உள்ளடக்கத்துக்குச் செல்

பார்கவ அஸ்திரம் (குறு ஏவுகணை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்கவ அஸ்திரம் என்பது எதிராளிகளின் திரள் ஆளில்லாத வானூர்திகளை இடைமறித்து வீழ்த்தும் குறு -ஏவுகணை ஆகும். உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் குறு-ஏவுகணையை இந்தியாவின் தனியார் நிறுவனமான சோலார் குழுமத்தின் எகனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட் வெற்றிகரமாக சோதித்துள்ளது.[1] பார்கவ அஸ்திரத்தை ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் கடற்கரைப் பகுதியில் 15 சனவரி 2025 அன்று ஏவிப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

சிறப்புகள்

[தொகு]

2.5 கிலோ மீட்டர் உயரத்தில் உலாவும் எதிராளிகளின் சிறிய ஆளில்லாத வானூர்திகளை பார்கவ அஸ்திரம் எனும் வெடி மருந்து நிரம்பிய வழிகாட்டப்படும் குறு-ஏவுகணை கண்டறிந்து தாக்கி செயல் இழக்க வைக்கும் திறன் கொண்டதாகும். [2][3][4]

பார்கவ அஸ்திரம் என்ற அமைப்பு மூலம் ஒரே நேரத்தில் 64க்கும் மேற்பட்ட குறு-ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி கூட்டமாக வரும் எதிராளிகளின் ஆளில்லா டிரோன்களை தாக்கி அழிக்க இயலும். இது ஒரு நகரும் தளத்திலிருந்து ஏவக்கூடியது. இது இமயமலை போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் மற்றும் நிலப்பரப்புகளில் செயல்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்கவ அஸ்திர அமைப்பு இந்திய இராணுவத்தின் தேவைக்காக தயாரிக்கப்படுகிறது.[5] .

மேற்கோள்கள்

[தொகு]

.