பாரத் கியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரத ஞானம்
Bharath Gyan
நிறுவனர்டி.கே.ஹரி மற்றும் ஹேமா ஹரி
வலைத்தளம்www.bharathgyan.com

பாரதத்தின் ஞானம் என்ற பொருள் கொண்ட பாரத் கியான்(Bharath Gyan) பண்டைய இந்தியாவின் ஞானங்களையும் அவற்றின் உலகளாவிய தொடர்புகளையும், இன்றைய அறிவியல், பகுத்தறிவு ஆகிய அறிவுத்துறைகளின் ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தில் வைத்துத் தொகுக்கும் ஓர் ஆய்வு அமைப்பாகும்.[1] டி.கே.ஹரி மற்றும் ஹேமா ஹரி, கணவனும் மனைவியுமாகிய இந்த இருவர், இந்தக் கருத்தாக்கத்தை உருவாக்கியவர்களும், தங்களது அயராத உழைப்பின் மூலம் பண்டைய இந்திய நூல்களில் பொதிந்து கிடக்கும் அறிவுத் தரவுகளை வெளிக்கொணர்ந்து அதை இந்தியர்களுக்கும் மற்றும் வெளி நாட்டவருக்கும் கிடைக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள்.[2] புத்தகங்களை பதிப்பிப்பதோடு கூட,[3][4][5][6][7][8][9] இவ்விருவரும் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளில், தாங்கள் திரட்டிய அறிவுத் தகவல்களை. பல்-ஊடகத் துணையுடன் சொற்பொழிவுகளாகப் பகிர்கின்றனர்.[2][10] பாரத ஞானம், இந்திய நாகரிகத்தின் 100க்கும் மேற்பட்ட அம்சங்களை, பல்வேறு நாடுகளில் வசிக்கும், பாரம்பரிய அறிஞர்கள் மற்றும் அறிவியலாளர்களுடன் ஒருங்கிணைந்து ஆராய்ந்துள்ளது. அந்த அறிஞர்களுள் சிலர் பின்வருமாறு; ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் இல் அறிவியல் அறிஞராக இருந்த, மறைந்த எஸ்.ஆர்.ராவ்(சிகாரிபுரா ரங்கநாத ராவ்), கடல் தொல்லியலாளர், வரலாற்று வானியல் அறிஞர் புஷ்கர் பட்னாகர்.[11][4][5][9][12][13]தங்கள் அமெரிக்கத் தொடர்புகளில் ஒருவரான மைல்ஸ் பாயிண்டெக்ஸ்டெர்(Miles Poindexter) உடைய அவதானிப்புகளின் தொகுப்பான அயர் இன்காஸ் (Ayar-Incas) ஐப் பயன்படுத்திக்கொண்டதோடு,[14] பேரான் அலெக்சாண்டெர் வோன் ஹம்போல்ட்(Baron Alexander von Humboldt), டோனல்ட் அலெக்சாண்டெர் மெகென்சி(Donald Alexander Mackenzie), கோர்டன் எக்ஹோம்(Gordon Ekholm) [15] சர் எட்வர்ட் பர்ணெட் டெய்லர்(Sir Edward Burnett Tylor), பால் கிர்சாப்(Paul Kirchoff), வயல்லெட் டீ லூக்(Viollet De Luc),[16] அரிசியோஸ் நுனெஸ் டோஸ் சேன்தோஸ்(Arysios Nunes Dos Santos)[17] விக்டர் வுல்ப்கான் வோன் ஹேகென்(Victor Wolfgan Von Hagen).

இந்திய தொல் வரலாறு குறித்த பாரத ஞானம் அமைப்பின் ஆராய்ச்சிகள் எதுவும் சக ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுவெளியில் தகவல் இல்லை.[சான்று தேவை]

பாரத் கியான் ஒரு லாப நோக்கமற்ற ஆராய்ச்சி நிறுவனம். [18]

ஆங்கிலத்தில் பதிப்பித்துள்ள நூல்கள்[19][தொகு]

