பாரிசு மான்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரிசு மான்கோ
Barış Manço
பாரிசு மான்கோ (1998)
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1943-01-02)சனவரி 2, 1943
பிறப்பிடம்துருக்கி
இறப்புசனவரி 31, 1999(1999-01-31) (அகவை 56)
இசை வடிவங்கள்ராக், பொப், Progressive rock
தொழில்(கள்)பாடகர், இசையமைப்பாளர், கவிஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்
இசைத்துறையில்1950கள் - 1999
வெளியீட்டு நிறுவனங்கள்Sayan, Yavuz Plak, CBS Disques / Grammofoonplaten S.A.B.V., Türküola, Emre Plak

பாரிசு மான்கோ (Barış Manço அல்லது Baris Mancho, பாரிஸ் மான்கோ, சனவரி 2, 1943 - சனவரி 31, 1999) துருக்கியைச் சேர்ந்த ராக், பாப் இசைப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.

துருக்கியின் எக்காலத்திலும் சிறந்த இசை வல்லுனர்களில் ஒருவர். துருக்கிய இசை வரலாற்றில் புதிய போக்கை உருவாக்கியவர். இன்றும் துருக்கிய இசை வடிவங்களில் இவரது பாதிப்பு மிக அதிகம். 1980களில் இலத்திரனிய இசைக் கருவிகளை துருக்கிய இசையோடு கலந்தவர்.

சுமார் 200 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரது பல பாடல்கள் ஆங்கிலம், சப்பானியம், கிரேஎக்கம், பல்கேரிய, ரொமானிய, பெர்சிய, அரபி என உலகின் பல்வேறு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. துருக்கியின் மிகப் பிரபலமானவர்களில் ஒருவராக இன்றளவும் போற்றப்படுகிறார்.

வாழ்க்கை[தொகு]

மான்கோ துருக்கியில் உள்ள மோடா, இசுதான்புல்லில் 1943 சனவரி 2 -ம் தேதி பிறந்தார். இவரது தாயார் ரிக்கத் உயானிக் (Rikkat Uyanık) 1940களில் புகழ்பெற்ற பாடகியாக விளங்கியவர். இரண்டாம் உலகப்போர் முடிந்த காலத்தில் பிறந்த இவருக்கு இவரது பெற்றோர் பாரிசு ’Baris’ என்று பெயர் சூட்டினர். ’Baris’ என்றால் அமைதி என்று பொருள். அந்த வகையில் இப்பெயர் கொண்ட முதல் நபர் இவர்தான்.

தம் உயர்க்கல்வி நாட்களில் தனது முதல் இசைக்குழுவான Kafadarlar ("The Buddies") எனும் குழுவை உருவாக்கினார். 1962-63களில் இவரது அடுத்தக் குழு Harmoniler ("The Harmonies")வின் மூலம் அமெரிக்க ராக் இசையையும் துருக்கியின் பாரம்பரிய இசையையும் கலந்து புதியதோர் இசை வடிவத்தை (rock and roll) வ்ழங்கி புகழ் பெற்றது. 1963 இல் ஐரோப்பா பயணமானார். பாரிஸ் நகரத்தை ஒட்டிய உள்ளுர் இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து புதியதோர் குழுவை அமைத்து பாடல்கள் சிலவற்றை ஆங்கிலம், பிரெஞ்சு, துருக்கி மொழிகளில் பதிவு செய்தார். 1967 வரை செர்மனி, பெல்சியம், பிரான்சு, துருக்கி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1967 ல் ”மரியா க்ளாட்” எனும் மாடல் அழகியை திருமணம் செய்துக்கொண்டார்.3 மாதங்களிலேயே இவர்களுடைய திருமண உறவு முறிந்தது. பின்னர் 1978 ல் லேல் (துலிப்) என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ’டாக்குகன்’, ’பாட்டிகன்’ என இரண்டு மகன்கள் உண்டு.

