உள்ளடக்கத்துக்குச் செல்

பாராரத்தோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அச்சிடப்பட்ட பாராரத்தோன் பதிப்பு.

பாராரத்தோன் (ஆங்கிலம்: Pararaton; இந்தோனேசியம்: Para Ratu; ஜாவானியம்: Serat Pararaton; பாலி மொழி: ꦥꦫꦫꦡꦺꦴꦤ꧀) என்பது இந்தோனேசியா, ஜாவாவில் உருவாக்கப்பட்ட 16-ஆம் நூற்றாண்டு[1] ஜாவானிய வரலாற்று நூல் ஆகும்.[2]:187 இந்த நூல் இராஜாக்களின் நூல் (Katuturanira Ken Angrok) அல்லது மன்னர்களின் கதை (Book of Kings) என்றும் அழைக்கப்படுகிறது.

13-ஆம் நூற்றாண்டில் கிழக்கு ஜாவாவை ஆட்சி செய்த சிங்காசாரி இராச்சியம்; மற்றும் 13-ஆம் 15-ஆம் நூற்றாண்டுகளில் ஜாவாவை ஆட்சி செய்த மஜபாகித் பேரரசு; ஆகியவற்றின் அரசர்களின் வரலாற்றை, இந்த நூல் தொகுத்துக் கூறுகின்றது.

மேலும் இந்த நூல், கென் ஆங்ரோக் (Ken Angrok) எனும் அரசரைப் பற்றியும் விவரமாக விவரிக்கின்றது. காவி மொழியில் எழுதப்பட்ட இந்த நூல், 32 பக்கங்களில் 1126 வரிகளைக் கொண்டது.

விளக்கம்

[தொகு]

சிங்காசாரி இராச்சியத்தின் நிறுவனர் கென் அரோக்கின் (கென் அங்ரோக்) (1222–1292) என்பவரின் முறையான வரலாற்றுப் பதிவுகளுடன் பாராரத்தோன் தன் பதிவுகளைத் தொடங்குகிறது.[3] இந்தக் கையெழுத்துப் பிரதியின் பாதி அளவு, கென் அரோக் வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுக்கின்றது. அத்துடன் 1222-ஆம் ஆண்டில் அவர் அரியணை ஏறுவதற்கு முன்னர் அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் கோர்த்து வழங்குகிறது.

பின்னர் காலவரிசைப்படி பல குறுகிய கதைத் துண்டுகளும் சேர்க்கப்பட்டு உள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள பல நிகழ்வுகளின் திகதி குறிப்பிடப்பட்டு உள்ளன. இறுதியில், வரலாற்றுப் பகுதிகள் குறுகியதாக அமைகின்றன. மேலும் மஜபாகித் பேரரசின் அரச குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய பரம்பரைத் தகவல்கள் கலக்கப்பட்டு மாறி மாறி வருகின்றன.[4]

பாராரத்தோன் கையெழுத்துப் பிரதியின் முன்னுரையில் சக ஆண்டு 1522 (கி.பி. 1600) எனும் ஆண்டைக் கொண்டிருப்பதால், உரையின் இறுதிப் பகுதி கி.பி. 1481 மற்றும் 1600-க்கு இடையில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[5]

தலைப்பு

[தொகு]

இந்த நாளாகமம் பொதுவாக பாராரத்தோன் என்று அழைக்கப்படுகிறது. பாராரத்தோன் எனும் பெயர் உரையின் மையப்பகுதியில் தோன்றவில்லை. முதல் பாதிப் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. உரையின் மையப்பகுதியில் 'கென் அங்ரோக்கின் கதை இவ்வாறு அமைகிறது' (Nihan Katuturanira Ken Angrok) என்ற கூற்றுடன் தொடங்குகிறது. இது உரையின் அசல் தலைப்பு என்பதைக் குறிக்கிறது.[6]

அதன் முதல் பகுதி, கென் அங்ரோக்கின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. பாராரத்தோன் பிரதியின் சில பகுதிகளை வரலாற்று உண்மைகளாகக் கருத முடியாது. குறிப்பாக முன்னுரையில், உண்மை மற்றும் புனைகதை, கற்பனை மற்றும் எதார்த்த நிலைப்பாடு ஆகியவை ஒன்றாகச் செல்கின்றன. இருப்பினும், பெரும்பாலான அறிஞர்கள் பாராரத்தோன் வரலாற்றுச் சுவடியில் உள்ள சில வரலாற்றுத் தன்மையை ஏற்றுக் கொள்கிறார்கள்.[7](pp18 and 311)[8]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Guan, Kwa Chong (2019). "Chapter 1". Seven Hundred Years: A History of Singapore (in ஆங்கிலம்).
  2. Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. ISBN 9780824803681.
  3. Johns, A. H. (1964). "The Role of Structural Organisation and Myth in Javanese Historiography". The Journal of Asian Studies 24 (1): 91–99. doi:10.2307/2050416. https://archive.org/details/sim_journal-of-asian-studies_1964-11_24_1/page/n92. 
  4. "Kertanagara | king of Indonesia". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 31 March 2021.
  5. Sastrawan, Wayan Jarrah (2020). "How to read a chronicle". Indonesia and the Malay World 48 (140): 2–23. doi:10.1080/13639811.2020.1701325. https://doi.org/10.1080/13639811.2020.1701325. 
  6. C. C. Berg. Het rijk van de vijfvoudige Buddha (Verhandelingen der Koninklijke Nederlandse Akademie van Wetenschappen, Afd. Letterkunde, vol. 69, no. 1) Amsterdam: N.V. Noord-Hollandsche Uitgevers Maatschappij, 1962
  7. Ricklefs, Merle Calvin (1993). A history of modern Indonesia since c. 1300 (2nd ed.). Stanford University Press / Macmillans. ISBN 978-0-8047-2195-0.
  8. J.J. Ras, 2001, Sacral kingship in Java. In: Marijke J. Klokke and Karel R. van Kooij (eds.), Fruits of inspiration. Studies in honour of Prof. J.G. de Casparis, pp. 373-388. Groningen: Egbert Forsten, 2001. [Gonda Indological Studies 11.] பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-6980-137-X

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராரத்தோன்&oldid=4234008" இலிருந்து மீள்விக்கப்பட்டது