பாரத பெட்ரோலியம் மும்பை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
தோற்றம்
பாரத பெட்ரோலியம் மும்பை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Bharat Petroleum Mumbai Refinery), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத் தலைநகரான மும்பையின் வடலா கிழக்கு பகுதியில் செயல்படும் பாறைநெய் தூய்விப்பாலை ஆகும். இது பாரத பெட்ரோலியம் நிறுவனத்தால் சனவரி 1955ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1]
இவ்வாலை துவக்கத்தில் ஆண்டிற்கு 5.25 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்தது. இவ்வாலையை நவீனப்படுத்திற்கு பிறகு ஆண்டிற்கு 12 மில்லியன் டன் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு, நெய்தை, கற்கரி, எரிநெய், நேப்தா, அசுபால்ட்டு, கந்தகம், வானூர்தி எரிபொருள், எரிநெய் (fuel oil), மசகுநெய் (Lubricant Oil), செயற்கை உரங்கள் தார், மெழுகு, மற்றும் நெகிழி தயாரிக்க தேவையான பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது