உள்ளடக்கத்துக்குச் செல்

பாராபார்மால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாராபார்மால்டிகைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பல்லாக்சிமெத்திலீன்
இனங்காட்டிகள்
30525-89-4 Y
ChemSpider இல்லை N
பப்கெம் 24898648
பண்புகள்
OH(CH2O)nH (n = 8 - 100)
தோற்றம் வெண்மைநிற படிகத் திண்மம்
அடர்த்தி 1.42 கி•செ,மீ−3 (25 °செல்சியசில்)
உருகுநிலை 120 °C (248 °F; 393 K)
குறைவு
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford MSDS
ஈயூ வகைப்பாடு நச்சு (T); அரிக்கும் (C)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பாராபார்மால்டிகைடு (Paraformaldehyde) ஒரு சிறிய பல்லாக்சி மெத்திலீனாகும். இதுவொரு பல்லசிட்டால் சேர்மமாகும். 8 முதல் 100 பார்மால்டிகைடு அலகுகளை மீச்சேர்ம இணைவு எண்ணாக கொண்ட அளவில் பார்மால்டிகைடு பலபடியாக்கல் வினைமூலம் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது. பாராபார்மால்டிகைடு பொதுவாக சிறிதளவு பார்மால்டிகைடின் நெடியைப் பெற்றிருக்கும்.

தயாரிப்பு[தொகு]

நீர்த்த பார்மால்டிகைடு கரைசல்களை குளிர்ச்சியான இடங்களில் சேமித்து வைத்திருந்தால் மெல்ல மெல்ல வெண்மைநிற வீழ்படிவாக பாராபார்மால்டிகைடு உருவாகிறது. பொதுவாக பார்மலினில் மிகச்சிறிதளவிலேயே பார்மால்டிகைடு ஒற்றைப்படிகள் காணப்படும். இவற்றில் பெரும்பாலானவை குறுகிய சங்கிலி பல்பார்மால்டிகைடுகளாக உருவாகின்றன. சிறிதளவு மெத்தனாலை ஒரு நிலைநிறுத்தியாகச் சேர்ப்பதால் பெரும்பாலும் பலபடியாதல் விரிவை கட்டுப்படுத்தலாம்.

வினைகள்[தொகு]

பாராபார்மால்டிகைடை உலர் காற்றில் நன்கு சூடுபடுத்துவதன் மூலம் பலபடிநீக்கம் செய்து பார்மால்டிகைடு வாயுவாக மாற்ற முடியும் [1]. வெப்பம் அல்லது காரத்தின் முன்னிலையில் இவ்வாயுவை நீரில் கரைத்து பர்மல்டிகைடு கரைசலாகவும் தயாரித்துக் கொள்ளலாம். நுண்ணோக்கியியல், திசுவியல் ஆய்வுகளில் பயன்படும் தூய்மையான பார்மால்டிகைடு கரைசலை இம்முறையில் தயாரிக்கலாம். பாராபார்மால்டிகைடை உலர்காற்றில் சூடுபடுத்தும்போது உருவாகும் பார்மால்டிகைடு வாயு தீப்பிடித்து எரியும்.

பயன்கள்[தொகு]

தூய்மையான பார்மால்டிகைடு கரைசல் ஒரு புகையூட்டியாகவும், களைக்கொல்லியாகவும், தொற்றுநீக்கியாகவும், நிலைநிறுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. நீண்டசங்கிலி பல்லாக்சிமெத்திலீன்கள் வெப்பநெகிழிகளாகப் பயன்படுகின்றன. இவற்றை டெல்ரின் எனப்படும் பல்லாக்சிமெத்திலீன் நெகிழிகள் என்று அழைக்கிறார்கள். இவை பல்நோய் தடுப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன[2].

பாராபார்மால்டிகைடை ஒரு நிலைநிறுத்தியாகப் பயன்படுத்த இயலாது. இதை பல்படிநீக்கம் செய்து பார்மால்டிகைடு கரைசலாக்கியே பயன்படுத்தமுடியும். செயற்கை உயிரணு வளர்ப்பில் 4% பார்மால்டிகைடு கரைசல் பயன்படுத்தப்படுகிறது. சில புரோட்டீன்களை டி.என்.ஏ. உடன் பிணைக்கவும் பாராபார்மால்டிகைடு பயன்படுகிறது. டி.என்.ஏ.வின் எந்தப் பகுதியில் சிலவகை புரோட்டீன்கள் இணைந்துள்ளன என்பதை தீர்மானிக்க உதவும் ஒரு நுட்பமாக இம்முறை கருதப்படுகிறது.

நச்சுத்தன்மை[தொகு]

ஒரு பார்மால்டிகைடை வெளியிடும் முகவராக இருப்பதால் இது ஒரு புற்றுநோய் ஊக்கியாக இருக்கும் சாத்தியம் உள்ளது[3]. வாய்வழியாக எலிகளுக்கு கொடுக்கும்போது இதனுயிர் கொல்லும் அளவு 592 மி.கி / கிலோகிராம் ஆகும்[4]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Yates, J (1973). "Adsorption and decomposition of formaldehyde on tungsten (100) and (111) crystal planes". Journal of Catalysis 30 (2): 260. doi:10.1016/0021-9517(73)90073-0. 
  2. http://www.dentalwatch.org/questionable/sargenti/overview.html
  3. Cogliano, Vincent; Grosse, Yann; Baan, Robert; Straif, Kurt; Secretan, Béatrice; Ghissassi, Fatiha El (September 2004). "Advice on formaldehyde and glycol ethers". The Lancet Oncology 5 (9): 528. doi:10.1016/S1470-2045(04)01562-1. http://www.sciencedirect.com/science/article/pii/S1470204504015621. பார்த்த நாள்: 27 October 2015. 
  4. "MSDS - 158127 SAFETY DATA SHEET - Paraformaldehyde". SIGMA-ALDRICH. பார்க்கப்பட்ட நாள் 17 February 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராபார்மால்டிகைடு&oldid=3390874" இலிருந்து மீள்விக்கப்பட்டது