உள்ளடக்கத்துக்குச் செல்

பாரிய திறந்த இணைப்பு வகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரிய திறந்த இணைப்பு வகுப்பு (Massive open online course) என்பது பெருந்தொகை மாணவர்கள் இணையம் ஊடாக வகுப்புக்களை எடுப்பதற்கான ஒர் ஏற்பாடு ஆகும். இவை பாட உள்ளடக்கங்கள், திட்டங்களை மட்டும் அல்லாமல் மாணவர் சேர்ந்து கற்க, மதிப்பீடுகளை, சான்றிதழ்களைப் பெறுவதற்கான வசதியைக் கொண்டவை. கோர்செரா (coursera.org), யுடாசிற் (udacity.com), எட்.எக்சு (edx.org) போன்வை பாரிய திறந்த இணைப்பு வகுப்புகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.

இந்த திட்டங்களில் வழங்கப்படும் வகுப்புகளுக்குப் பிற கல்லூரிகளில் போன்று மாணவர்கள் சேர முடியும். பின்னர் மாணவர்கள் அந்த வகுப்பின் உள்ளடக்கத்தை, விரிவுரைகளை, பயிற்சிகளை பிற மாணவர்களுடன் சேர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். புதிர்களையும் (quiz) சோதனைகளையும் (tests) பயன்படுத்தி தமது முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து கொள்ளலாம். தற்போதைய மாதிரியின் படி அதிகாரபூர்வமாக மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்குவதற்கு மட்டுமே கட்டணம் அறவிடுகிறார்கள்.

2011 இல் கோர்செரா அறிமுகப்படுத்தப்பட்ட போது சுமார் 100 000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு வகுப்புகளையும் எடுத்தார்கள். 2012 இல் அதே மாதிரி பாரிய மாணவர் தொகையுடன் இம் மூன்று தளங்களிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. வழமையாக பல்கலைக்கழகங்களில் ஒரு வகுப்புக்கு அதிக பட்சம் 400-1000 வரையான மாணவர்களே பங்கேற்பார்கள் என்பதை இங்கு ஒப்பிட்டால், கல்வியை அனைவருக்கும் எடுத்துச் செல்வதில் இத் தளங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்பதை உணரலாம்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கிரெக்கொரி ஃபிரென்சுரெயின். (மே 9, 2012). வழியை விடு மிற், இசுரான்போர்ட் உண்மையான "கல்விப் புரட்சியைக்" கொண்டுள்ளது. ரெக்கிறச். எடுக்கப்பட்ட இடம்: http://techcrunch.com/2012/05/09/move-over-harvard-and-mit-stanford-has-the-real-revolution-in-education/