1970 ல் துருக்கி,பெல்ஜிய மொழியில் தயாரான "Dağlar Dağlar" அமோக வரவேற்புடன் சக்கைபோடு போட்டதுடன் சுமார் 7 லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனைப் படைத்தது. இது உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக இசை வல்லுனர்களால் கருதப்படுகிறது. இதன் வெற்றி பாரிஸ் மான்கோ –விற்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.

இதன் வெற்றிக்கு பிறகு இவர் தொட்டதெல்லாம் துலங்கியது எனலாம். 1972ல் இவர் அமைத்த Kurtalan Ekspres எனும் குழு இறுதிவரை இவருடனே இருந்து படைத்த படைப்புகள் காலத்தை வென்று நிற்பவை. 1981 ல் வெளிவந்த Sözüm Meclisten Dışarı மகத்தான வெற்றியைப் பெற்றது. இந்த ஆல்பத்தில் இடம் பெற்ற "Gülpembe" எனும் பாடல் உலகின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

1988 ல் மான்கோ, 7 முதல் 77 வரை எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கியதுடன் தாமேதொகுத்தும் வழங்கினார். துருக்கியின் தேசிய தொலைக்காட்சி சேனலான TRT 1 ல் ஒலிபரப்பான இசை, விவாதம், ஆவணங்களை உள்ளடைக்கிய இந்த நிகழ்ச்சி சிறுவர் முதல் பெரியவர் வரையிலான அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் வரவெற்பை பெற்றது. 8 ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 150 நாடுகளுக்கு பயணித்திருக்கிறார் மான்கோ.

பிற்காலங்களில் வெளியான சில இசைப்படைப்புகள் பெருமளவு வெற்றியை குவிக்காத போதிலும் எல்லாவற்றிற்கும் சேர்த்து இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியே பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது.

மறைவு[தொகு]

1999 ம் ஆண்டு Mançoloji (Mançology or Manchology) எனும் இரட்டை இசைப்படைப்பின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்துக்கொண்டிருந்தது. அதில் பாரிஸ் மான்கோ-வின் இசை வாழ்க்கையின் 40வது ஆண்டுவிழாவை கொண்டாடும் இசைப் பாடலும் ஒன்று. பரபரப்பாக வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, ஜனவரி 31 ம் நாள் மான்கோ திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். துருக்கி முழுவதையும் சோகம் ஆட்கொண்டது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மகத்தான அந்த இசைக் கலைஞனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

வெளிப்புறத் தோற்றம்[தொகு]

நீண்ட தலைமுடியும்,மீசையும்,கையில் அணிந்திருந்த பெரிய மோதிரமும் பாரிஸ் மான்கோவின் தனித்த அடையாளம். இது இவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவருக்குப் பிறகுதான் பெரும்பாலான கலைஞர்கள் தங்களுக்கென்று தனித்தவொரு அடையாள தோற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள துவங்கினர் எனலாம்.

படைப்புகள்[தொகு]

 • Dünden Bugüne (1971) (Sayan)
 • 2023 (1975) (Yavuz Plak)
 • Sakla Samanı Gelir Zamanı (1976) (Yavuz)
 • Baris Mancho, released as Nick The Chopper in Turkey (1976) (CBS Disques/Grammofoonplaten S.A.B.V., CBS 81784, Yavuz LP)
 • Yeni Bir Gün (1979) (Yavuz ve Burç Plakçılık)
 • 20 Sanat Yılı Disco Manço (1980) (Türküola)
 • Sözüm Meclisten Dışarı (1981) (Türküola)
 • Estağfurullah... Ne Haddimize! (1983) (Türküola)
 • 24 Ayar Manço (1985)
 • Değmesin Yağlı Boya (1986) (Emre Plakçılık)
 • 30 Sanat Yılı Fulaksesuar Manço - Sahibinden İhtiyaçtan (1988) (Emre Plakçılık)
 • Darısı Başınıza (1989) (Yavuz ve Burç Plakçılık)
 • Mega Manço (1992) (Emre Plak)
 • Müsaadenizle Çocuklar (1995) (Emre Plak)
 • Barış Manço Live In Japan (1996) (Emre Plak)
 • Mançoloji (1999) (Emre Plak)

