்டு தொடக்ககால ஆதரவாளர்
வாழ்க்கைத்
துணை
கமாண்டர் இராபர்ட் ஜேக்சன்
விருதுகள்ஆர்டர் ஆஃப் தெ பிரித்தானிய எம்பையர் (1974)
லைஃப் பியர் (1976)
ஜவகர்லால் நேரு விருது (1980)

பார்பரா வார்ட் (Barbara Ward, Baroness Jackson of Lodsworth; மே 23, 1914 – மே 31, 1981) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொருளாதார பெண் நிபுணராவார்.

பிறப்பு

[தொகு]

இவர் 1914 ஆம் ஆண்டு மே 23 அன்று இங்கிலாந்தில் பிறந்தார்.

பணிகள்

[தொகு]
  • 1935 ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
  • 1938 ஆம் ஆண்டு 'தி இண்டர் நேசனல் சேர் அவுட்' எனும் தனது முதல் புத்தகத்தை எழுதினார்.
  • சமத்துவமின்மையும் சுரண்டலும் இல்லாத பொருளாதாரமே சர்வதேச மேம்பாட்டுக்குப் பயன்படும் என்று வலியுறுத்தியவர்,பார்பரா.
  • ரெனே த்யூபோ என்பவருடன் இணைந்து 'ஒன்லி ஒன் எர்த்' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையைத் தயாரித்து 1972 ஆம் ஆண்டு ஐ.நா.விடம் சமர்ப்பித்தார்.

இறப்பு

[தொகு]

இவர் 1981 ஆம் ஆண்டு மே 21 அன்று இறந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பெண் இன்று". தி இந்து. 20 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2017.

ஆதார நூல்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பரா_வார்ட்&oldid=3925368" இலிருந்து மீள்விக்கப்பட்டது