பார்சானா அசுலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பார்சானா அசுலாம்
Farzana Aslam
பிறப்புவாகு படைநகர், பஞ்சாப் மாகாணம், பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு
வாழிடம்மான்செசுட்டர், இங்கிலாந்து, இலாகூர், பஞ்சாப் மாகாணம்
குடியுரிமைபாக்கித்தானியர்
தேசியம்பாக்கித்தானியர்
துறைஇயற்பியல், வானியல்
பணியிடங்கள்மான்செசுட்டர் பல்கலைக்கழகம் (UM)
கவெண்ட்ரி பலகலைக்கழகம் (CU)
பஞ்சாப் பல்கலைக்கழகம் (PU)
இயற்பியல் நிறுவனம் (IP)
விண்வெளி, கோள்சார் வானியற்பியல் (ISPA)
கல்வி கற்ற இடங்கள்இயற்பியல், வானியற் பள்ளி, மான்செசுட்டர் பல்கலைக்கழகம் (SPAUM)
பஞ்சாப் பல்கலைக்கழகம் (PU)
குவாய்தி அசாம் பல்கலைக்கழகம் (Qau)
ஆய்வு நெறியாளர்டேவிட் ஜே. பிங்சு, பவுல் ஓ பிறையான்
அறியப்படுவதுஒருபால் கடத்திசார் மீநுண் துகள்களால் கிளர்வூட்டப்பட்ட பலபடிக் கூட்டமைவு ஆய்வும், ஒளியன், ஒருங்கொளி அறிவியல் புலங்கள் ஆய்வும்
விருதுகள்இயற்பியல் நிறுவன பாராட்டு விருது (2004)
இயற்பியல் நிறுவன ஒளியன்சார் இயற்பியலுக்கான பாராட்டு விருது (2006)

பார்சானா அசுலாம் (Farzana Aslam) ஒரு பாக்கித்தான இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் கவென்ட்ரி பல்கலைக்கழகத்தில் கணிதவியல், இயற்பியல், வானியல் பட்டப்படிப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[1] இதற்கு முன்பு, பாக்கித்தான கராச்சி பலகலைக்கழக விண்வெளி, கோள்சார் வானியற்பியல் நிறுவனத்தின் இயற்பியல், வானியலுக்கான வருகைதரு பேராசிரிராக இருந்துள்ளார்.

இளமையும் கல்வியும்[தொகு]

அசுலாம், வாகு படைத்தள நகர் எனும் மாநகரம் சார்ந்த அமைதிமிக்க உயர் எழுத்தறிவு வீதமுள்ள புறநகரில் பிறந்தார். இவர் தான் பிறந்த புறநகரில் அமைந்த பொறியியல் கல்லூரியில் பயின்றார்.[2] பிறகு, இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் பெற்று , அங்கே இயற்பியலில் அறிவியல் இளவல் பட்டத்தைப் பெற்றார்.[3] பின்னர், இவர் இசுலாமாபாத்துக்குச் சென்று குவாய்தி அசாம் பலகலைக்கழகத்தில் சேர்ந்து, அங்கே இயற்பியலில் அறிவியல் முதுவர் பட்டத்தைப் பெற்றார்.

பட்ட மேற்படிப்புக்குப் பிறகு, அங்கேயே ஒருங்கொளி இயற்பியலிலும் குவைய இயற்பியலிலும் இளநிலை ஆய்வர் பட்டத்தையும். பிறகு, இவர் பெரும்பிரித்தானிய நாட்டிற்குச் சென்று மன்செசுட்டர் பலகலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு, அவர் அந்தப் பலகலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் நிறுவனத்தில் இயற்பியலிலும் வானியலிலும் 2005 இல் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றார். இவர் 2005 இல் அங்கே முனவாகச் செயல்பட்ட "ஒளியன் இயற்பியல் குழு"வில் சேர்ந்து ஈரொளியன் இயற்பியலிலும் ஒருங்கொளி ஓளியனியலிலும் சிறப்புப் பயிற்சியைப் பெற்றார்.[4] இவர் 2005 இல் ஒருங்கொளி இயற்பியலில் முனைவர் பட்ட்த்தைப் பெற்றார்.[5]

இயற்பியல் பணி[தொகு]

இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றதும், அசுலாம் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அங்கு, இவர் பட்டப் படிப்பு மாணவருக்கும் பட்ட மேற்படிப்பு மாணவருக்கும் இயற்பியலில் பாடம் எடுத்துள்ளார்.[6]> மான்செசுட்டர் பலகலைக்கழகத்தில் வானியல், இயற்பியல் பள்லியில் சேர்ந்ததுமே, இவர் தன் ஆராய்ச்சியை முனைவாகத் தொடங்கிவிட்டார். இவரது ஆய்வு ஒருபால் கடத்திசார் மீநுண் துகள்களால் கிளர்வூட்டப்பட்ட பலபடிக் கூட்டமைவு, ஒளியன், ஒருங்கொளி அறிவியல் புலங்கள் ஆகியவற்றில் அமைந்தது. தகவல் தேக்கத்திலும் கையாளலிலும் தேவையான உயர்துலங்கல் வீதத்தையும் ஒளிவிளிம்பு விலகல் திறமையையும் மேம்படுத்தவே முதலில் குறிப்பிட்ட புலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.காப்போது அவர் கணிதவியல் பட்டப்படிப்பு மாணவ்ருக்கும் பாடம் எடுத்துள்லார். பலகலைக்கழக மாணவருக்கு இயற்பியல், கணிதவியல் தனிப்பயிற்சியும் வழங்கியுள்ளார்.[7]

