பாரதி (நடிகை)
பாரதி விஷ்ணுவர்தன் | |
---|---|
பிறப்பு | பாரதிதேவி 15 ஆகத்து 1950 மைசூர் மாநிலம் (தற்போது கருநாடகம்), இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை, பின்னணிப் பாடகி, இணை இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1966 – தற்போது வரை |
பெற்றோர் | தந்தை : இராமச்சந்திரராவ் தாயார் : பத்ராவதி |
வாழ்க்கைத் துணை | விஷ்ணுவர்தன் (1975 – 2009;அவரது இறப்பு வரை) |
பிள்ளைகள் | கீர்த்தி, சந்தனா |
விருதுகள் | பத்மசிறீ (2017) |
பாரதி விஷ்ணுவர்தன் (பிறப்பு:15 ஆகத்து 1950)[1] ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் விஷ்ணுவர்தனின் மனைவியும் ஆவார்.[2] இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த திரைப்படங்களில் கன்னட மொழித் திரைப்படங்களே அதிகமாகும். இவர் அப்போது கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையான சரோஜாதேவியின் முகசாயலில் இருந்தார் என்றும் கூறப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
இவர் இந்தியாவின், மைசூர் மாநிலத்தில் (தற்போது கருநாடகம்) பிறந்தார். இவரது இயற்பெயர் பாரதிதேவி ஆகும். இவர் புகழ்பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் விஷ்ணுவர்தனை 1975, பிப்ரவரி 27 அன்று பெங்களூரில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கீர்த்தி, சந்தனா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் விஷ்ணுவர்தன் 2009, திசம்பர் 30 அன்று காலமானார்.[3]
நடித்த திரைப்படங்கள்[தொகு]
தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Bharathi Vishnuvardhan: Shining on the silver screen for five decades". The Times of India. 26 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kumar,, GS (2014-08-18). "Bharathi Vishnuvardhan: Shining on the silver screen for five decades". Times of India.
- ↑ time2/ Vishnuvardhan Death Check
|url=
value (உதவி), Indian Express, 9 September 2012 அன்று பார்க்கப்பட்டது