பார்சுட்டோவைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பார்சுட்டோவைட்டு
Barstowite
Barstowite-90280.jpg
கிரீசிலுள்ள லேவ்ரியான் மாவட்ட்த்தின் பாசா இலிமானி பகுதியில் கிடைத்த பார்சுட்டோவைட்டு கனிம்ம்.
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுPb4[Cl6|CO3]•H2O
இனங்காணல்
நிறம்வெண்மையும் ஒளிபுகும் தன்மையும்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுவிடாப்பிடியான மிளிர்வு
கீற்றுவண்ணம்வெண்மை

பார்சுட்டோவைட்டு (Barstowite) என்பது Pb4[Cl6|CO3]•H2O, என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒற்றைச்சரிவச்சு படிகத்திட்டத்தில் வெண்மை நிறத்துடன் ஒளிபுகும் தன்மை கொண்டதாக இக்கனிமம் காணப்படுகிறது. மோவின் அளவுகோலில் பார்சுட்டோவைட்டு கனிமத்தின் கடினத்தன்மை அளவு 3 என்று கணக்கிடப்படுகிறது. வெண்மையான கீற்றுகளும் விடாப்பிடியான வைரத்தின் பளபளப்பும் இக்கனிமத்தின் பண்புகளாகும்[1].

ஐக்கிய இராச்சியத்தின் கோர்ன்வால் பகுதியிலுள்ள செயிண்ட் எண்டெல்லியன் என்ற குக்கிராமத்தில் பார்சுட்டோவைட்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது. 1947 முதல் 1982 வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்த இரிச்சர்டு டபிள்யூ பார்சுட்டோவ் என்ற கனிமச் சேகரிப்பாளர் நினைவாக இக்கனிமத்திற்கு பார்சுட்டோவைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது[1] (1947–1982), a Cornish mineral collector.[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்சுட்டோவைட்டு&oldid=2619516" இருந்து மீள்விக்கப்பட்டது