பார்க் அயாத், ஐதராபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Park Hyatt Hyderabad
Park Hyatt Hyderabad Logo.jpg
Park Hyatt Hyderabad.jpg
Park Hyatt Hyderabad
Hotel chainHyatt
பொதுவான தகவல்கள்
இடம்India
முகவரிசாலை எண்: 2, பஞ்சாரா மலை, ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம், 500034, இந்தியா
ஆரம்பம்29 April 2012
ManagementGlobal Hyatt Corporation
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை8
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்John Portman & Associates
பிற தகவல்கள்
Number of rooms185
Number of suites24
இணையத் தளம்
hyderabad.park.hyatt.com

பார்க் அயாத் ஆந்திர பிரதேச மாநிலம், ஐதராபாத் அருகிலுள்ள பஞ்சாரா மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர ஹோட்டல் ஆகும். இது ஏப்ரல் 29, 2012 ல் திறக்கப்பட்டது. இது பார்க் ஹயாத் கட்டிடத்தின் 29வது கிளையாக உருவெடுத்துள்ளது. இது ஏறக்குறைய 32,256 சதுர மீட்டர் (347,200 சதுர அடி) பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

ஏறக்குறைய 32,256 சதுர மீட்டர் (347,200 சதுர அடி) பரப்பளவில் கட்டப்பட்ட இந்த ஹோட்டல் 2006 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது காயத்ரி ஹை-டெக் ஹோட்டல்களுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் ஹயாத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தோராயமாக 7 மில்லியன் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, ஏப்ரல் 29, 2012 ல் வெற்றிகரமாக திறக்கப்பட்டது.

தி ஹோட்டல்[தொகு]

பார்க் அயாத் ஹோட்டல் 185 அறைகளையும், 24 சூட்டுகளையும் கொண்டுள்ளது. இந்த 24 சூட்டுகளும் முதல் ஆறு அடுக்குமாடியில் 42 சேவை அபார்ட்மென்ட்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு விருந்தினர் அறையும் 463 சதுர அடிக்கு குறையாமல் உள்ளது. இது ஐதராபாத்தில் உள்ள மற்ற ஹோட்டல் அறைகளை விட அதிக இடவசதி ஆகும். இந்த ஹோட்டல் ஜான் போர்ட்மேன் & அசோசியேட்ஸால் கட்டப்பட்டது. ‘த மேனர்’ என்று அழைக்கப்படும் அமைப்புடன் கூடிய இந்தியாவின் முதல் ஹோட்டல் இதுவாகும். அயாத் ஹோட்டல் எட்டு அடுக்குகளைக் கொண்டுள்ளது. கூட்டங்களுக்காகவும் நிகழ்ச்சிகளுக்காகவும் சுமார் 1600 சதுர மீட்டருடன் கூடிய (17,0000 சதுர அடி) இடவசதி உள்ளது. முக அழகுக்காகவும் உடல் அழகுக்காகவும் தனித்தனி அலங்கார மையங்கள் உள்ளன.

நிகழ்வுகள்[தொகு]

UNWTO, டாட்டா வீ கனெக்ட், மலேசியன் டிரேட் ஹை கமிஸன், எச்.ஏ.எல் பார்லிமென்டரி போன்றவற்றின் நிகழ்ச்சிகளுக்கு முக்கிய இடமாக இந்த ஹோட்டல் திகழ்கிறது.

இருப்பிடம்[தொகு]

பஞ்சாரா மலைப்பகுதியின் முக்கிய இடத்தில் அமைந்துள்ளது. ஜூப்ளி, பஞ்சார மலைப்பகுதிகளின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. மத்திய வணிக மாவட்டத்திலிருந்து வெறும் 10 நிமிட பயணத்தில் அடையலாம்.

மேலும், ஹைதராபாத் கன்வென்ஷன் சென்டர், ஹை டெக் சிட்டி, சைபெர் டவர்ஸ் ஆகியவற்றிலிருந்து 20 நிமிடங்களிலும், சார்மினாரில் இருந்து 15 நிமிடங்களிலும் ஹோட்டலை அடைய இயலும். அருகிலுள்ள போக்குவரத்து வசதிகள்:

 1. ராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் – சுமார் 37 கிலோ மீட்டர் / 40 நிமிடப் பயணம்
 2. செகந்திரபாத் தொடருந்து நிலையம் - சுமார் 14 கிலோ மீட்டர் / 21 நிமிடப் பயணம்
 3. நம்பல்லி தொடருந்து நிலையம் – 8.6 கிலோ மீட்டர் / 17 நிமிடப் பயணம்

அத்துடன் இங்கிருந்து 20 நிமிடங்களில் கோல்கொண்டா கோட்டையையும், 17 கிலோ மீட்டரில் பவுல்டர் மலைப்பகுதியின் கோல்ஃப் பகுதியையும் அடைய இயலும்.