  • பாரதம் என்னும் தர அடையாளம்-தொகுதி-1-இந்தியாவில் பொருள் தயாரிப்பு (Brand Bharat-Vol1-Made In India)
  • பாரதம் என்னும் தர அடையாளம்-தொகுதி-2-இந்தியாவில் வேர் கொண்டிருப்பவை (Brand Bharat-Vol-2-Roots In India)
  • பாரதம் என்னும் தர அடையாளம்-தொகுதி-3-இந்தியாவின் தனித்துவம் (Brand Bharat-Vol-3-Unique to India)
  • பாரதம் என்னும் தர அடையாளம்-தொகுதி-4-இந்தியா உலகிற்கு முன்னோடியாக விளங்குபவை (Brand Bharat-Vol-4-Leads From India)
  • பாரதம் என்னும் தர அடையாளம்-தொகுதி-5- இந்தியாவின் எதிர்காலம் (Brand Bharat-Vol-5-Future From India)
  • பழைய தவறான நம்பிக்கைகளை உடைத்தல்- தொகுதி-1- நமது அடையாளம் குறித்து (Breaking The Myths-V-1-About Identity)
  • பழைய தவறான நம்பிக்கைகளை உடைத்தல்- தொகுதி-2- நமது சமுதாயம் குறித்து (Breaking The Myths-V-2-About Society)
  • பழைய தவறான நம்பிக்கைகளை உடைத்தல்- தொகுதி-3- நமது செழிப்பு குறித்து (Breaking The Myths-V-3-About Prosperity)
  • பழைய தவறான நம்பிக்கைகளை உடைத்தல்- தொகுதி-4- நமது திறன் குறித்து (Breaking The Myths-V-4-About Ability)
  • வரலாற்று கிருஷ்ணர்- தொகுதி-1
  • வரலாற்று கிருஷ்ணர்- தொகுதி-2
  • வரலாற்று கிருஷ்ணர்- தொகுதி-3
  • வரலாற்று ராமர்
  • இந்தியவுடனான ஜப்பான்
  • இந்தியா யூ திருப்பம்
  • பிரபஞ்ச உருவாக்கத்தின் விஞ்ஞானம்
  • சிவ தத்துவத்தை அறிதல்
  • இலங்கையில் ராமாயணம்
  • அயோத்யா போரும் அமைதியும்
  • தெலுங்குத் தாய்
  • 2009 இன் மூன்று கிரகணங்கள்

References[தொகு]

  1. Swahilya (4 September 2008). "Exploring the Many Faces of Bharat". • The New Indian Express Chennai Edition. 
  2. 2.0 2.1 Anupama Shekar (4 March 2007). "India in the eyes of Bharathgyan". City Express, Chennai edition. 
  3. Special correspondent (10 March 2014). "Deliving deep into telugu culture". Chennai. http://www.thehindu.com/news/cities/chennai/delving-deep-into-telugu-culture/article5767684.ece. 
  4. 4.0 4.1 "Ram was 39 years old when he killed Ravana". Rediff. 20 November 2007. http://www.rediff.com/news/2007/nov/20inter.htm. பார்த்த நாள்: 9 November 2018. 
  5. 5.0 5.1 Sunit Bezbaroowa & Arvind Joshi. "Lord Ram was born in 5114 BC". Times News network. Archived from the original on 2013-10-30. பார்க்கப்பட்ட நாள் 2020-06-22.
  6. Akshatha Shetty (6 November 2012). "What is the purpose of our existence?". ENS Bangalore. 
  7. Express News Service. "Bringing back the glory of India". The new Indian express.
  8. R. Devarajan (1 August 2011). "plunder of the past and loot of the present". the hindu. http://www.thehindu.com/books/the-plunder-of-the-past-the-loot-of-the-present/article2314131.ece. 
  9. 9.0 9.1 Pod Universal edition158. "Doomsday Phobia - Whether world will end on 21st December 2012 as per Mayan Calendar?".{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  10. puthiya thalaimurai, puthiya thalaimurai. "indian historic congress response to PM statements". www.tamiltvshows.net. puthiya thalaimuria tv. Archived from the original on 4 January 2015. பார்க்கப்பட்ட நாள் 1 January 2015.
  11. Hema vijay (1 January 2014). "history matters". the hindu. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/history-matters/article5522782.ece. 
  12. "Rama was born on January 10, 5114 BC, Says researcher". Sunday Express Bangalore edition. 18 November 2007. 
  13. bhatnagar, pushkar. "dating the era of lord rama".
  14. [1], The Journal of the Polynesian society.
  15. [2][தொடர்பிழந்த இணைப்பு], curator emeritus Gordon Ekholm.
  16. [3], romancing the maya.
  17. [4], Dravidians of South India reached before Columbus.
  18. ST Correspondent (13 October 2013). "Navaratri is a time to honour women". Sakal Times. http://www.sakaaltimes.com/NewsDetails.aspx?NewsId=5150050833632908418&SectionId=5171561142064258099&SectionName=Pune&NewsDate=20131013&NewsTitle=%25E2%2580%2598Navaratri%20is%20a%20time%20to%20honour%20women%25E2%2580%2599. 
  19. https://bharathgyan.com/historical-rama/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்_கியான்&oldid=3562864" இலிருந்து மீள்விக்கப்பட்டது