பாரிசு விசுவநாதன்
பாரிசு விசுவநாதன் | |
|---|---|
2012-இல் விசுவநாதன் | |
| பிறப்பு | 1940 கடவூர், கொல்லம், கேரளம், இந்தியா |
| கல்வி | அரசு கவின்கலைக் கல்லூரி, சென்னை |
| அறியப்படுவது | ஓவியக் கலை, சிற்பி, திரைப்படத் தயாரிப்பாளர் |
| வாழ்க்கைத் துணை | நாதின் தர்பூரிக் |
| விருதுகள் |
|
பாரிசு விசுவநாதன் (Paris Viswanathan) என்று பிரபலமாக அறியப்படும் வேலு விசுவநாதன் (பிறப்பு 1 ஜனவரி 1940) ஓர் இந்திய ஓவியரும், சிற்பியும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இந்தியாவின் முக்கிய நவீன ஓவியர்களில் ஒருவராக விசுவநாதன் பலரால் கருதப்படுகிறார்.[1][2][3] இவர் புளோரன்ஸ் திரைப்பட விழாவின் தி போபோலி சிறந்த ஆவணப்பட விருதையும், கேரள லலித் கலா அகாதமி வழங்கிய கே. சி. எஸ். பணிக்கர் விருதையும் பெற்றுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]வேலு விசுவநாதன், 1940 ஆம் ஆண்டில் தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தின் கடவூரில் பிறந்தார்.[4] ஆரம்பக் கல்விக்குப் பிறகு, 1960 ஆம் ஆண்டில் சென்னையின், அரசு கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு புகழ்பெற்ற ஓவியர் கே. சி. எஸ். பணிக்கரின் கீழ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.[5] 1966 ஆம் ஆண்டில் நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெற்ற பிறகு, சோழ மண்டல ஓவியர்கள் கிராமத்தை அமைப்பதில் பணிக்கருக்கு உதவினார். மேலும் அதன் முதல் குழு உறுப்பினர்களில் ஒருவராக கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். 1967 ஆம் ஆண்டில், பினெல்லே தி பாரிசு என்ற பிரெஞ்சு கலை விழாவால் பங்கேற்றார். அடுத்த ஆண்டு விசுவநாதன் பாரிசிலேயே வசித்து வருகிறார்.[6]
பணிகள்
[தொகு]விசுவநாதன் பல சர்வதேச மற்றும் தேசிய கலை விழாக்களில் பங்கேற்றுள்ளார். இதில் பினெல்லே தி பாரிசு மற்றும் லியுப்லியானாவிலுள்ள சர்வதேச கலைக் காட்சியகம், வேத் அவேன், ஆர்ஹஸ், தி பிரான்ஸ், இசுடிக் கார்ல்சன் கலைக்கூடம், ஹோகனாஸ், சென்டர் ஜார்ஜஸ் போம்பிடோ, புது தில்லி, வதேரா கலைக்கூடம், புது தில்லி தேசிய நவீன கலைக்கூடம் போன்ற பல கலைக்கூடங்கள் இவரது தனிநபர் ஓவியங்களை காட்சிப் படுத்தியுள்ளன.[4] பின்னர், 2019-இல் நடைபெற்ற சமகால கலையின் சர்வதேச கண்காட்சியில் 'கேரளாவிற்கான கலை எழுச்சிகள்'' எனும் தலைப்பில் ஓவியங்களை காட்சிப்படுத்தினார்.[7] 2018 கேரள வெள்ளத்தை அடுத்து கேரள அரசு மேற்கொண்ட புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான நிதி திரட்டுவதற்காக தனது ஓவியங்களை ஏலம் விடும் முயற்சியிலும் ஈடுபட்டார்.[8] விசுவநதன் சில படங்களையும் இயக்கியுள்ளார். அவற்றில் 5 படங்களைக் கொண்ட "தி பஞ்ச பூதா" என்ற தொடரும் "கங்கா" மற்றும் "பேக் டு எலிமென்ட்ஸ்" என்ற தொடரும் அடங்கும்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
[தொகு]1986 ஆம் ஆண்டில் புளோரன்சில் நடைபெற்ற தி போப்போலி விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை விசுவநாதன் பெற்றார்.[9] கேரள லலிதகலா அகாடமி இவருக்கு 2008 ஆம் ஆண்டில் கே. சி. எஸ். பணிக்கர் விருதை வழங்கியது.[10] 2005 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அரசாங்கம், கடிதங்களுக்கான செவாலியே விருதை இவருக்கு வழங்கியது. [1] 2018 இல் ராஜா ரவி வர்மா விருது கிடைத்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paintings - Kerala". www.keralaculture.org (in ஆங்கிலம்). 2019-03-15. Retrieved 2019-03-15.
- ↑ Panikkar, Shivaji; Parul Dave Mukherji; Deeptha Achar; Ratan Parimoo (2003). Towards a new art history. D. K. Printworld. pp. 237–238. ISBN 978-81-246-0230-0.
- ↑ "Artistic quest for an identity". 2007-12-21. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/artistic-quest-for-an-identity/article2274440.ece. பார்த்த நாள்: 2018-12-31.
- ↑ 4.0 4.1 "V.Viswanadhan Profile". www.cholamandalartistvillage.com. 2019-03-15. Retrieved 2019-03-15.
- ↑ asianetnews (2013-08-23). "Interview :Artist Paris Viswanathan in Varthaprabhatham". யூடியூப். Retrieved 2019-03-15.
- ↑ "Colours of the mind". Deccan Herald (in ஆங்கிலம்). 2011-01-15. Retrieved 2018-12-31.
- ↑ "When art rises for a cause at the Kochi Biennale". The Week (in ஆங்கிலம்). Retrieved 2019-03-15.
- ↑ "Art auction for flood relief a huge success". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2019-01-20. Retrieved 2019-03-15.
- ↑ "Artist Details". Cholamandal Artists' Village. 2019-03-15. Retrieved 2019-03-15.
- ↑ "Fellowship for Arakkal, sculptor Soman". 2008-01-25. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Fellowship-for-Arakkal-sculptor-Soman/article15150848.ece.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Noted painter Paris Viswanathan". thehinduimages.com. 2019-03-14. Retrieved 2019-03-14.
- "Paris Viswanathan - interview". webindia123.com (in ஆங்கிலம்). 2019-03-15. Retrieved 2019-03-15.
- "Interview :Artist Paris Viswanathan in Varthaprabham". Asianet News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2019-03-15.