பாரா ஒலிம்பிக் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரா ஒலிம்பிக் பூங்கா ( Barra Olympic Park, போர்த்துக்கேயம்: Parque Olímpico da Barra) பிரேசிலின் இரியோ டி செனீரோ நகரத்தின் மேற்கு மண்டலத்திலுள்ள பாரா ட இசூக்காவில் அமைந்துள்ள விளையாட்டு வளாகம் ஆகும்; இங்கு ஒன்பது விளையாட்டரங்குகள் உள்ளன. இந்த விளையாட்டரங்குகள் 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கும் 2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கும் பயனாகும். இந்த ஒன்பது அரங்கங்களில் ஏழு நிரந்தரமானவை.

வரலாறு[தொகு]

தற்போது பாரா ஒலிம்பிக் பூங்கா அமைந்துள்ள இடத்தில் முன்பு நெல்சன் பிக்கெட் பன்னாட்டு தானுந்துப் பந்தயச்சாலை இருந்தது. [1][2] இங்கு பலமுறை பார்முலா 1 பிரேசிலிய கிராண்ட் பிரீ பந்தயங்கள் 1980களில் நடைபெற்றுள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]