பார்த்திபேந்திரச் சோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பார்த்திபேந்திரச் சோழன் கல்கி எழுதிய பார்த்திபன் கனவு புதினத்தில் கூறப்படும் ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் காலத்தில் சோழ அரசு பல்லவர் அரசுக்கு அடங்கிய ஒரு குறுநில அரசாக விளங்கியது. அதன் பழைய புகழை மீட்குமாறு தன் மகனான விக்கிரமன் என்பவனிடம் கூறுகிறான். பல்லவர் அரசுக்கு பார்த்திபன் கப்பம் கட்ட மறுத்ததால் இரு அரசுகளுக்கும் போர் மூழ்கிறது. அதில் வீரமரணம் அடையும் தருவாயில் ஒரு சிவனடியாரிடம் தன் மகனை பேரரசனாக்குமாறு வேண்டுகிறார். அதற்கு சிவனடியார் நீ இறக்கும் தருவாயில் கேட்டதால் நீ கேட்டதைச் செய்கிறேன் எனக்கூறுகிறார். தாங்கள் யார் என்று பார்த்திபன் கேட்க சிவனடியார் தன் வேசத்தை கலைக்கிறார். அவரே பல்லவர்களின் பேரரசரான முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற மாமல்லன்.

பார்த்திபன் கனவு முடிவில் சோழர்கள் பார்த்திபன் கூறிய இழந்த புகழை மீட்டல் என்ற கொள்கையின் படியே பிற்காலத்தில் பேரரசாக விழங்கினார்கள் என்று வர்ணிக்கப்பட்டிருந்தது.