உள்ளடக்கத்துக்குச் செல்

பாரிசைட்டு-(La)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரிசைட்டு-(La)Parisite-(La)
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCaLa2(CO3)33F2
இனங்காணல்
நிறம்பழுப்பு
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மேற்கோள்கள்[1]

பாரிசைட்டு-(La) (Parisite-(La)) என்பது CaLa2(CO3)33F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பிரேசில் நாட்டிலுள்ள சாவோ பாலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேனியல் அடென்சியோ மற்றும் பிரேசிலின் பாகியா மாநிலத்தில் உள்ள முலா கிளெய்ம் பகுதியிலுள்ள சக ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கனிமமாகும்.[2] பாரிசைட்டு-(La) என்பது பாரிசைட்டு-(Ce) கனிமத்தின் இலாந்தனம் ஒப்புமையாகும். இது பாரிசைட்டு-(Ce) கனிமத்தின் அதே அமைப்பைக் கொண்டுள்ளது, ஆனால் இலந்தனத்திற்குப் பதிலாக சீரியம் உள்ளது. பாரிசைட்டு-(La) வேதியியல் ரீதியாக சின்கிசைட்டு-(La) உடன் ஒத்திருக்கிறது.[3]

பாரிசைட்டு-(La) வகைக் கனிமம் பிரேசிலில் உள்ள மினாசு கெரைசு மாகாணத்தில் உள்ள ஓரோ பிரிட்டோ நகரில் அமைந்துள்ள எசுகோலா டி மினாசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்திலும் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள டசுக்கன் நகர அரிசோனா பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டுள்ளது.[4]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் பாரிசைட்டு(La) கனிமத்தை Pst-La[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parisite-(La): Parisite-(La) mineral information and data". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
  2. Hålenius, U.; Hatert, F.; Pasero, M.; Mills, S. J. (2016-08-01). "New minerals and nomenclature modifications approved in 2016" (in en). Mineralogical Magazine 80 (5): 915–922. doi:10.1180/minmag.2016.080.084. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-461X. Bibcode: 2016MinM...80..915H. http://minmag.geoscienceworld.org/content/80/5/915. 
  3. "New Mineral Listing | Carbon Mineral Challenge". mineralchallenge.net (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-09-05. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
  4. "Parisite-(La): Parisite-(La) mineral information and data". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிசைட்டு-(La)&oldid=4139780" இலிருந்து மீள்விக்கப்பட்டது