உள்ளடக்கத்துக்குச் செல்

பாராமதி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாராமதி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனை
Government Medical College & General Hospital, Baramati
Other name
பாராமதி அரசு மருத்துவக் கல்லூரி
வகைபொது
மாநில அரசு நிதி ஒதுக்கீடு
உருவாக்கம்2019
Academic affiliation
மகாராட்டிர சுகாதார அறிவியல்
துறைத்தலைவர்மருத்துவர் சந்திரகாந்து பி மாசுகே[1]
பட்ட மாணவர்கள்100
அமைவிடம், ,
வளாகம்கிராமப்புறம்
27 acres [2]
இணையதளம்www.gmcbaramati.org

பாராமதி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனை (Government Medical College & General Hospital, Baramati) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்திலுள்ள பாராமதி நகரத்தில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாகும். இக்கல்லூரி 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பாராமதி அரசு மருத்துவக் கல்லூரி நாசிக்கிலுள்ள மகாராட்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவக் கல்விக்காக நிறுவப்பட்ட இந்திய மருத்துவக் கழகமும் இக்கல்லூரியை அங்கீகரித்துள்ளது.[3]

தற்போது பாராமதி அரசு மருத்துவக் கல்லூரியில் சுமார் 100 மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவப் படிப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்லூரியில் ஐந்து தளங்களும் வாகன நிறுத்துமிடமும் உள்ளது. பொது மருத்துவமனையில் 21 வார்டுகள் மற்றும் 13 அறுவைச் சிகிச்சை அரங்குகள் உள்ளன.[4]

கல்லூரி மற்றும் பொது மருத்துவமனைக்கு மகாராட்டிரா அரசாங்கம் நிதியளிக்கிறது.

அமைவிடம்

[தொகு]

மருத்துவக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனை மகாராட்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாராமதியின் மகாராட்டிரா தொழில் வளர்ச்சிக் கழகப் பகுதிக்கு அருகில் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் சந்திப்பு தவுண்டு சந்திப்பு ஆகும். அதே சமயம் பாராமதி இரயில் நிலையமும் அருகிலுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் புனே பன்னாட்டு விமான நிலையம் ஆகும்.

சேர்க்கை

[தொகு]

மே 2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய மருத்துவக் கழகம் ஒப்புதல் அளித்த பிறகு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை 2019 ஆம் ஆண்டில் முதல் முறையாகத் தொடங்கியது.

தற்போது, இக்கல்லூரியில் 100 மாணவர் சேர்க்கை திறன் உள்ளது. மாணவர்களுக்கான மொத்த இடங்களில், 15% அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 85% மாநில ஒதுக்கீட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Faculty". பார்க்கப்பட்ட நாள் 2019-10-14.
  2. "Team ready for Baramati Medical College". Lokmat. பார்க்கப்பட்ட நாள் 2019-10-14.
  3. "List of College Teaching MBBS | MCI India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-14.
  4. "About | Government Medical College, Baramati". www.gmcbaramati.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-14.