பார்க்கவகுலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்க்கவகுலம் அல்லது உடையார்
வகைப்பாடுபிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
மதங்கள்இந்து
மொழிகள்தமிழ்
நாடுஇந்தியா
மூல மாநிலம்தமிழ்நாடு
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
தமிழ்நாடு
தொடர்புடைய குழுக்கள்தமிழர், வேளிர்

பார்க்கவகுலம் (Parkavakulam) (பரவலாக உடையார் என்று அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் தமிழகத்தில் வாழும் ஓர் இனக்குழுவினர் ஆகும். இவர்களுக்கு சுருதிமான், நத்தமான், மலையமான் என்ற மூன்று பிரிவுகளை கொண்டவர்கள். உடையார், மூப்பனார், நயினார் போன்ற பட்டங்கள் கொண்டவர்கள். இச்சமூகத்தில் சிலர் கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்தவர்களும் உள்ளனர்.[1][2]

இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[3]


இன்றைய நிலை

உடையார் சமுதாயத்தினர் பெரும் நிலப்பிரபுக்கள் ஆகவே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பண்ணையார், மிராசுதாரர், பெரிய பண்ணையார், போன்ற அடையாளம் கொண்டு பெரும் நிலங்களை உடையவர்களாகவே உள்ளனர். சமுதாயத்தில் உயர் நிலையிலேயே அவர்கள் உள்ளனர். இவர்களை மலையமான் பிரிவை சார்ந்தவர்கள் அசைவம் உண்பதில்லை. இந்த சமுதாயத்தை சார்ந்த விவசாயக் கூலிகளாக சிலர் மட்டுமே உள்ளனர், பலர் சொந்த நிலங்களில் சொந்த விவசாயம் செய்து உயரிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

சமயம்

உடையார்கள் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் குலதெய்வ வழிபாடு இவர்களிடத்தில் உண்டு. இவர்களை பூசைக்கார உடையார்( திருநீரு பூசுபவர்) எனவும் அழைப்பதுண்டு. குல தெய்வங்களுக்கு பலியிடும் பழக்கம் நத்தமான் மற்றும் சுருதிமான் பிரிவைச் சேர்ந்த உடையார்கள் பின்பற்றுகின்றனர். மலையமான் பிரிவை சேர்ந்த உடையார்கள் அசைவம் உண்ணாத சைவம் சாப்பிடும் உடையார்கள் என்ற காரணத்தினால் அவர்களுள் பலர் குல தெய்வங்களுக்கு பலியிடும் வழக்கம் இல்லாதவர்கள். சிலர் பலி இடுவர் ஆனால் அதனை உண்ணமாட்டார்.

பட்டம்

உடையார் சாதியினரான இவர்களை வடதமிழகத்தில் குறிப்பாக கடலூர் போன்ற பகுதிகளில் உடையார் எனவும், தஞ்சை, திருச்சியிலிருந்து தென்பகுதிகளில் மூப்பனார் எனவும், திருக்கோவிலூர் போன்ற நடுநாட்டுப்பகுதிகளிலும், தெற்கே சில இடங்களிலும் உடையார் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மலையமான் , நத்தமான், சுருதிமான் என்ற மூன்று குடிகளாக உள்ளனர். இவர்களில் நத்தமான் பட்டம் கொண்ட மக்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் நயினார் பட்டம் கொண்டு அழைக்கப்படுகின்றனர். மலையமான் சைவ உணவுப்பழக்கம் மேற்கொள்பவர்கள். மேலும் நத்தமான், மலையமான் பட்டம் கொண்டவர்கள் எல்லா இடங்களிலும் உடையார் என்று அழைக்கப்படுகின்றனர். சுருதிமான் பட்டம் உடையோர் பொதுவாக மூப்பனார் என்றும் அழைக்கப்படுவர்.

பிற சாதியில் உடையார் பட்டம்

உடையார் என்னும் பட்டத்தை வெள்ளாளர்களும்[சான்று தேவை] வன்னியர்களும், வட மாவட்டத்தில் வாழுகின்ற துளுவ வேளாளர் (அகமுடையார்) சமூகத்தினரும் பயன்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்க்கவகுலம்&oldid=3726788" இருந்து மீள்விக்கப்பட்டது