மேலும் இவர் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தின் பொறியியல், இயற்பிய அறிவியல் துறைகளில் பரவலான பங்கேற்பை வென்றெடுக்கும் ஓகுதென் பயிற்றல் ஆய்வுநல்கைப் பரப்புரைத் திட்டத்திலும் முனைனவாகச் செயல்பட்டார்பிந்த ஆய்வுநல்கையின் நோக்கம் அறிவியலாளரை இளைஞர்களுக்கான வழிகாட்டு ஆளுமைகளாக பெரும்பிரித்தானிய அரசுப் பள்ளிகளின் மாணவரிடையே அறிமுகப்படுத்தில் அவர்களை அரிவியலிலும் பொறியியலிலும் ஆர்வமுடன் பங்கேற்கச் செய்வதே ஆகும். இவரது இத்திட்டப் பங்களிப்புகளுக்காக 2004 செப்டம்பர் 5 முதல் 9 வரை கிளாசுக்கோவில் நடந்த ஒளியன் 04 மாநாட்டுக் கருத்தரங்கில் இயற்பியல் நிறுவனம் இவருக்குப் பாராட்டு விருதை நல்கியது.

பாக்கித்தானியப் பெண்கள் பற்றிய பார்வை[தொகு]

பார்சானா பாக்கித்தானிய மகளிர் ஒவ்வொரு துறையிலும் பங்கேற்கவல்ல வல்லமையும் அறிதிறனும் வாய்ந்தவர்கள் எனஉறுதியாக நம்புகிறார். அவர்கள் சமூக வளர்ச்சிக்குப் பங்களிக்கவும் அதை வளர்த்தெடுப்பதில் முதன்மையான பாத்திரம் வகித்து அதன் அடித்தளத்தை வலிமைப்படுத்த முடியும். அவர்கள் தங்கள் முழுத் திறமைகளையும் அனைத்துத் துறைகளிலும் செலுத்தவேண்டும். அவர்கள் தங்கள் இசுலாமிய விழுமியங்களைப் போற்றியபடியே, சொந்த, சமூக, பொருளியல், அரசியல் களங்களில் பணியாற்ற முடியும்.

வெளியீடுகள்[தொகு]

ஆய்வு வெளியீடுகள்[தொகு]

 • Spectroscopic studies of nanoparticle-sensitised photorefractive polymers 17 by Farzana Aslam; David J. Binks; Steve Daniels; Nigel Pickett; Paul O'Brien. Journal of Chemical Physics volume 316, 2005, P. 17
 • Photorefractive performance of polymer composite sensitised by CdSe nanoparticles passivated by 1-hexadecylamine, by David J. Binks, Mark D. Rahn and David P. West, Paul O’Brien and Nigel Pickett. Journal of Modern Optics, Volume52 ( 7), 2005, P 945-953.
 • Photorefractive performance of a CdSe/ZnS core/shell nanoparticle sensitised polymer. Journal of Chemical Physics volume 316, 2005, P 171-
 • Effect of nanoparticle composition on the performance of photorefractive polymers, by F. Aslam, J.Stevenson-Hill, David J. Binks, Steve Daniels, Nigel Pickett and Paul O’ Brien. Chemical Physics Volume 333, 2007, P- 42

மேற்கோள்கள்[தொகு]

 1. Dr. Farzana Aslam, The Staff. "Dr Farzana Aslam". Coventry University.
 2. Pride of Pakistan (2004), Pride of Pakistan: Farzana Aslam, retrieved 2010 Check date values in: |accessdate= (help)
 3. Faculty of Engineering and Physical Sciences, The University of Manchester, Farzana Aslam (Faculty of Engineering and Physics Sciences)
 4. http://www.prideofpakistan.com:8080/maincontroller?requestId=4&userId=184
 5. Pakistan Defence Journal, See Farzana Aslam, A Tribute to the Women of Pakistan
 6. See Farzana Aslam (4 February 2010). "Former Ogden Trust Teaching Fellows at Manchester". The Ogden Trust. பார்த்த நாள் 2010.
 7. Unknown. "Lay out: Postgraduate Brochure 2005/06" (pdf). School of Engineering and Physical Sciences. Manchester University.[தொடர்பிழந்த இணைப்பு]

Under the reference the following link is expired;

http://www.prideofpakistan.com:8080/maincontroller?requestId=4&userId=184 

Instead the following link is live; http://prideofpakistan.com/women_corner_detail.php?name=FarzanaAslam&id=70

ஆராய்ச்சி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்சானா_அசுலாம்&oldid=2809625" இருந்து மீள்விக்கப்பட்டது