உள்ளடக்கத்துக்குச் செல்

பார்சிலோனா பெருங்கோவில்

ஆள்கூறுகள்: 41°23′02″N 2°10′35″E / 41.38389°N 2.17639°E / 41.38389; 2.17639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்சிலோனா பெருங்கோவில்
Cathedral of the Holy Cross and Saint Eulalia
Catedral de la Santa Creu i Santa Eulàlia
Catedral de la Santa Cruz y Santa Eulalia
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பார்சிலோனா, காத்தலோனியா, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்41°23′02″N 2°10′35″E / 41.38389°N 2.17639°E / 41.38389; 2.17639
சமயம்Roman Catholic
மாகாணம்பார்சிலோனியத் திருச்சபை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1867
நிலைதேவாலயம்
செயற்பாட்டு நிலைActive
தலைமைலூயிஸ் மார்டினெஸ் சிஸ்டாக்
இணையத்
தளம்
www.catedralbcn.org

பார்சிலோனா பெருங்கோயில் அல்லது புனித எலுலேலியா பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral de la Santa Cruz y Santa Eulalia) என்பது எசுப்பானியாவின் பார்சிலோனாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும்.[1] புனித எலுலேலியா உரோமானியக் காலத்திலே இரத்த சாட்சியாக மறித்தவர் என நம்பப்படுகின்றது. இவரது உடல் இப்பெருங்கோவிலின் நிலவறையிலே உள்ளதாக கூறப்படுகின்றது. இது கோதிக் கட்டிடக்கலைக்குப் புகழ் பெற்றது. இவ்வாலயம் பார்சிலோனியா கத்தோலிக்க உயர்-மறைமாவட்டத்தின் பேராலயம் ஆகும். 13 ஆம் 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் இவ்வாலயம் கட்டப்பட்டது.

இவாலயத்தினுள் உள்ள தோட்டத்தில் குளம் 1448 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதில் தற்போது பதின்மூன்று வெள்ளை நிற வாத்துக்கள் விடப்பட்டுள்ளன (எலுலேலியா கொலை செய்யப்படும் போது அவருக்கு வயது பதின்மூன்று).[2]

இவ்வாலய கூரையில் மிருகங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை வீட்டு மற்று புராண ரீதியான மிருகங்களின் சிற்பங்கள் ஆகும்.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Though sometimes inaccurately so called, the famous Sagrada Família is not a cathedral
  2. http://www.catedralbcn.org/

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Catedral de Barcelona
என்பதில் ஊடகங்கள் உள்ளன.