பார்சி தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்சி தாலுகா
बार्शी तालुका
தாலுகா
சோலாப்பூர் மாவட்டத்தில் பார்சி தாலுகாவின் அமைவிடம்
சோலாப்பூர் மாவட்டத்தில் பார்சி தாலுகாவின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்சோலாப்பூர்
தலைமையிடம்பார்சி
பரப்பளவு
 • மொத்தம்1,433.1 km2 (553.3 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,72,711
 • அடர்த்தி260/km2 (670/sq mi)
 • பாலின விகிதம்929
வருவாய் கிராமங்கள்137
குறு வட்டங்கள்9
சராசரி மழைப்பொழிவு594.8 மி மீ

பார்சி தாலுகா (Barshi taluka), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தின் 11 தாலுகாக்களில் ஒன்றாகும். [1] இதன் நிர்வாகத் தலைமையிடம் பார்சி நகரத்தில் உள்ளது. இத்தாலுகா பார்சி எனும் நகராட்சி மற்றும் 9 குறு வட்டங்களையும், 137 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[2] 1541.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தாலுகாவில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 242 பேர் வீதம் வாழ்கின்றனர்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 79,969 வீடுகளைக் கொண்ட பார்சி தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 3,72,711 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 1,93,777 மற்றும் 1,78,934 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 923 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 42971 - 11.53% ஆகும். சராசரி எழுத்தறிவு 69.83% ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 13.58% மற்றும் 1.28% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.27%, இசுலாமியர்கள் 9.16%, பௌத்தர்கள் 0.34%, சமணர்கள் 0.89% மற்றும் பிறர் 0.34% ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்சி_தாலுகா&oldid=3340937" இலிருந்து மீள்விக்கப்பட்டது