அறைகளின் வகைகள்[தொகு]

பல்வேறு வகையான அறை வசதிகளைக் கொண்ட ஹயாத் ஹோட்டலின் சில வகைகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

 1. பார்க் கிங்க் அறை
 2. பார்க் சூட் கிங்க் அறை
 3. ஹயாத் கிங்க் அறை
 4. ஹயாத் ட்வின் அறை
 5. ஹயாத் டீலக்ஸ் அறை

பார்க் மற்றும் பார்க் சூட் கிங்க் அறையின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் : குளிரூட்டும் சாதனம், மினி பார், பாதுகாப்பு, தொலைபேசி வசதி, இணைய வசதி, செய்தித்தாள், வண்ணத் தொலைக்காட்சி, தனிப்பட்ட குளியல் அறை.

ஹயாத் கிங்க் அறை, ஹயாத் ட்வின் அறை மற்றும் ஹயாத் டீலக்ஸ் கிங்க் அறையின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் : மினி பார், பாதுகாப்பு, தொலைபேசி வசதி, இணைய வசதி, செய்தித்தாள், வண்ணத் தொலைக்காட்சி, தனிப்பட்ட குளியல் அறை, குளிர்பதனப் பெட்டி.

இத்துடன் பிற வசதிகள் அந்தந்த அறைகளின் கட்டணத்திற்கேற்ப வேறுபடுகின்றன. ஒவ்வொரு வகை அறையிலும் அதற்கான வசதிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

வசதிகள்[தொகு]

இவர்கள் தனித்தன்மையும் கனிவும் கொண்ட விருந்தினர் சேவையை வழங்குகின்றனர். போக்குவரத்து, வணிகச் சேவை, நிகழ்ச்சி நடத்துமிடம், திருமணத்திற்கான முழுத் திட்டமிடல் உள்ளிட்டவற்ற்றை செய்கின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக சேவைகள் செய்யப்படுகின்றன. நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்புக்கும் இதர வசதிகளுக்கும் பாதுகாப்பு அமைப்பினர் பொறுப்பெடுத்துக் கொள்கின்றனர். பொதுவான ஓய்விடங்கள், உணவகங்கள், அறைகள் மற்றும் முகவாயில் என அனைத்துப் பகுதிகளிலும் வீல் சேர் எனப்படும் கால் சக்கரத்திற்கான வசதி அமைக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்[தொகு]

 • குளிரூட்டும் சாதனம்
 • உணவகம்
 • பார்
 • அறைச் சேவை
 • கம்பியில்லா இணையச் சேவை
 • இணையவசதி
 • வணிக மையம்
 • உடற்பயிற்சிக் கூடம்
 • காஃபி ஷாப்
 • நீச்சல் குளம்

விடுதியில் வசதிகள்[தொகு]

 • அதிவிரைவாக பதிவு செய்தல்
 • அதிவிரைவாக வெளியேறுதல்
 • வரவேற்பு அறை
 • முடி உலரவைப்பான்
 • வெளிப்புற குளம்
 • தொலைபேசி சேவை
 • குளத்துடன் இணைந்த சிறு உணவகம்
 • பொருட்களை தூக்கிச் செல்ல உதவியாளர்கள்
 • கட்டணத்துடன் கூடிய வயரில்லா இணையச்சேவை

வணிகச் சேவைகள்[தொகு]

 • அதிவிரைவாக பதிவு செய்தல்
 • அதிவிரைவாக வெளியேறுதல்
 • வரவேற்பு அறை
 • முடி உலரவைப்பான்
 • வெளிப்புற குளம்
 • தொலைபேசி சேவை
 • குளத்துடன் இணைந்த சிறு உணவகம்
 • பொருட்களை தூக்கிச் செல்ல உதவியாளர்கள்
 • கட்டணத்துடன் கூடிய வயரில்லா இணையச்சேவை

குறிப்புகள்:[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]