பார்த்துன் அதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்த்துன் அதான்
Fartuunadan.jpg
2013இல் வாசிங்டனில் அதான்
பிறப்புசோமாலியா
பணிசமூக ஆர்வலர்
பட்டம்எல்மன் அமைதி மற்றும் மனித உரிமைகள் மையத்தின் நிர்வாக இயக்குநர்
வாழ்க்கைத்
துணை
எல்மன் அலி அகமது
பிள்ளைகள்நான்கு: அல்மாசு, இல்வாட் மற்றும் இமான்

பார்த்தூன் அப்திசலான் அதான் ( Fartuun Abdisalaan Adan) ஒரு சோமாலிய சமூக ஆர்வலர் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அதான் சோமாலியாவில் பிறந்து வளர்ந்தார். உள்ளூர் தொழிலதிபரும் அமைதி ஆர்வலருமான எல்மான் அலி அகமது என்பவரை மணந்தார். [1][2] இந்தத் தம்பதியருக்கு நான்கு மகள்கள் பிறந்தனர்.[3].

1996 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் உச்சத்தில் நடந்து கொண்டிருந்தபோது, அதானின் கணவர் தெற்கு மொகாதீசில் இருந்த அவர்களது குடும்பத்தின் வீட்டிற்கு அருகில் கொல்லப்பட்டார் [3]. பின்னர் அதான் 1990 ஆம் ஆண்டு கனடாவில் குடியேறினார் [4]. 2007ஆம் ஆண்டு அமைதி மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிடுவதற்காக சோமாலியா நாட்டிற்குத் திரும்பினார். [4]

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 அன்று, உதவித் தொழிலாளியாக சோமாலியாவுக்குத் திரும்பிய இவரது மகள் அல்மாசு எல்மனும் மொகாதீசு விமான நிலையத்திற்கு அருகே ஒரு காரில் சுட்டுக் கொல்லப்பட்டதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் [5].

தொழில்[தொகு]

தொழில் ரீதியாக, அதான் எல்மான் அமைதி மற்றும் மனித உரிமைகள் மையத்தின் நிர்வாக இயக்குநராக பணிபுரிகிறார். மொகாதீசுவை தளமாகக் கொண்ட அரசு சார்பற்ற அமைப்பான இந்நிறுவனம் மறைந்த இவரது கணவரின் நினைவாக நிறுவப்பட்டதாகும்[6] அதான் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார். அதே நேரத்தில் இவரது மகள் இல்வாட் எல்மான் என்பவரும் இவருடன் பணிபுரிகிறார்.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான நாட்டின் முதல் திட்டமான "சகோதரி சோமாலியா" என்ற அமைப்பையும் அதான் இணைந்து நிறுவினார்[4]

விருதுகள்[தொகு]

2013 ஆம் ஆண்டு அதானுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறையிலிருந்து சர்வதேச வீரதீரப் பெண்மணி என்ற விருது வழங்கப்பட்டது[6] .

2014 ஆம் ஆண்டு எல்மன் அமைதி மற்றும் மனித உரிமைகள் மையத்துடன் இணைந்து பணியாற்றியதற்காக செருமனி அரசாங்கமும் அதானுக்கு ஒரு விருதை வழங்கி சிறப்பித்தது.

2017 ஆம் ஆண்டு மனிதகுலத்தை விழிப்பூட்டுவதற்காக வழங்கப்படும் அரோரா பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட இறுதிப் போட்டியில் பார்த்தூன் அதான் மற்றும் இவரது மகள் இல்வாட் எல்மனின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nima Elbagir; Lillian Leposo. "Rape and injustice: The woman breaking Somalia's wall of silence". CNN. 8 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Documento - Somalia: Amnistia Internacional condena el asesinato de un pacifista". Amnesty International. 9 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "Documento - Somalia: Amnistia Internacional condena el asesinato de un pacifista". Amnesty International. 9 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 4.2 Nima Elbagir; Lillian Leposo. "Rape and injustice: The woman breaking Somalia's wall of silence". CNN. 8 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. Abdi Latif Dahur (2019-11-20). "'May God have mercy on her': Somali-Canadian aid worker shot dead in Mogadishu compound". National Post. https://nationalpost.com/news/canada/may-god-have-mercy-on-her-somali-canadian-aid-worker-shot-dead-in-mogadishu-compound. பார்த்த நாள்: 2019-11-22. "Elman comes from a prominent family of activists whose work has focused on social justice, women’s rights and rehabilitating children affected by Somalia’s decades-long war." 
  6. 6.0 6.1 "2013 International Women of Courage Award Winners". U.S. Department of State. 19 December 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  7. Aurora Prize. 2017 finalists.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்த்துன்_அதான்&oldid=2941254" இருந்து மீள்விக்கப்பட்டது