Singles With Harmoniler

 • Twistin USA / The Jet (1962) (Grafson MGG 515)
 • Do The Twist / Let's Twist again (1962) (Grafson MGG 516)
 • Cit Cit Twist / Dream Girl (1963) (Grafson MGG 566)

With Jacques Denjean Orchestra

 • Baby Sitter / Quelle Peste / Jenny Jenny / Un Autre Amour Que Toi (1964) (Rigolo 18.726)

With Les Mistigris

 • Il Arrivera / Une Fille (1966) (Sahibinin Sesi 45-AX 3092)
 • Bien Fait Pour Toi / Aman Avcı Vurma Beni (1966) (Sahibinin Sesi 45-AX 3093)
 • Bizim Gibi / Big Boss Man / Seher Vakti / Good Golly Miss Molly (1967) (Sayan)

With Kaygısızlar

 • Kol Düğmeleri / Big Boss Man / Seher Vakti / Good Golly Miss Molly (1967) (Sayan FS-144)
 • Kızılcıklar / I'll Go Crazy (1968) (Sayan FS-171)
 • Bebek / Keep Lookin' (1968) (Sayan FS-179)
 • Karanlıklar İçinde / Trip - To a Fair (1968) (Sayan FS-180)
 • Bogaziçi / Flower of Love (1968) (Sayan FS-194)
 • Runaway / Unutamıyorum (1969) (Sayan FS-199)
 • Aglama Değmez Hayat / Kirpiklerin Ok Ok Eyle (1969) (Sayan FS 204)
 • Kağızman / Anadolu (1969) (Sayan FS 213)

With Barış Manço Ve

 • Derule / Küçük Bir Gece Müziği (1970) (Sayan FS-223)
 • Dağlar Dağlar 1 / Dağlar Dağlar 2 (1970) (Sayan 229)

With Moğollar

 • İşte Hendek İşte Deve / Katip Arzuhalim Yaz Yare Boyle (1971) (Sayan FS-266)

With Moğollar / Kaygısızlar

 • Bin Boğanın Kızı / Ay Osman (1971) (Sayan FS-271)

With Kaygısızlar / Les Mistigris

 • Fil ile Kurbağa / Je te Retrouverais (1972) (Sayan FS 279)

With Kurtalan Ekspres

 • Ölüm Allah'ın Emri / Gamzedeyim Deva Bulmam (1972) (Yavuz YA 1544)
 • Lambaya Püf De / Kalk Gidelim Küheylan (1973) (Yavuz YA 1548)
 • Gönül Dağı / Hey Koca Topcu Genç Osman (1973) (Yavuz YA 1554)
 • Nazar Eyle Nazar Eyle / Gülme Ha Gülme (1974) (Yavuz YA 1562)
 • Bir Bahar Akşamı / Estergon Kalesi (1974) (Yavuz YA 1569)
 • Ben Bilirim /2023 (1975) (Yavuz Plak YA 1573)
 • Çay Elinden Öteye Rezil Dede / Vur Ha Vur (1976) (Yavuz Plak YA 1580)

With George Hayes Orchestra / Kurtalan Ekspres

 • Nick the Chopper / Lonely Man (1977) (Yavuz YA 1584)

With Kurtalan Ekspres

 • Hal Hal / Eğri Eğri Doğru Doğru Eğri Büğrü Ama Yine De Doğru (1981) (Türküola 239)

உசாத்துணைகள்[தொகு]

 • Barış Manço's biography by his brother Savaş
 • http://move.to/barismanco
 • Barış Manço From Wikipedia, the free encyclopedia
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிசு_மான்கோ&oldid=3024446" இலிருந்து மீள்விக்கப்பட்டது