பார்கான் மாவட்டம்
பார்கான் மாவட்டம்
بارکھان | |
|---|---|
மாவட்டம் | |
பார்கான் மாவட்டத்தில் மலைச் சாலைகள் | |
பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 29°32′N 69°19′E / 29.54°N 69.31°E | |
| நாடு | |
| மாகாணம் | |
| கோட்டம் | லோராலை |
| அரசு | |
| • வகை | மாவட்டம் (நிர்வாகி - துணை ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 3,514 km2 (1,316 sq mi) |
| ஏற்றம் | 1,098 m (3,602 ft) |
| மக்கள்தொகை (2023) | |
| • மாவட்டம் | 2,10,249 |
| • அடர்த்தி | 60/km2 (160/sq mi) |
| • நகர்ப்புறம் | 14,425 (6.86%) |
| • நாட்டுப்புறம் | 1,95,824 (93.14%) |
| எழுத்தறிவு | |
| • சராசரி எழுத்தறிவு |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 84400 |
| தொலைபேசி குறியீடு | 0829 |
பர்கான் மாவட்டம் (Barkhan District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும்[3]. இதன் நிர்வாகத் தலைமையிடம் பர்கான் நகரம் ஆகும். பர்கான் நகரம், மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு கிழக்கே 489 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 719.1கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மாவட்ட எல்லைகள்
[தொகு]
பர்கான் மாவட்டத்திற்கு வடக்கே மூசாக்கேல் மாவட்டம், கிழக்கே பஞ்சா மாகாணம், தெற்கே கோலு மாவட்டம், மேற்கே தூகி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]| வருவாய் வட்டம் | பரப்பளவு
(km²)[4] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[5] |
ஒன்றியக் குழுக்கள் |
|---|---|---|---|---|---|
| பர்கான் வட்டம் | 3,514 | 210,249 | 59.83 | 33.62% | ... |
தட்ப வெப்பம்
[தொகு]| தட்பவெப்ப நிலைத் தகவல், பர்கான் | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 25.0 (77) |
26.7 (80.1) |
33.0 (91.4) |
39.0 (102.2) |
42.8 (109) |
44.2 (111.6) |
42.3 (108.1) |
41.6 (106.9) |
40.8 (105.4) |
37.0 (98.6) |
32.2 (90) |
28.0 (82.4) |
44.2 (111.6) |
| உயர் சராசரி °C (°F) | 16.2 (61.2) |
17.5 (63.5) |
23.3 (73.9) |
30.0 (86) |
35.1 (95.2) |
37.8 (100) |
35.4 (95.7) |
34.4 (93.9) |
33.5 (92.3) |
29.9 (85.8) |
24.2 (75.6) |
18.9 (66) |
28.02 (82.43) |
| தினசரி சராசரி °C (°F) | 10.1 (50.2) |
11.7 (53.1) |
17.1 (62.8) |
23.5 (74.3) |
28.6 (83.5) |
31.0 (87.8) |
29.5 (85.1) |
28.7 (83.7) |
27.0 (80.6) |
23.0 (73.4) |
17.3 (63.1) |
12.2 (54) |
21.64 (70.96) |
| தாழ் சராசரி °C (°F) | 4.1 (39.4) |
6.4 (43.5) |
11.1 (52) |
17.1 (62.8) |
22.1 (71.8) |
24.4 (75.9) |
23.7 (74.7) |
23.1 (73.6) |
20.5 (68.9) |
15.9 (60.6) |
10.4 (50.7) |
5.6 (42.1) |
15.37 (59.66) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | −1.7 (28.9) |
-2.2 (28) |
2.0 (35.6) |
6.1 (43) |
13.0 (55.4) |
13.0 (55.4) |
15.7 (60.3) |
16.7 (62.1) |
13.9 (57) |
9.0 (48.2) |
2.0 (35.6) |
−10.0 (14) |
−10 (14) |
| பொழிவு mm (inches) | 12.2 (0.48) |
21.7 (0.854) |
35.4 (1.394) |
32.3 (1.272) |
17.8 (0.701) |
35.3 (1.39) |
108.8 (4.283) |
95.5 (3.76) |
43.4 (1.709) |
3.6 (0.142) |
5.8 (0.228) |
6.8 (0.268) |
418.6 (16.48) |
| ஆதாரம்: NOAA (1971-1990) | |||||||||||||
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 23,053 குடியிருப்புகள் கொண்ட பர்கான் மாவட்ட மக்கள் தொகை 2,10,249 ஆகும் பாலின விகிதம் 100 பெண்களுக்கு 108.95 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 33.62% ஆகும்.[6][7]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 84,790 (40.33%) ஆக உள்ளனர்..[8]நகர்புறங்களில் 14,425 (6.86%) மக்கள் வாழ்கின்றனர்.[6]
சமயங்கள்
[தொகு]பர்கான் மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 96.24%, இந்து சமயத்தை 3.67%, கிறித்துவத்தை 0.08% மற்றும் பிற சமயங்களை 0.01% பின்பற்றுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District at a glance Barkhan". Government of Pakistan "Pakistan Bureau of Statistics".
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑ "Government of Balochistan".
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- 1 2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.