பாரிசு பிசுமிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேரி பாரிசு பிசுமிசு தெ இரெசிலாசு (Marie Paris Pişmiş de Recilas) (ஆர்மீனியம்: Պարիս Փիշմիշ, ஜனவரி 30, 1911 – ஆகத்து 1, 1999) ஓர் அமெரிக்க-மெக்சிகோ வானியலாளர் ஆவார்.

பிசுமிசுவின் பிறப்புப் பெயர் மேரி சுகியாசுயான் (Mari Sukiasyan) (ஆர்மீனியம்: Մարի Սուքիասյան). இவர் 1911 இல் இசுதான்புல்லில் ஆர்த்தகோயில் பிறந்தார்ரிவர் ஊசுகூதர் அமெரிக்க கல்விக்கழகத்தில் பள்ளிக் கல்வி பெற்றார். இவர் 1937 இல் இவர் இசுதான்புல் பல்கலைக்கழகத்தின் அறிவியல் புலத்தில் முனைவர் பட்டம் பெற்ர முதல் பெண்மணியாவார்ரிவரது ஆய்வு வழிகாட்டி எர்வின் பின்லே பிரஇயூன்ட்லிச் ஆவார். பின்னர் இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கே இவர் தன் எதிர்காலக் கணவராகிய பெலிக்சு இரெசிலாசுவைச் சந்தித்தார். இவர் ஒரு மிக்சிகோ கணிதவியலாளர் ஆவார்ரிவர்கள் மெக்சிகோவில் வாழத் தொடங்கினர். இவர் தான் மெக்சிகோவில் முதல் தொழில்முறை வானியலாளர் ஆனார்.[1] இவர் மெக்சிகோவில் வானியல் கல்வியையும்ஆராய்ச்சியையும் நிறுவுவதில் மிகவும் தாக்கம் செலுத்தியவரக தோரித் கோப்லீத் கூறுகிறார். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மெக்சிகோ தேசியத் தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். அப்பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியல் கற்பித்தல் பரிசு உட்பட பல விருதுகளை வழங்கியுள்ளது. இவர் H II வளிம ஒண்முகில் பால்வெளிகளின் இயக்கவோட்ட வடிவியலை ஆய்வு செய்தார்; மேலும், இவர் திறந்த பால்வெளிக் கொத்துகள், கோளாக்க வளிம ஒண்முகில்கள் ஆகியவற்றின் கட்டமைப்பையும் ஆய்வு செய்தார். இவர் தென் அரைக்கோளம் சார்ந்த வானத்து 22 திறந்த கொத்துகளும் 2 பெருங்கொத்துகளும் அடங்கிய பிசுமிசு அட்டவணையை வெளியிட்டுள்ளார்.[2]

"பாரிசு பிசுமிசு எனும் பெண் வானியலாளரின் வாழ்க்கை நினைவுகள்" எனும் தன் சொந்த வழ்க்கை வரலாற்று நூலை 1998 இல் வெளியிட்டார். இவர் 1999 இல் இறந்தார்ரிவரது விருப்ப்ப்படி எரிக்கப்பட்டர்ரிவரது மகளாகிய எல்சாவும் ஓர் வானியற்பியலாளர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிசு_பிசுமிசு&oldid=3268945" இலிருந்து மீள்விக்கப்பட்டது