பாரோ, பூடான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரோ ( ஆங்கிலம்: Paro) என்பது பூட்டானின் பாரோ பள்ளத்தாக்கில் உள்ள பாரோ மாவட்டத்தின் ஒரு நகரம். பல புனித இடங்கள் மற்றும் வரலாற்று கட்டிடங்கள் பகுதி முழுவதும் சிதறியுள்ள ஒரு வரலாற்று நகரம் இது. பூட்டானின் ஒரே சர்வதேச விமான விமான நிலையம் இங்கு அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பாரோ பள்ளத்தாக்கைக் அருகிலிருக்கும் ஒரு கோட்டையிலுள்ள "இரின்பங் தோங்" மடாலயம் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பத்ம சம்பவர் என்பவரால் மடாலயம் முதன்முதலில் கட்டப்பட்டது, ஆனால் 1644 ஆம் ஆண்டில் நாகவாங் நம்கியால் பழைய அஸ்திவாரங்களில் மீண்டும் ஒரு பெரிய மடத்தை கட்டப்பட்டது. பல நூற்றாண்டுகளாக திபெத்தியர்களின் பல படையெடுப்பு முயற்சிகளுக்கு எதிராக ஒரு சிறந்த பாதுகாப்பு அரணாக இந்த ஐந்து மாடி கட்டிடம் செயல்பட்டது.[1]

களிமண்ணுக்கு பதிலாக கற்களால் கட்டப்பட்ட இதற்கு "இரின்பங்" என்று பெயரிடப்பட்டது, இதன் பொருள் "நகைகளின் குவியல்" என்படும். ஆனால் இரிங்பங் மடாலயம் மற்றும் அதன் அனைத்து பொக்கிஷங்களும் 1907 இல் ஏற்பட்ட ஒரு தீவிபத்தால் அழிந்துவிட்டன.[1] "தாங்தெல்" என்று அழைக்கப்படும் ஒரே ஒரு தங்கா எனப்படும் புத்தமத ஓவியங்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டது. பாரோ சோங் தீ விபத்துக்குப் பிறகு பென்லோப் தாவா பென்ஜோர் என்பவரால் மீண்டும் கட்டப்பட்டது. அதன் சுவர்களுக்குள் புனிதமான முகமூடிகள் மற்றும் ஆடைகளின் தொகுப்பு உள்ளது. இது பல நூற்றாண்டுகளுக்கு முந்தையவை; சமீபத்திய காலங்களில் "தாவா பென்சோர்" மற்றும் அவரது வாரிசான "பென்லோப் செரிங் பெஞ்சோர்" ஆகியோரும் இதன் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்.

தொங்கிற்கு மேலே உள்ள மலையில் தா சோங் என்று அழைக்கப்படும் ஒரு பழங்கால காவல் கோபுரம் உள்ளது, இது 1967 முதல் பூட்டானின் தேசிய அருங்காட்சியகமாகும். தொங்கிற்கு கீழே ஒரு பாலத்தின் குறுக்கே "உசியன் பெல்ரி" அரண்மனை உள்ளது. இது "பென்லோப் செரிங் பென்சோர்" என்பவரால் கட்டப்பட்ட அரண்மனையாகும்.[1]

கட்டிடக்கலை[தொகு]

இதன் பிரதான தெருவில் பாரம்பரிய கட்டிடக்கலை வளாகம் ஒன்று உள்ளது, அதில் சிறிய கடைகள், நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் உள்ளன.[2]

"தங்சே எலகாங்" என்பது 15 ஆம் நூற்றாண்டின் புதிய பாலத்திற்கு அருகிலுள்ள ஒரு கோயிலாகும், மேலும் "உசியன் பெர்லி" அரண்மனை வழியாக இதைக் காணலாம். அரச குடும்ப உறுப்பினர்கள் இவ்வழியாக கடந்து செல்லும் போது இந்த அரண்மனையில் தங்குகிறார்கள்.[2] அருகிலேயே "இரின்பங் சோங்"கின் பழைய பாலம் உள்ளது. குறிப்பிடத்தக்க ஒருசில விடுதிகளில் அலங்கரிக்கப்பட்ட பாணியில் கட்டப்பட்ட "ஒலதங்" என்ற விடுதியும் அடங்கும்.

பாரோவுக்கு வெளியே சுமார் 10 கிலோமீட்டர்கள் (6 மைல்கள்) 1,000-மீட்டர் (3,281-அடி) குன்றின் முகத்தில் பிரபலமான தக்த்சாங் என்ற (புலிக்குகை) துறவிகள் வாழும் இடம் ஒன்று உள்ளது. இந்த இடம் பூட்டானியர்களுக்கு மிகவும் புனிதமானது, பூட்டானிய புத்த மதத்தின் தந்தை குரு பத்மசம்பவர் ஒரு புலியின் மேல் வந்து இங்கு இறங்கினார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த குகைக்குச் மலையேறிச் செல்ல மூன்று மணி நேரம் ஆகும். பாரோ நகரின் அழகிய காட்சியை இங்கிருந்து காணலாம்.[2] 16-கிலோமீட்டர் (10-மைல்) சாலை பள்ளத்தாக்கு வழியாக மற்றொரு கோட்டை-மடாலயமான "துரூக்கியல்" இதன் இடிபாடுகள் வரை செல்கிறது. பாரோ பூட்டானின் மிக உயரமான கட்டிடமான 'தா-ஜாங்', 22 மீட்டர் (72 அடி) உயரமும், 6 தளங்களைக் கொண்டுள்ளது. இது 1649 இல் நிறைவடைந்தது.[3]

விமானம்[தொகு]

பரோ விமான நிலையம் "உலகின் மிகவும் கடினமான வணிக விமான நிலையம்" என்று விவரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் ஒரே ஒரு ஓடுபாதை மட்டுமே உள்ளது. இங்கு செல்லும் விமானங்கள் 5,500 மீட்டர் இமயமலை மலை உச்சிகளைக் கடந்து செல்கின்றன, மேலும் 1,964 மீட்டர் ஓடுபாதை நீளமும் ஒரு இரட்டை சவாலை முன்வைக்கிறது. இதன் விளைவாக, ஒரு சில விமானிகள் மட்டுமே (டிசம்பர் 2014 வரை 8) வணிக விமானங்களை இயக்க சான்றிதழ் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400,000 பேர் விமான நிலையத்திற்கு வருகிறார்கள்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Paro - the beautiful valley". East-Himalaya.com. பார்க்கப்பட்ட நாள் 11 July 2008.
  2. 2.0 2.1 2.2 "In The Kingdom Of Bhutan". Global Sapiens. 6 October 2002. பார்க்கப்பட்ட நாள் 11 July 2008.
  3. https://www.emporis.com/statistics/tallest-buildings/country/100020/bhutan
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரோ,_பூடான்&oldid=3108534" இலிருந்து மீள்விக்கப்பட்டது