பாரா ட இசூக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரா ட இசூக்கா
மாவட்டம்
பாரா ட இசூக்காவின் அகலப் பரப்புக் காட்சி
பாரா ட இசூக்காவின் அகலப் பரப்புக் காட்சி
நாடு பிரேசில்
மாநிலம்இரியோ டி செனீரோ (மாநிலம்)
நகராட்சி/நகரம்இரியோ டி செனீரோ
மண்டலம்மேற்கு மண்டலம்

பாரா ட இசூக்கா (Barra da Tijuca, பிரேசிலிய போர்த்துக்கீசம்: [ˈbaʀɐ dɐ tiˈʒukɐ]) பிரேசிலின் இரியோ டி செனீரோவின் மேற்கு மண்டலத்தில் அத்திலாந்திக்குப் பெருங்கடலோரத்தில் உள்ள ஓர் புறநகர்ப் பகுதி (பாரா) ஆகும். இங்குள்ள கடற்கரைகள், ஏரிகள், ஆறுகளுக்காகவும் வாழ்முறைக்காகவும் பாரா புகழ்பெற்றது.[1]

இரியோ டி செனீரோவின் பரப்பில் 13% ஆகவும் நகர மக்கள்தொகையில் 4.7% ஆக இருந்தபோதும் நகர வரி வருமானத்தில் 30% இங்கிருந்து தான் வருகின்றது. பிரேசிலில் மிகவும் மேம்படுத்தப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இப்பகுதியின் மனித மேம்பாட்டுச் சுட்டெண், 0.959, நாட்டிலேயே மிகவும் உயர்ந்ததாகும். இரியோவின் நகர மையம், தெற்கு மண்டலம் போலல்லாது பாரா ட இசூக்கா 30 ஆண்டுகளுக்குள்ளாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. [2] எனவே பெரும் நிழற்சாலைகளுடன் தற்கால சீர்தரங்களின்படி கட்டமைக்கப்பட்டுள்ளது. நவீனத்துவம், நீடிப்புத் திறன், இயற்கை என இப்பகுதி இரியோ டி செனீரோவின் புத்தம்புதிய முகமாக விளங்குகின்றது. இந்நகரப் பகுதியின் திட்ட வடிவமைப்பை, பிரசிலியாவை வடிவமைத்த லூசியோ கோஸ்தா உருவாக்கியுள்ளார். நகரின் பெருந்திட்டத்தில் பல பூங்காக்கள், அங்காடி வளாகங்கள், அடுக்கக குடியிருப்புகள், பெரிய மாளிகைகள் இடம் பெற்றுள்ளன. பிரேசிலின் பொருளியல் வளர்ச்சியை அடுத்து பாராவில் 100,000க்கும் கூடுதலான புதிய குடிகள் இடம் பெயர்ந்துள்ளனர்; பல பெரிய நிறுவனங்களின் தலைமையகங்களும் இங்கு மாற்றப்பட்டு வருகின்றன.

இங்கு பவேலாக்கள் இல்லாமையால் இது இரியோவின் மிகவும் பாதுகாப்பான உயர்குடி நகர்ப்பகுதியாகவும் பண்பாட்டு, பொருளியல், நிர்வாக மையமாக விளங்குகின்றது. இங்கு பல புகழ்பெற்றவர்களும் காற்பந்து வீரர்களும் வசிக்கின்றனர்.

தென் அமெரிக்காவில் முதல்முறையாக நடந்த 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பெரும்பாலான அரங்குகள் இங்கு அமைந்திருந்தன.

ஒளிப்படத் தொகுப்பு[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Barra da Tijuca". பார்க்கப்பட்ட நாள் 22 June 2016.
  2. "Barra da Tijuca". RIO.com. பார்க்கப்பட்ட நாள் 22 June 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரா_ட_இசூக்கா&oldid=3536381" இலிருந்து மீள்விக்கப்பட்டது