பாரெசுட்டு இரே மவுள்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாரெசுட்டு இரே மவுள்டன்
Forest Ray Moulton
Forest Ray Moulton AAAS 1947.jpg
பிறப்புஏப்பிரல் 29, 1872
இலே இராய், மிச்சிகன்
இறப்பு7 திசம்பர் 1952(1952-12-07) (அகவை 80)
வில்மெட்டே, இல்லினாயிசு]
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்சிகாகோ பல்கலைக்கழகம்

பாரெசுட்டு இரே மவுள்டன் (Forest Ray Moulton) (ஏப்பிரல் 29, 1872 - திசம்பர் 7, 1952)ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1]

இவர் மிச்சிகனில் உள்ள இலெ இராயில் பிறந்தார். இவர் ஆல்பியோன் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் 1894 இல் கலையியல் இளவல் பட்டம் பெற்றதும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் மேற்பட்டப் படிப்பில் சேர்ந்தார். இவர் 1899 இல் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார். அங்கே இவர் 1898 முதல் 1900 வரை வானியல் உதவியராகவும் 1900 முதல் 1903 வரை பயிற்றுநராகவும் 1903 முதல் 1908 வரை உதவிப் பேராசிரியராகவும் 1908 முதல் 1912 வரை இணைப் பேராசிரியராகவும் இருந்து 1912 முதல் பேராசிரியரானார்.[2]

தகைமைகள்[தொகு]

நிலாவின் மவுள்டன் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது. வகைநுண்கணித சமன்பாடுகளைத் தீர்க்கும் ஆடம்சு-மவுள்டன் முறைகளும் வடிவியலில் மவுள்டன் தளமும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.

எழுத்துகள்[தொகு]

இவர் 1907 இல் அமெரிக்கக் கணிதவியல் கழகத் தொடர்புகள் Transactions of the American Mathematical Society இதழின் இணையாசிரியரானார். மேலும் இவர் 1908 இல் கார்னிகி நிறுவனத்தின் ஆராய்ச்சி இணைஞராகவும் ஆனார். இவர் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் பல பிரிவுகளில் செயலாளராகவும் இருந்துள்ளார். அதன் 20 க்கும் மேற்பட்ட கருத்தரங்கு கட்டுரைகளை பதிப்பித்துள்ளார்.[3] இவர் பல்வேறு கணிதவியல், வானியல் இதழ்களுக்கு பங்களிப்புகள் செய்ததோடு, பின்வரும் நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்:

 • An Introduction to Celestial Mechanics (1902;[4] second revised edition, 1914)
 • An Introduction to Astronomy (1905)
 • Descriptive Astronomy (1912)
 • Periodic Orbits (1920)
 • New Methods in Exterior Ballistics (1926)[5]
 • Differential Equations (1930)[6]
 • Astronomy (1931)[7]
 • Consider the Heavens (1935)

மேற்கோள்கள்[தொகு]

 1. Carlson, A. J. (1953), "FOREST Ray Moulton: 1872–1952.", Science (May 22, 1953 அன்று பதியப்பட்டது), 117 (3047), pp. 545–6, doi:10.1126/science.117.3047.545, PMID 13056607
 2. New International Encyclopedia
 3. பாரெசுட்டு இரே மவுள்டன்Biographical Memoirs of the National Academy of Sciences. Here: p.345–346 (= p.7–8 in the file)
 4. Armin Otto Leuschner (1906). "Review: An Introduction to Celestial Mechanics by F. R. Moulton". Bull. Amer. Math. Soc. 12 (7): 356–360. doi:10.1090/s0002-9904-1906-01352-0. http://www.ams.org/journals/bull/1906-12-07/S0002-9904-1906-01352-0/S0002-9904-1906-01352-0.pdf. 
 5. Rowe, J. E. (1928). "Review: New Methods in Exterior Ballistics by F. R. Moulton". Bull. Amer. Math. Soc. 34 (2): 229–232. doi:10.1090/s0002-9904-1928-04520-2. http://www.ams.org/journals/bull/1928-34-02/S0002-9904-1928-04520-2/S0002-9904-1928-04520-2.pdf. 
 6. Fite, W. B. (1931). "Review: Differential Equations by F. R. Moulton". Bull. Amer. Math. Soc. 37 (7): 492–494. doi:10.1090/s0002-9904-1931-05164-8. http://www.ams.org/journals/bull/1931-37-07/S0002-9904-1931-05164-8/S0002-9904-1931-05164-8.pdf. 
 7. Brouwer, Dirk (1932). "Review: Astronomy by F. R. Moulton". Bull. Amer. Math. Soc. 38 (7): 473–474. doi:10.1090/s0002-9904-1932-05435-0. http://www.ams.org/journals/bull/1932-38-07/S0002-9904-1932-05435-0/S0002-9904-1932-05435-0.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]