பார்த்திபன் கருப்பையா
பார்த்திபன் கருப்பையா Parthiban Karuppiah | |
|---|---|
ஈஜோக் சட்டமன்றத் தொகுதி | |
| பதவியில் 28 ஏப்ரல் 2007 – 8 மார்ச் 2008 | |
| முன்னையவர் | கே. சிவலிங்கம் |
| பெரும்பான்மை | 1,850 (2007) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | Parthiban s/o Karuppiah கோலா சிலாங்கூர், சிலாங்கூர், மலேசியா |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | |
| பிற அரசியல் தொடர்புகள் | |
| முன்னாள் மாணவர் | மலாயா பல்கலைக்கழகம் |
| பணி | அரசியல்வாதி, ஆசிரியர் |
பார்த்திபன் கருப்பையா அல்லது கே. பார்திபன் (ஆங்கிலம்; மலாய்: Parthiban Karuppiah அல்லது Parthiban s/o Karuppiah) என்பவர் மலேசிய அரசியல்வாதி; 28 ஏப்ரல் 2007 முதல் 8 மார்ச் 2008 வரை சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில், ஈஜோக் சட்டமன்ற உறுப்பினராக (MLA) பணியாற்றினார்.[1] 2003-ஆம் ஆண்டில், முன்னாள் தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டத்தோ நோ ஓமரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.[2]
இவர் பாரிசான் நேசனல் (BN) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மஇகா கட்சியின் (MIC) உறுப்பினராக இருந்தார். பின்னர் பெரிக்காத்தான் (PN) கூட்டணியின் பெர்சத்து கட்சியில் இணைந்தார். தற்போது வரையில் பெரிக்காத்தான் கூட்டணியில் உள்ளார்.
ஈஜோக் சட்டமன்றத் தொகுதியின் 2023 வாக்காளர் எண்ணிக்கை:[3]
வாழ்க்கை
[தொகு]சிலாங்கூர், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள ராஜா மூசா தோட்டத்தில் பிறந்தவர். கோலாலம்பூரில் உள்ள செரி கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். இதே கல்லூரியில்தான் 1981-ஆம் ஆண்டில் மலேசிய ஊடகவியலாளர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்[4] பயிற்சி பெற்றார்.
பின்னர் பார்த்திபன் கருப்பையா, மலாயா பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டமும், பின்னர் கல்வி மேலாண்மை பிரிவில் முதுகலை கல்வி பட்டமும் பெற்றார்.[2]
அரசியலில் நுழைவதற்கு முன்பு 1994 முதல் 2006 வரை தஞ்சோங் காராங்கிலும் கோலா சிலாங்கூரிலும் உள்ள பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக பார்த்திபன் பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]ஏப்ரல் 16, 2007 அன்று, அரசியலில் அவர் புதியவராக இருந்தபோதிலும், 2007 இஜோக் இடைத்தேர்தலில் பாரிசான் நேசனல் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] நேரடிப் போட்டியாக நடைபெற்ற அந்த இடைத்தேர்தலில் பிகேஆர் கட்சியின் காலித் இப்ராகிமை (Khalid Ibrahim) 1,850 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.
2008 மலேசியப் பொதுத் தேர்தலில், பார்த்திபன் கருப்பையா சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் N10 புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இறுதியில் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த முத்தையா மரியப்பிள்ளையிடம் 297 வாக்குகள், றிய பெரும்பான்மையில் தோல்வியடைந்தார்.
2023 ஆகத்து மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து பார்த்திபன் மஇகா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[5][6]
தேர்தல் முடிவுகள்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | மொத்த வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2007 | N11 ஈஜோக் | பார்த்திபன் கருப்பையா (மஇகா) |
5,884 | 59.33% | அப்துல் காலித் இப்ராகிம் (பிகேஆர்) | 4,034 | 40.67% | 10,052 | 1,850 | 81.90% | ||
| 2008 | N10 புக்கிட் மெலாவத்தி | பார்த்திபன் கருப்பையா (மஇகா) |
4,444 | 48.38% | முத்தையா மரியப்பிள்ளை (பிகேஆர்) |
4,741 | 51.62% | 9,707 | 297 | 75.27% | ||
| 2013 | N11 ஈஜோக் | பார்த்திபன் கருப்பையா (மஇகா) |
7,783 | 47.73% | இட்ரிசு அகமது (பிகேஆர்) | 8,522 | 52.27% | 16,638 | 739 | 89.26% | ||
| 2018 | பார்த்திபன் கருப்பையா (மஇகா) |
6,800 | 34.46% | இட்ரிசு அகமது (பிகேஆர்) | 8,914 | 45.18% | 20,167 | 2,114 | 87.40% | |||
| ஜெப்ரி மேஜான் (பாஸ்) | 3,942 | 19.98% | ||||||||||
| குமரன் தமிழ்தாசன் (மக்கள் கட்சி) | 76 | 0.39% | ||||||||||
விருதுகள்
[தொகு]
மலேசியா
- மலேசிய விருதுகள் (KMN) (2014)[10]
- மலேசிய விருதுகள் (AMN) (2011)[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parthiban Karuppiah". ir.upm.edu.my. Retrieved 10 February 2026.
- ↑ 2.0 2.1 2.2 Manirajan, R., "EC: Campaigns lack substance", The Sun, 20 April 2007
- ↑ "15th Selangor State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
- ↑ "வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - Magazine For Arts And Literature". www.vallinam.com.my. Retrieved 10 February 2026.
- ↑ "Parthiban confirms being expelled by MIC". www.nst.com.my. 25 July 2023.
- ↑ "State polls: Ex-Ijok rep Parthiban, 50 MIC members pledge support for PN". www.thestar.com.my. 28 July 2023.
- ↑ "The Star Online GE14". The Star (Malaysia). https://election.thestar.com.my/. பார்த்த நாள்: 24 May 2018. Percentage figures based on total turnout.
- ↑ "Results of N10 Bukit Melawati 2023". China Press. https://live.chinapress.com.my/ge15/2023election/Selangor/SELANGOR-N48.
- ↑ "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. Retrieved 4 February 2017. Results only available from the 2004 Malaysian general election.
- ↑ "Senarai Penerima Kesatria Mangku Negara Tahun 2014" (PDF). www.istiadat.gov.my.
- ↑ "Senarai Penerima Ahli Mangku Negara Tahun 2011" (PDF). www.istiadat.gov.my.
மேலும் காண்க
[தொகு]- ஈஜோக்
- ஈஜோக் சட்டமன்றத் தொகுதி
- மலேசிய இந்திய அரசியல்வாதிகளின் பட்டியல்
- மலேசிய இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள்